தண்ணீர் தொட்டி அமைக்க வழிமுறைகள்

24 ஜனவரி 2024   05:30 AM 24 அக்டோபர் 2018   10:43 AM


பொதுவாக, தனி வீடுகளில், 9 அங்குலத்தில், 5 அடி உயரத்துக்கு சுவர் எழுப்பி, தண்ணீர் தொட்டி கட்டுவது வழக்கமாக உள்ளது. ஆனால், அதிக குடியிருப்புகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகளில், பெரிய அளவில் தண்ணீர் தொட்டி கட்ட வேண்டும். அடிப்படை கட்டுமான வழிமுறைகள் தண்ணீர் தொட்டி அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில், முதலில் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும்.

 

அடித்தளம் அமைத்த பின், தொட்டியின் வடிவத்துக்கு ஏற்ப வட்டம், சதுரம் அல்லது செவ்வகத்தில் தயாரிக்கப்பட்ட கம்பி கூடுகள அமைக்க வேண்டும். இந்த கூடுகளின் இருபுறமும் கலவையை தடுத்து நிறுத்துவதற்கான தடுப்புகள ஏற்படுத்த வேண்டும்.

 

பொதுவாக, கான்கிரீட் தளம் அமைப்பதில் பின்பற்றப்படும் சென்ட்ரிங் பணியுடன், இந்த கம்பி கூடுகளில், கம்பிகளுடன் இரும்பு வலையையும் சேர்த்து பயன்படுத்துவது நல்லது.


இதன் பின், சென்ட்ரிங் கூட்டுக்குள். கால் அங்குல ஜல்லிகள கொண்டு, 1:2 என்ற விகிதத்தில் தயாரிக்கப்பட்ட கான்கிரீட் கலவையை கொட்ட வேண்டும். கலவை அனைத்து இடங்களிலும் சென்று சேர்ந்து விட்டதை கம்பிகளால், குத்தி உறுதி செய்ய வேண்டும்.

 

பூச்சு வேலை
மேலும் இத்தகைய கலவை கொட்டும் போது, நீர்க்கசிவு தடுப்புக்கான ரசாயன கலவைகçeயும் கட்டுமான பொறியாளர் பரிந்துரை அடிப்படையில் சேர்க்கலாம். அப்போது தான் வலு குறைவான இடங்களில் நீர்க்கசிவு ஏற்படுவது தடுக்கப்படும்.
இந்த நிலையில் கட்டுமான த்தை, ஏழு நாட்களுக்கு நீராற்ற வேண்டும். பின், 1:3 என்ற விகிதத்தில் தயாரிக்கப்பட்ட கலவையை கொண்டு, பூச்சு வேலை மேற்கொள்ள வேண்டும்.

 

பூச்சு வேலையின் போது, தொட்டிக்குள் தண்ணீர் வருவது, வெளியேறுவது, உபரிநீர் வடிகால், சுத்தம் செய்ய ஆள் இறங்கும் வழி ஆகியவற்றுக்கான வசதிகள உறுதிபடுத்த வேண்டும்.
இதில், குழாய்கள் இணைக்கப்படும் பகுதிகளில், கூடுதல் கவனம் செலுத்தி, கசிவுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்e வேண்டும். கட்டடத்தின் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி கட்டடத்தின் தென் மேற்கு மூலையில் அமைக்கப்படவேண்டும். வடகிழக்கு வட மேற்கு தென்கிழக்கு மூலையில் கண்டிப்பாக வரக் கூடாது.


பொறியாளரின் மேற்பார்வை தேவை

வீடு கட்டுவதற்கான பிரதான பணியில் பொறியாளரை தவிர்க்க கூடாது என்ற அஷீவுரை, எவ்வளவு உண்மையோ அதே நிலையில், மேல் நிலை தண்ணீர் தொட்டி கட்டுவதில் பொறியாளரின் வழிகாட்டுதல்கள் அவசியம் இருக்க வேண்டும்.

ஒரு அறையை கட்டுவதை காட்டிலும், ஒரு தண்ணீர் தொட்டி கட்டும் போது, அeவீடுகளும், கட்டுமான பொருட்கள் பயன்படுத்துவதிலும், கட்டுமான பணியிலும் பல மடங்கு துல்லிய தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

கான்கிரீட்டை பயன்படுத்தி, கட்டுவேலை செய்யப்போவது என்னவோ கொத்தனார் தான் என்றாலும், அதற்கான அடிப்படை அளவுகள வரையறுப்பது, அந்த தொட்டியால் கட்டடத்தின் மீது ஏற்படும் கூடுதல் சுமை போன்ற விவரங்கள பார்க்க பொறியாளர் தான் வந்தாக வேண்டும்.

 

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067530