கரி இழைகளும் கட்டிடப் பொருளாகலாம்

24 ஜனவரி 2024   05:30 AM 24 அக்டோபர் 2018   10:33 AM


கட்டுமானத்திற்குப் பயன்படுத்தக் கூடிய பொருட்கள் புதிது புதிதாய் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது கார்பன் ஃபைர் என்று சொல்லப்படும் கரி இழைகள். இதனைப் பிற கட்டுமானப் பொருட்களுடன் கலந்தே பயன்படுத்துகிறார்கள். கரி இழைகள் பல்வேறு நல்ல பண்புகளைக் கொண்டிருக்கின்றன. நல்ல விறைப்புத் தன்மை. உறுதி. குறைந்த அளவு எடை. வேதிப் பொருட்களை எதிர்த்துத் தாக்குப் பிடித்து நிற்கும் திறன். வெப்ப நிலை

மாறுபாடுகளைத் தாங்கும் தன்மை. குறைந்த அளவே வெப்பத்தால் விரிவடையும் பண்பு. இப்படிப் பல நல்ல குணங்கள் இருப்பதால்தான் கரி இழைகளைக் கட்டுமானத்திற்குத் தேர்வு செய்கிறார்கள்.

 

தனித் தன்மை

இரும்பைக் காட்டிலும் இது ஐந்து மடங்கு வலுக் கொண்டது. ஆனால் இரும்பின் எடையுடன் ஒப்பிடும்போது மூன்ஷீல் ஒரு பங்கு அளவுக்கே இருக்கக் கூடியது. தற்போது கிடைக்கக் கூடிய கட்டுமானப் பொருட்களில் கரி இழைதான் மிக மிகச் சிறந்தது என்று சொன்னால் அது மிகையல்ல.

 

எப்படிப் பார்ப்பது?

கரி இழை என்பது ஒரு தொகுப்பு. பல இழைகளால் ஆகிய கற்றை. இந்தக் கற்றையில் பல ஆயிரக்கணக்கான இழைகள் இடம் பெற்றிருக்கும். இதில் ஒரேயயாரு குழலை மட்டும் எடுத்துப் பார்த்தோம் என்றால் அதன் குறுக்களவு 5 முதல் 8 மைக்ரோமீட்டர் வரை இருக்கும். இது முழுக்க முழுக்கக் கரியால் ஆனதுதான். சுத்தமான கரியின் வடிவம் கிராபைட் எனப்படும். கரி இழைகள் இந்த ரகத்தைச் சேர்ந்தவை. குறைந்த அடர்த்தி கொண்டவை. வெப்பத்தால் விரிவடையும் தன்மை மிகவும் குறைவாக இருக்கக் கூடியவை. வெப்பத்தால்நீளவாக்கில் நீட்சி அடையும் தன்மையைக் காட்டிலும் குறுகுவதே இதன் இயல்பு.

 

தயாரிப்பு முறை

கரி இழைகளைத் தயாரிப்பதற்கு காலிஅக்ரிரைட்ரைல் என்ற பான் முறை அல்லது பிட்ச் முறை என்று இரண்டு வழிகள் இருக்கின்றன. பான் முறை என்பதில் கரி இழைகள் ஒரு சரம் போல் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதற்கு ஆக்ஸிஜனைச் செலுத்திக் கரி அணுக்களைப் பிரிப்பார்கள். வெப்பமூட்டுவதும் இதற்கு அவசிய
மாகும். பிட்ச் முறை என்பதில் கிராபைட் இழைகளை ஒரு சிறிய வாய் வழியாகச் சூடான நிலையில் செலுத்திப் பிழிந்தெடுப்பதைப் போன்ற முறையில் தயாரிப்பார்கள்.

 

கட்டுமானப் பன்மங்கள்
கரி இழைகளைக் கொண்டு வலுவூட்டும் வகையில் உருவாக்கப்படும் கட்டுமானப் பொருட்களைக் கார்பன் ஃபைபர் ரீஇன்ஃபோர்ஸ்ட் பாலிமர்ஸ் என்று குறிப்பிடுவார்கள். கார்பன் ஃபைபர் ரீஇன்ஃபோர்ஸ்ட் பிளாஸ்டிக் என்றும் இவற்றை அழைப்பது உண்டு.

 

வடிவம்

கரி இழைகளைத் தாள் வடிவிலும் தயாரிக்கலாம். இதற்குச் சில வகைப் பிசின்களைப் பயன்படுத்துவார்கள். உயர் வெப்ப நிலையில் கரி இழைகளை ஓரளவு உருக்கிப் பிசின்களால் பிடிமானம் ஏற்படுத்தப்பட்டு கரித் தாள்களை உருவாக்குவது வழக்கம்.
இப்படி தயாரிக்கப்பட்ட தாள்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அச்சுக்களுக்கிடையே செலுத்தி அதிக வெப்ப நிலையில் உருக வைத்து, பிசின்களைக் கொண்டு ஒட்டும்படி செய்து வேண்டிய வடிவில் கரி இழைப்பொருட்களைத் தயாரிப்பது உண்டு. எபாக்ஸி வகைப் பிசின்கள் இதற்குப் பெரிதும் பயன்படுத்தப்படுவது நடைமுறையில் உள்ளது. பாலிமர் அல்லாத பிற பொருட்களைக் கொண்டும் கரி இழைகளைக் கற்றைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். பாலியயஸ்டர், வினைல் எஸ்டர், நைலான் போன்றவற்றை இதற்குப் பயன்படுத்துவார்கள். குறிப்பிட்ட வடிவில் அமையப்பட்ட சட்டம் என்னும் விதத்தில் கரி இழைகளை இடம் பெறச் செய்வதும் நடக்கும்.
தேர்ந்தெடுக்கப்படும் வழிமுறை, பயன்படுத்தப்படும் ஒட்டுப்பொருட்கள், படலங்கள் அடுக்கப்படும் முறை ஆகியவற்றைப் பொறுத்துக் கட்டுமானக் கரி இழைகளின் தன்மையும் பயன்பாடும் வேறுபடும்.

 

நன்மைகள்

வேறு பொருட்களில் கிடைக்காத அளவுக்கு உறுதியைப் பெறலாம். அரிப்பிற்கெதிராக உறுதியாக நீடித்து நிற்கும்.
குறைந்த அடர்த்தி. குறைந்த எடை. குறைந்த கன அளவு.ஈரத்தன்மையால் பாதிப்படையாத பண்பு.மோதல்களைத் தாங்கும் திறன்.இத்தகைய பல பண்புகள் காரணமாகக் கரி இழைகள் விரும்பித் தேர்வு செய்யப்படுகின்றன.இதன் நெகிழ் தன்மை இரும்பை விடச் சிறந்ததாக இருக்கிறது. உறுதியிலும் அப்படியே. கன மீட்டருக்கு 1800 கிலோகிராம் என்பது விரும்பத்தக்க அடர்த்தியாகும். வேதிப்பொருட்களால் இது பாதிப்படைவதில்லை. 
பாலங்கள், கட்டடங்கள், குகைகள், புகைபோக்கிகள், மின் கம்பங்கள், சிறு பெட்டி வடிவப் பாலங்கள் போன்றவற்றைக் கட்டுவதற்குக் கரி இழைகளைப் பெரும்பாலும் பயன்படுத்தலாம். அண்மைக்காலங்களில் கரிஇழை களைப் பல பழுதுபார்ப்பு வேலைகளுக்கும் பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

 

பிற பயன்பாடுகள்

கான்கிரீட்டை மேலும் வலுவுள்ளதாக ஆக்குவதற்கு இது சிக்கனமான வழியாக இருக்கும்.


கட்டுவேலைகளையும் இதைக் கொண்டு உறுதிப்படுத்தலாம். இரும்பு, வார்ப்பிரும்பு, மரம் போன்றவற்றால் ஆகிய கட்டுமானப் பகுதிகளை உறுதிப்படுத்துவதற்கும் கரி இழைகளைப் பயன்படுத்தலாம்.


ஏற்கனவே உள்ள கட்டுமானங்களை மேலும் வலுவாக்கவும் பயன்படுத்த முடியும். சீரமைப்பு, பழுதுபார்ப்புத் தேவைகளுக்கும் வைத்துக் கொள்ளலாம். இரும்பிற்கு மாற்றாகவும் பயன்படுத்த முடியும்.


பாலங்களின் தாங்கிகள், உத்தரங்கள், தகடுகள், கட்டட உத்தரங்கள், துVண்கள் போன்ற வற்றிலும் கரி இழைகளை உபயோகிக்கலாம். முன்பே கட்டப்பட்டு, தற்போது வலுவூட்டம் செய்யப்பட வேண்டிய கட்டுமானங்களுக்கும் கரி இழைகளைப் பயன்படுத்தலாம்.
உலகில் உள்ள பாலங்களில் கால்வாசி எண்ணிக்கையிலானவை பழுதுபட்ட நிலையில் இருக்கக் கூடியவை. இதற்காக அவற்றை முற்ஷீலுமாகப் பயன்படுத்தாமல் விட முடியாது. அவற்றைச் சிறந்த முறையில் மேலும் அதிககாலம் பயன்படுத்துவதற்குக் கரி இழைகளைக் கொண்டு செப்பனிடுவது சிறப்பான மாற்று வழியாகும்.

 

பழுதுபட்ட நிலையில் உள்ள கட்டுமானங்களை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டுவதற்கு ஆகும் செலவுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், கரி இழைகளைக் கொண்டு பழுதுபார்ப்பது எளிதாக இருக்கும்.சாதாரணமாக ஒரு பாலம் 25 முதல் 40 ஆண்டுகள் உழைக்கக் கூடியதாக இருக்கும். அதன் உருவாக்கத்தில் இரும்பு பயன்படுத்தப்பட்டு இருக்குமானால் இந்த ஆயுட்காலம் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம். இத்தகைய பாலங்கள் விரைவில் பயனை இழந்துவிடாமல் செய்வதற்குக் கரி இழைகளால் பழுதுபார்க்கலாம்.


வேலைகளை எளிதாகச் செய்து முடித்துவிடலாம். குறித்த நேரத்தில் கொடுத்துவிடலாம். குறைந்த எடை. அதிக உறுதி. 
எல்லாப் பயன்பாடுகளுக்கும் ஏற்றதாக அமையும்.

 

சுற்றி வைத்தும் பாதுகாக்கலாம்
சுவர்கள்,பாலங்கள் போன்ற வற்றின் மீது கரி இழைத்தாள்களைச் சுற்றி வைப்பதும் நல்ல பாதுகாப்பு நடவடிக்கையாக அமையும். நில நடுக்கம் போன்ற இடர்கள் ஏற்படும் போது கட்டுமானப் பகுதிகள் நொறுங்கிவிடாமல் இருப்பதற்கும் இது ஏற்றது. அடிக்கடி நிலநடுக்கம் தாக்கக்கூடிய பகுதிகளில் உள்ள கட்டுமானங்களின் ஆயுளை நீட்டிப்பதற்கு இதுவே சிறந்த, சிக்கன
மான வழிமுறையாகும். கான்கிரீட் தாங்கிகள், தூண்கள், உத்தரங்கள், தலைப்புகள், வளைவுகள் ஆகியவற்றில் பழுது ஏற்பட்டிருந்தால் அவற்றைச் சரி செய்வதற்கும் கரி இழைகளைப் பயன்படுத்துவதே உத்தமம்.


புதிய பழுதுபார்ப்பு உத்திஅடுக்கடுக்காகக் கரி இழைத் தாள்களை அடுக்குவது. குச்சி வடிவில் செலுத்துவது. ஈரப்படுத்திப் போர்த்துவது. இவை எல்லாமே புதிய,
நவீன பழுதுபார்ப்பு உத்திகளாகும். இந்த வகை நடவடிக்கைகள் பெரிதும் பிரபலமாகி வருகின்றன.செலவுச் சிக்கனம், சீக்கிரம் முடியும் வேலை, ஆய்வு செய்வதில் எளிமை என பல நன்மைகள் இதன் மூலம் கிடைக்கின்றன.

 

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067558