உலகின் முதல் வட்ட வடிவக் கட்டிடம் அல்டார் தலைமை அலுவலக கட்டிடம், அபுதாபி

24 ஜனவரி 2024   05:30 AM 24 அக்டோபர் 2018   10:27 AM


 

உள் கட்டமைப்பும், கட்டிடங்களும்தான் தனது பொருளாதார குறியீடு என்பதில் உறுதியாக இருப்பவை வளைகுடா நாடுகள். கடந்த 30 ஆண்டுகளில் அங்கு ஒவ்வொன்றாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களும் அதையே தான் உலகுக்குச் சொல்கின்றன. உலக அளவில் ஒப்பிடுகையில் தொழிற்நுட்பம், பொறியியல் அறிவு,  மனித செல்வம் குறைந்த அளவில் கிடைக்கும் துபாய், செளதி அரேபியா, கத்தார், அபுதாபி, தோஹா போன்ற நாடுகள் 90% அந்நிய நாடுகளையே நம்பி இருக்கின்றன. அந்நிய நாடுகளின் துணையுடன் தனது சொந்த மண்ணில் அவை அற்புதம் நிகழ்த்துகின்றன.

 

அப்படியயாரு அற்புதமான கட்டிடம்தான் அபுதாபியில் கட்டப் பட்டிருக்கும் அல்டார் தலைமைச் செயலகம். மத்திய கிழக்கு ஆசியாவில் உள்ள கட்டிடங்களில் முழு வட்ட வடிவத்தில் கட்டப் பட்டிருக்கும் கட்டிடமான அல்டார் அலுவலகம் உலகெங்கும் உள்ள கட்டிடெங்களின் ஆர்க்கிடெக்சர் அழகிற்கும், கட்டிட வடிவமைப்பிற்கும் சிகரமென்றே சொல்லலாம்.

 

மாறுபட்ட வடிவமைப்பு, அதிக துல்லியம், பசுமை சார்ந்த கட்டுமானம், கட்டுமானப் பணியில் நேர்த்தி, விரைவு போன்ற கட்டுமான மேலாண்மை குறித்த அனைத்து விசயங்களுக்கும் பாடம் எடுக்கக் கூடியது அல்டார் வட்ட வடிவக் கட்டிடம் கட்டிட உருவாக்கம்

ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் மிகவும் புகழ்பெற்ற கட்டுமான நிறுவனம் அல்டார் பிராபர்டீஸ் ஆகும். 15க்கும் மேற்பட்ட நாடுகளில் இதற்கு கிளைகள் உண்டு. அந்நிறுவனம் தனது தலைமை அலுவலகக் கட்டிடத்தை அபுதாபியில் நிறுவ தீர்மானித்ததும், கட்டிட வடிவமைப்பு குறித்து பல கருத்தரங்குகளை நடத்தியது.
இறுதியாக கத்தாரின் MZ & Partners என்னும் ஆர்கிடெக்ட் நிறுவனம் வழிகாட்டிய வட்டவடிவத்தை தேர்ந்தெடுத்தது.


அபுதாபியின் புகழ்பெற்ற அல்ரஹா கடற்கரை அருகே இது அமையப்பட்டிருக்கிறது. இந்த கட்டிடம் உருவாகும்போதே அமெரிக்காவின் லீட் சான்றிதழ் பின்பற்றியே அமைக்கப்பட்டது.

ஆர்க்கிடெக்சர்

இரு வட்ட வடிவத் தட்டுக்கள் பூமியில் அருகருகே பொருத்தப்பட்டு இரண்டையும் நீளமான பட்டைக் கொண்டு இணைத்தால் எப்படி இருக்குமோ அதுதான் அல்டார் கட்டிடம்.ஸ்டீல், கண்ணாடி ஆகியவை பெருமளவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்த கட்டிடம் கிழக்கு மேற்காக அமைக்கப் பட்டிருப்பதால் கட்டிடத்தின் கிழக்கு பக்கத்தில் சூரிய உதயமும், மேற்குபக்கத்தில் சூரிய அஸ்தமனமும் ஒரே நாளில் கட்டிடத்தின் வெளிப்புற கண்ணாடிகளின் பிரதிபலிப்பு மூலமாக கண்டுகளிக்க முடியும்.

கட்டிட வடிவமைப்பு

அல்டார் கட்டிடத்தின் உயரம் 121 மீ ஆகும். அதாவது ஏறத்தாழ 400 அடி உயரமுடையது. 23 மாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டிடத்தின் அகலம் உயரத்தில் 10 மீட்டராகவும், கீழே செல்லச் செல்ல அகலம் விரிவடைந்து கொண்டே 36 மீட்டர் வரையிலும் இருக்கும். மொத்தம் 1,23,000 ச.மீ பரப்புடைய இந்த கட்டிடத்தில் 61,900 ச.மீ பரப்பு அலுவலகங்களுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தில் 1,20,000 பேர் புழங்க முடியும். 21 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய 14 மின் தூக்கிகள் மூலம் 600 பேர் பயணிக்க முடியும்.


வடிவமைப்பு மென்பொருள் உலகப் புகழ்பெற்ற கட்டிட வடிவமைப்பு மென்பொருளான பிம் மென்பொருள் (Building Information Modeling) துணைக்கொண்டு இக்கட்டிடம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. முப்பரிமாணத்தில் முழு கட்டிடத்தின் திட்ட வரை வினைக் காண உதவும் இந்த மென்பொருள் இப்புராஜெக்டின் 
திட்டமிடலுக்கு மிகவும் உதவிகரமாக இருந்திருக்கிறது.

 

கட்டிடப் பொருட்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட கண்ணாடி, ஸ்டீல், கான்கிரீட் போன்றவை இதற்கு பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. 6,400 டன் ஸ்டீல் இதற்கு பயன்படுத்தப் பட்டிருந்தாலும், கட்டிடத்தின் பிரம்மாண்டத்தைப் பார்த்தோமெனில் ஸ்டீல் பயன்பாடு குறைவு தான். 55,000 ச.மீ மரப்பலகைகள், 25,000 க்யூபிக் மீ கான்கிரீட், 64 சதுரஅடி அளவிலான 32,000 கண்ணாடி பேனல்கள் (25,000 ச.மீ). குறுக்கு உத்திரங்கள், படிகட்டுகள், கழிவறைகள் போன்றவை ப்ரீ ஃபேப்ரிகேட்முறையில் தயாரிக்கப்பட்டு பொருத்தப்பட்டவையாகும். இத்தனை சிறப்பம்சங்களுக்கு மேலான இன்னொரு விஷயமும் இந்த முழு கோள வடிவத்தில் உண்டு. இக்கட்டிடம் உருப்பெற உழைத்தவர்களில் 23% இந்தியர்கள்.

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...


ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு..8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067532