கட்டுமான வேலைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் சாதனங்கள் வரிசையில் நகிள் பூம் ட்ரக் லோடர் கிரேன்கள் பெரும் எண்ணிக்கையில் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றைப் பாதுகாப்பாகவும் சிக்கனமாகவும் எளிதாகவும் இயக்கலாம்.வாகனம் ஒன்றின் மேல் கிரேனைப் பொருத்துவது வழக்கமாகப் பின்பற்றப்படும் உத்திதான். இருப்பினும் கிரேனின் பகுதிகளை மடித்து, இயக்க முடிவது இந்த வகைக் கிரேனின் தனிச்சிறப்பு. 360 டிகிரி கோணத்திலும் இதை சுழற்ற முடியும் என்பது மற்ற வகைச் சாதனங்களில் கிடைக்காத ஒரு வசதி.
கட்டு வேலைகளைச் செய்ய வேண்டிய இடத்தில் ஏதேனும் குறுக்கீடுகள், தடைகள் இருக்குமானாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் வேலை செய்ய இவை ஏற்றவை. கட்டுமானப் பொருட்களை ஏற்றி, இறக்கும் வேலைகளை எளிதாகச் செய்ய முடியும். கிரேனின் பகுதிகளை வாகாக மடித்து. வாகனத்துடனேயே எடுத்துச் செல்ல முடிவதால் அதிகப்படி பளுவைக் கையாள்வது எளிதாகிறது. ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எளிதாக எடுத்துச் சென்று பயன்படுத்துவதும் சாத்தியமாகிறது. ஹைட்ராலிக் முறையிலான இயக்கம் எளிமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
கிடைமட்டநிலையில் நீண்ட தொலைவுகளில் வேலைகளை முடிப்பதற்கும் இது ஏற்றதாக இருக்கிறது. அதிக உறுதி கொண்ட எஃகினால் செய்யப்படும் பாகங்கள் பாதுகாப்பான இயக்கத்திற்கு உறுதி அளிக்கின்றன. கையாள முடிகிற அளவிற்கு மேல் பாரம் ஏற்றப்பட்டால் அதை உணர்ந்து, இயக்கத்தைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இதில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
சின்னஞ் சிறிய குறுகலான சந்துகளிலும் கூட இதைக் கொண்டு செல்வது எளிது.ஆண்டொன்றுக்கு இத்தகைய கிரேன்களின் தேவை 6 முதல் 8 ஆயிரம் வரை வளரக் கூடும் என்று கணித்திருக்கிறார்கள். பால்ஃபிங்கர், ஹியாப், ஹைவா போன்ற நிறுவனங்கள் இத்தகைய கிரேன்களைத் தயாரித்து அளிக்கின்றன.
ஒட்டுமொத்த கட்டிடப்பொருட்கள் மற்றும் கட்டிட உறுப்புகளை கையாளும் பணிகளில் உலகளவில் ஏறத்தாழ 90% சதவீதத்திற்கு நகிள் பூம் கிரேன்களே ஆட்சி செலுத்துகின்றன. ஆனால், இந்திய அளவில் பார்த்தோமெனில், பாரங்கள் கையாளும் வேலையை 25% சதவீதமே நகிள் பூம் கிரேன்கள் செய்கின்றன.
நகிள் பூம் கிரேன்களை தயாரிப்பதில் இந்தியாவில் முன்னணியில் உள்ள பால்ஃபிங்கர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுபாமாய்கோஷ் கூறுகையில், நிறைய கட்டுமான நிறுவனங்கள் இதுவரை தாம் பயன்படுத்தி வந்த P&C கிரேன்களுக்கு பதிலாக நகிள் பூம் கிரேன்களைப் பயன்படுத்தத் துவங்கியிருக்கின்றன. அதிக பாதுகாப்பு, துல்லியம், சுலபமாக கையாளுதல், நிறுவுவதற்கு எளிதாக இருப்பது, சிஷீய இடங்களிலும் பணிபுரியக்கூடியது, சாலைகளில் வேகமாக செல்லக் கூடியது, லாரிகளில் இலகுவாக ஏற்றக் கூடியது போன்ற பல காரணங்களால் இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது.
கட்டுமானத்துறை மட்டுமல்லாது அதனுடைய சார்பு துறைகளான செங்கல் தொழிற்சாலை, சுரங்க பணிகள் மற்றும் கனரக தொழிற்சாலைகள், கிடங்குகள், ஸ்க்ராப் யார்டுகள், ரயில்வே பணிகள் போன்ற பலவித பயன்பாடுகளுக்கும் நகிள் பூம் கிரேன்கள் பயன்படுத்தப் படுகின்றன. துறைமுகங்கள், கார்கோ போன்ற இடங்களில் நகிள் பூம் கிரேன்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுகின்றன.
அடுத்த மூன்று ஆண்டுகளில் நகிள் பூம் கிரேன்களின் பயன்பாடு 50 சதவீதமாக உயரும் என்பதில் ஆச்சர்யம் இல்லை என்கிறார் கோஷ். நகிள் பூம் கிரேன்களைப் பற்றி மேலும் அறிய,
PALFINGER Cranes India .Pvt. Ltd.
No.37, Varadarajapuram, Nazarathpet, Poonamallee, Chennai - 123,
Tel: +91 44 26496081/89
Email: sales-pci@palfinger.com
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067567
|