கட்டிடப் பணிகளை கண்காணிக்கும் போது..

24 ஜனவரி 2024   05:30 AM 24 அக்டோபர் 2018   10:21 AM


கட்டுமானப் பணிகளுக்கு தேவையான அளவு ஆட்கள் ஒவ்வொரு நாளும் இருக்கின்றார்களா? இல்லை என்றால் அவர்களை எங்கிருந்து வரவழைப்பது? அது சிக்கனமானதாக இருக்குமா? என்பதை திட்டப் பொறியாளர் நாள்தோறும் கண்காணிக்க வேண்டும்.

 

தொழிலாளர்கள் தங்கும் இடம் சுகாதாரமான முறையில் உள்ளதா? அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்கள்,வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? அவர்கள் தங்கி இருக்கும் இடம் பாதுகாப்புத் தன்மை கொண்டதாக உள்ளதா? மழைக்காலத்தில், வெயில் காலத்தில் போதிய முன் எச்சரிக்கை செய்யப்படும் வசதிகள் உள்ளதா? என்பதை முதற்கண் பார்க்க வேண்டும்.

 

கட்டுமானப் பணியாளர்களுக்குள் சண்டை சச்சரவு ஏற்படாதவாறு அவரவர்களுக்குத் தேவையான பணியை பிரித்துக் கொடுத்து அதற்கு தேவையான கருவிகளை கொடுத்து, அனைவரும் ஒற்றுமையுடன் பணிபுரிவதை கண்காணிக்க வேண்டும். மீறி சண்டை சச்சரவு ஏற்பட்டால் உடனுக்குடன் கலந்து பேசி, சமாதானம்செய்து பணி நடைபெறச் செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை பணியாளர்களை அழைத்துக்கொண்டு வெளியிடங்கள், அதாவது கோவில் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கு சென்று, அவர்களை சந்தோஷமாக இருக்க வைத்துவிட்டு வருவது கவலை மறந்து கடுமையாக உழைப்பதற்கு உதவும். உடல்நலக்குறைவுள்ளவர்களை எக்காரணம் கொண்டும் வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது.

 

பணிபுரிகின்ற அத்தனை பேரும் தலைக்கவசம் அணிந்துள்ளனரா? உயரமான இடத்தில் பணிபுரிபவர்கள், பெல்ட் கட்டி உள்ளனரா? சாரம் நல்ல முறையில் போடப்பட்டு உள்ளதா? உயரமான இடத்தில் நடந்து செல்ல, கைப்பிடி கம்பி கட்டப்பட்டு உள்ளதா? தேவையான வலை அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளதா? ஆட்கள் வேலைபுரியும் இடத்தில் மின் இணைப்பு பாதுகாப்புடன் இருக்கிறதா? லிஃப்ட் குழி மற்றும் லிஃப்ட் அப்ரேட் முதலானவை தகுந்த பாதுகாப்புடன் உள்ளதா? என்பதையும் கண்காணித்துக் கொள்ள வேண்டும். 


தொழிலாளர்களுக்கு போதிய ஓய்வு நேரம் கொடுத்து வேலை செய்யச் சொல்ல வேண்டும். தொடர்ந்து இரவு, பகலாக யாரையும் வேலை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது

 

ஒரு நபர், ஒரு நாளைக்கு எவ்வளவு வேலை செய்துள்ளார்? அவர் பெறும் கூலி என்ன? இரண்டையும் கணக்கிட்டு, அவர் சரியாக செய்கின்றாரா? இல்லையா? என்பதை அஷீந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவுக்குள், வேலையை முடித்த பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். பணியாளர்களுக்கு, பணிப்பாதுகாப்பு, அதாவது தொடர்ந்து வேலை இங்கே இருக்கும் என்கிற நம்பிக்கையை கொடுப்பது, அவர்கள் கவனம் சிதறாமைக்கு வழி வகுக்கும்.

 

கட்டுமானப்பணி
நாளை என்ன பணியைச் செய்யப்போகின்றோம்? அதற்கு தேவையானது என்னென்ன? அவை நம்மிடம் உள்ளதா? இல்லையா? இல்லையயன்றால் எப்படி ஏற்பாடு செய்வது? என்று ஒவ்வொரு நாளும் முன்னரே பட்டியலிட்டு, தயாராகிவிட வேண்டும். அப்போதுதான் தடங்கல் ஏதும் இல்லாமல், வெற்றிகரமாக பணி முடியும்.

 

உதாரணத்திற்கு, நாளை ரூஃப் கான்கிரீட் போட வேண்டும் என்றால், இன்று அந்த இடம் தயாராக இருக்க வேண்டும். அதாவது, பொறியாளர் வந்து, கம்பி, சென்டரிங்கை சரி பார்த்து, ஓகே சொல்லி இருக்க வேண்டும். கான்கிரீட் வேலைக்குத் தேவையான அளவு, ஜல்லி, சிமெண்ட், மணல், தண்ணீர், கலவை இயந்திரம் தயாராக வைத்திருக்க வேண்டும். கலவை இயந்திரம் இரண்டு வேண்டும்; ஒன்று பழுதானால், உடனே மற்றொன்றை பயன்படுத்த ஏதுவாக இருக்கும். அதுபோல் மின்சாரம் தடைபட்டால் அதற்கு மாற்று ஏற்பாடாக ஜெனரேட்டர் முதலானவை தயாராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால், மறுநாள் கான்கிரீட் பணி நடைபெறும்போது, அதன் தரத்திலே முழுமையாக கவனம் செலுத்த முடியும்.

 

இதே போன்று ஒவ்வொரு நாளும் அதன் இறுதி வரும்முன், மறுநாள் நடைபெற உள்ள பணி குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டியது அவசியம். 
காலநிலை திடீர் என மாற்றம் ஏற்படும்போது, அதாவது மழை அல்லது வெயில் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்போது, அதை சமாளிக்கத் தேவையான உபகரணங்களைப் பயன்படுத்தி, பணியின் தரத்தை எந்தவிதத்திலும் குறைக்காது பாதுகாக்கவேண்டும்.

 

கட்டுமானப் பணியின் தன்மையைப் பொறுத்து, அதற்கு பணி நடைபெற்ற முன்னும், பின்னும் எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் போதிய கவனம் செலுத்த வேண்டும். அதாவது, செங்கல் கட்டுமானம் என்றால் அது முடிந்த பின்பு தொடர்ந்து ஏழு நாட்கள் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதுபோல் கை கான்கிரீட் போடப்பட்டால், 24 மணி நேரத்திற்குப் பிறகு பாத்தி கட்டி, தண்ணீர் தேக்க வேண்டும். ரெடிமிக்ஸ் கான்கிரீட்டாக இருந்தால், ஒரு மணி நேரத்திலே அதை ஈரப்படுத்த வேண்டும் என்பது போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும். 


கட்டுமானப்பணிக்குத் தேவையான அளவு மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும்.

மீதி இருந்தால், அவற்றை உடனுக்குடன் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். பொருட்கள் அதிகம் வேஸ்ட் ஆகிவிடாதவாறு கவனமாகப் பணியை செய்யுமாறு வலியுறுத்த வேண்டும். ஒவ்வொரு வேலை முடிந்த உடனே, அந்த வேலை சரியாக செய்யப்பட்டு உள்eதா? செய்த இடம் சுத்தமாக உள்eதா? செய்யப்பட்ட வேலைக்கு உண்டான அளவு பொருட்கள் செலவாகி உள்ளனவா? இல்லை, அதிகமாக உள்ளதா? என கணக்கிட்டு, உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்.

 

கட்டுமானப்பணி முடியும் காலஅeவு அட்டவணையில் குறிப்பிட்டு உள்ளபடி, ஒரு நாளில் எவ்வளவு பணி முடிந்து இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு நாளும் கண்காணித்து சரி செய்து கொண்டே வர வேண்டும். தாமதமாகும் பணியை விரைவாக முடிந்த பணிநாட்களை பயன்படுத்தி, அதை சரி செய்ய வேண்டும். குறிப்பிட்ட ஆறு மாதம் அல்லது ஒரு வருட பணி அளவு அட்டவணை கால அளவில் அதற்கு இடைப்பட்ட பணியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களில் சரி செய்துவிட வேண்டும். மொத்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட கால அளவில் பணி முடிந்தாக வேண்டும்.

 

பணியின் தரத்தில் எக்காரணத்தை முன்னிட்டும் குறைக்கச் சம்மதிக்கக் கூடாது. ஒவ்வொரு பணி முடிந்ததும் அதற்கு உண்டான கூலி, கால அeவு, அதை கண்காணித்து ஒப்புதல் அளித்த அதிகாரி கையயாப்பம் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும். இரவு பணி நடைபெறும்போது, போதிய மின்ஒளி வசதி, தகுந்த மேற்பார்வையாளரின் பேரிலேயே நடைபெற வேண்டும். பணியில் ஏற்படும் மாற்றங்களுக்கு, அதன் உரிமயாeர் அல்லது ஆர்க்கிடெக்டிடம் மாற்றம் செய்ததற்கான காரணம், அதற்கு உண்டான கூடுதல் பணச் செலவையும் எழுதி வாங்க வேண்டும். இதுபோன்ற பல்வேறுபட்ட வழிமுறையை கட்டுமானப்பணி நடைபெறும் ஒவ்வொரு நாளும் கண்காணிப்பது பொறியாளர்களின் கடமை.

 

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067536