கட்டிடங்கள் மனிதர்களுக்கு நோயைத் தருமா? என்ன ஷாக்காக இருக்கிறதா? ஆம், கட்டிடங்களுக்கு நீர்க்கசிவு, ஓதம், விரிசல், மண் உதிர்தல் போன்ற நோய்கள் ஏற்படுவதைப் போல கட்டிடங்களிலிருந்தும், நாம் பயன்படுத்துகிற பொருட்கள்,மின்சாதனங்களிடமிருந்தும் நமக்கு நோய்கள் வந்துகொண்டிருக்கின்றன என்பது பெரும்பாலோர் அறியாதது.
புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் சிலவற்றில் சிலருக்கு சில அசெளகரியங்கள் ஏற்படும். என்ன காரணம் என்பதே தெரியாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டு விடும்.கட்டிடங்களின் வடிவமைப்பு, தன்மை, அதன் பயன்பாடு ஆகியவற்றினால் ஏற்படும் இத்தகைய நோய்களை சிக் பில்டிங் சிண்ட்ரோம் ( Sick Building Syndrome என்று அழைக்கிறார்கள்.
அதே நேரத்தில் கட்டிடங்களின் மாசுபட்ட காற்றால் குறிப்பிட்ட நோய் உருவாகிறது என்பதைக் கண்டறிய முடிந்தால் அதை பில்டிங் ரிலேட்டட் இல்னெஸ் ( Building Related illness) என்கிறார்கள். ஆனால், இதுகுறித்து நம் நாட்டில் பெரிதாக பேசப்பட்டதில்லை. நம்மைப் பொறுத்தவரை புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்டால் அலர்ஜி ஏற்பட்டு தும்மல் வரும் அவ்வளவுதான்.
ஆனால், உலக அளவில் இதுகுறித்து நிறைய ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள்.
பசுமைக் கட்டிட தரச்சான்றிதழ் வழங்கும் நிறுவனம் ஒன்று உலகெங்கும் 180 நாடுகளில் 1800 புதிய மற்றும் பழைய வீடு, அலுவலக கட்டிடங்களை ஆராய்ந்து இண்டோர் ஏர் குவாலிட்டி, அதாவது அறைகளில் உலவும் காற்று சரி இல்லாததால்
மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களை பட்டியலிட்டு இருக்கிறது.
அங்கு வசிக்கும் மனிதர்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளுக்கு 30 சதவீதம் கட்டிடங்களில் நிலவும் சூழல், கட்டிடங்களின் வடிவமைப்பு, கட்டிடங்களின் பயன்பாடு ஆகியவையே காரணம் எனக் குறிப்பிட்டிருக்கிறது.கட்டுமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் கட்டிடப் பொருட்கள், வேதியியல்பொருட்கள் போன்றவை தவிர்க்கப்
பட வேண்டிய மூலப் பொருட்களால் உருவாகும்போது பெரிய பிரச்சனையாகிவிடுகிறது.
புத்தம் புது கட்டிடங்களுக்கு மட்டுமன்றி, பழைய கட்டிடங்களிலும் பராமரிப்புக் காரணமாக ஏற்படும் அசுத்தமான அறைக்காற்று மனிதனுக்கு பல்வகை நோய்களை ஏற்படுத்துகின்றனவாம்.
பெரும்பாலும் கட்டிடத்தை முறைப்படி பராமரிக்காததாலேயே இண்டோர் ஏர் குவாலிட்டி பாதிக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் அந்தக் கட்டிடத்தில் புழங்குவோரது தவறான நடவடிக்கைகளாலும், கட்டிடத்தின் வடிவமைப்பு சரியில்லாவிட்டாலும் காற்றின் தரம் பாதிப்புக்குள்ளாகும்.
கட்டிடம் தரும் நோய்களில் 95% அங்குள்ள அறைகளில் உலவும் காற்றின் மூலமாகவே ஏற்படுகிறது என்பதால் அறைக்காற்றை தர
மற்றது என்பதைக் கண்டறிவது அவசியம்.
குறிப்பிட்ட கட்டிடங்களில் வசிக்கும்போது, தலைவலி, கண், மூக்கு, தொண்டை போன்றவற்றில் எரிச்சல் போன்ற உடல் உபாதைகள் தீவிரமாக இருக்கும். தோலில் அரிப்பு காணப்படும். மயக்கம் வரக்கூடும். குமட்டும் உணர்வு ஏற்படும். எதிலும் கவனம் செலுத்த முடியாதபடி சோர்வு தோன்றலாம்.
இந்த அறிகுறிகளுக்கான முறையான காரணங்களைக் கண்டு பிடிப்பதும் சிரமமாக இருக்கும். இத்தகைய கட்டிடங்களிலிருந்து வெளியேறியவுடன் இந்த உபாதைகளும் நீங்கிவிடும். இத்தகைய பிரச்சனைகள் வேறு காரணங்களாலும் ஏற்படலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கட்டிடத்தின் அருகே உள்ள சுகாதாரக் கேடான சூழல் உடல்நிலையைப் பாதிக்கலாம். ஒவ்வாமை காரணமாக நோய்கள் உருவாகலாம். வேறு உளவியல் பிரச்சனைகளால் உடல் உபாதை உருவாகலாம். இவற்றையும் கட்டிடத்தால் ஏற்படுகிறது என முடிச்சிட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. ஆனாலும், மேற்கொண்ட நோய் அறிகுறிகள் கட்டிடத்தின் காற்றின் தரத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது என்பதைத்தான் இந்தக் கட்டுரையில் சொல்ல முயற்சிக்கிறோம்.
கட்டிட நோய்களுக்கான காரணங்கள்.
தற்போது உள்ள ஜன சமுத்திரத்தில் சாலைப் பார்த்த வீடாக இருந்தால்தான் பால்கனி, ஜன்னல்கள் வைக்க முடிகிறது. கட்டிடத்தின் பின்புறம், பக்கவாட்டுகளில் அக்கம் பக்கம் வீடுகளின் கட்டிடச் சுவர்கள் நெருக்கிக் கட்டப்படுகின்றன. இதனால் புதிய காற்று உள்ளே வராமல், கட்டிடச் சூழல் கெடுகிறது. மேலும், குளியலறை, கழிவறை தவறாக வடிவமைக்கப்படும் போது அது அங்கு வசிப்பவரை இம்சிக்க நேர்கிறது. கழிவறைக்கு அருகிலேயே சமையலறை மற்றும் உணவு அறைகள் அமைப்பதும் மறைமுக நோய் காரணியாகும்.
வீடுகளில் மட்டுமன்றி அலுவலக கட்டிடங்களும் மேற்கண்ட ஆபத்தைத் தரவல்லவை. சாதாரணமான அலுவலகக் கட்டிடத்தில் உள்ள ஒரு நபருக்கு ஒரு நிமிடத்திற்கு 15 கன அடி காற்று வெண்டிலேrனுக்குத் தேவை. ஆனால் பல கட்டிடங்களில் அதில் புழங்குவோரின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்குத் தேவைப்படும் இந்த வெண்டிலேrனுக்கான காற்று போதுமானதாக இல்லை என்கின்றனர்.
அறையில் பொருத்தப் பட்டிருக்கும் குளிர்சாதன வசதி அமைப்பு முறையாகக் காற்றை விநியோகிக்கவில்லை என்றால் கூட வெண்டிலேrன் பிரச்சனை ஏற்படும். பணியில் பிஸியாக இருக்கையில் இது நமக்குத் தெரிவதில்லை.
கட்டிடங்களின் பெயிண்ட், மரவேலைகளில் பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருட்கள், ஜெராக்ஸ் இயந்திரம் போன்றவை உமிழும் ஃபார்மால்டிஹைடு உள்ளிட்ட ஆவியாகக் கூடிய கரிமப்பொருள்கள் காரணமாகவும் பிரச்சனைகள் ஏற்படலாம். கேஸ் ஸ்டவ் போன்ற உபகரணங்கள் வெளியேற்றும் எரியும் தன்மை கொண்ட கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு போன்றவற்றையும் சிக்கலை உருவாக்கும்.
சில இடங்களில் கட்டிடத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள மாசுபாடான காற்று கட்டிடத்தில் புகுவதாலும் சிக்கல் உருவாகும். கட்டிடத்
தின் உள்ளே காணப்படும் தேங்கிய நீரால் உருவாகும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்ற
உயிரியல் மாசு காரணமாகவும் உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.
எப்படி சரி செய்வது?
கட்டிங்களின் உள்ளே உலவும் காற்றின் தரத்தைக் குஷீத்து அறிவதற்கு கட்டிடங்களில் முறையான பரிசோதனை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் கட்டிடத்தின் காற்றில் கலந்துள்ள வேதிப்பொருட்கள், ஈரப்பதம் தொடர்பாக ஆய்வகத்தில் சோதனை செய்துகொள்ள வேண்டும்.
கட்டிடத்தின் காற்றை மாசுபடுத்தும் சூழல் இருந்தால் அதை முதலில் சரி செய்து கொள்ள வேண்டும். ஆவியாகக்கூடிய கரிமப் பொருள்களை உமிழும் வேதிப்பொருள்களை முறையான வெண்டிலேrன் உள்ள இடத்திலேயே சேமித்து வைக்க வேண்டும்.
அவ்வாறு இல்லையயனில் காற்ஷீன் தரம் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. கட்டிடத்தின் வெண்டிலேrன் நிபுணர்கள் பரிந்துரைக்கும் அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்வதும் அவசியம். மேல்நாடுகளில் சில கட்டிடங்களில் உள்ளே வரும் காற்றைச் சுத்தப்படுத்தி அனுப்பும் அமைப்பை ஏற்படுத்தும் அளவிற்கு தொழிற்நுட்பம் வளர்ந்துள்ளது. இங்கும் அதற்கு நிகரான விழிப்புணர்வு மேலோங்க வேண்டும்.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067474
|