மத்திய அரசு கொண்டு வந்துள்ள ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்டம், இத்துறையில் பல் வேறு நிலைகளின் வெளிப்படை தன்னையை கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, புதிய குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களை முறையாக பதிவு செய்து, அவற்றை கண்காணிப்பட்தற்கான சட்ட அதிகாரம் கொண்ட ஆணையம் அமைக்கப்படும்.
இந்த ஆணையம், ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தும் நிறுவனத்தை முழுமையாக கண் காணிக்க வழி செய்யப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, வீடு வாங்குவோர் ஏமாற்றப்பட்டால், அதுகுறித்த புகார்களையும் இந்த ஆணையம் விசாரிக்க முடியும். மேலும், இதுதொடர்பான வழக்குகளை விசாரிக்க சிவில் நீதிமன்ற அதிகாரத்துடன் கூடிய தீர்ப்பாயம் அமைக்கப்பட உள்ளது.
இதில், கட்டுமான நிறுவனங்கள் செய்யும் தவறுகள் மட்டுமல்லாது, வீடு வாங்குவதாக கூறி கட்டுமான திட்டங்களில் குழப்பம் ஏற்படுத்துவோரை கட்டுப்படுத்தவும், இந்த சட்டத்தில் வழி செய்யப்பட்டு உள்ளது.
குறிப்பாக, ஒரு நிறுவனம் அறிவித்த திட்டத்தில் வீடு வாங்குவதாக முன்பதிவு செய்து, ஒப்பந்தம் போடும் நபர், குறிப்பிட்ட காலதவணைகளில் தொகைகளை செலுத்த வேண்டும். அவ்வாறு, தவணை தொகைகளை செலுத்த தவறும் நபர்கள் புகார் அளித்தால், அது குறித்தும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் விசாரிக்கும்.
தவணையும் செலுத்தாமல், விற்பனையும் கைவிடாமல் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்து வோருக்கு சிறை தண்டணை வழங்கும் அளவுக்கு இந்த சட்டத்தில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள் உள்ளன.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067462
|