வீடு கட்ட திட்டமிட்டு பணிகளை துவக்கும் போது, பாதுகாப்பு ரீதியாக, சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வீடு கட்டுவதற்கு, வரைபடம் தயார், திட்ட அனுமதி, கட்டட அனுமதி வாங்கியாகிவிட்டது: அப்புறம் என்ன, பணிகளைதுவக்க வேண்டியது தானே என்று நினைப்போம். இந்நிலையில், சில அடிப்படை விஷயங்களை கவனம் செலுத்த தவறினால், மிக தரமாக கட்டப்பட்ட கட்டடமும், வலுவிழக்க வாய்ப்பு உள்ளது.
பொதுவாக, நகரங்களை ஒட்டி விற்பனைக்கு வரும் மனைப்பிரிவுகள், சில ஆண்டுகள் முன் வரை, விவசாய நிலமாக இருந்திருக்கும்: ஈரப்பத களிமண் பகுதியாக அந்த நிலம் இருந்திருக்கும்.
இந்த இயல்பு காரணமாக, நிலத்தில் கரையான் போன்ற சிறிய உயிரினங்கள் உருவாகும். பூச்சி இனங்களில், வேறு எதற்கும் இல்லாத வகையில், கரையான்களுக்கு சில சிறப்பு தன்மைகள் உள்ளன. இதனால், இவை வளரும் போது, அந்த இடத்தில் எவ்வளவு உறுதியான மண்ணையும் அரித்துவிட வாய்ப்பு உள்ளது.மேலோட்டமாக பார்த்தால், இந்த நிலங்கள் வலுவாக இருப்பது போன்று தெரியும். ஆனால், அஸ்திவாரம் அமைத்து கட்டடம் கட்டினால், அடி ஆழத்தில் கரையான் சென்ற இடங்களில் ஏற்படும் வெற்றிடங்கள், மண்ணின் நிலைப்பு தன்மையை குலைத்துவிடும்.
நிலத்தில் அடித்தளத்திற்கும் கீழ் பகுதியிலும், அஸ்திவாரத்தின் கற்றுப்புற பகுதியிலும், மண்ணின் அடுக்குகளில் ஏற்படும் மாற்றங்கள், சரிவு போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். ஏனெனில், கரையான் அஸ்திவாரத்தில் மட்டுமல்லாது, தரை மட்ட பீம்கள் அமையும் இடம், நிலையடி அமையும் இடம், கதவு, ஜன்னல் நிலைகளை சுவரில் பொருத்தும் இடம் என, அனைத்து பகுதிகளிலும் கவனம் வைக்க வேண்டும்.
இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க, கட்டுமான பணிகளை துவக்கும் முன், மண் பரிசோதனை செய்யும் சமயத்தில், சம்பந்தப்பட்ட நிலத்தில், அடி ஆழத்தில் எத்தனை அடி ஆழத்தில் எத்தனை அடி வரை, கரையான் புற்று சென்றுள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இதற்கும், தனியாக நிறுவனங்கள் வந்துவிட்டன. “பெஸ்ட் கன்ட்ரோல்’ என்ற பெயரில் செயல்படும் இந்நிறுவனங்களை அகற்றலாம். இது போன்ற நிறூவனங்களை பயன்ப்டுத்த ஏற்படும் செலவை, கூடுதல் செலவாக பார்க்காமல், கட்டடத்தின் உறுதியை மட்டுமே கவனத்தில் வைத்து செயல்பட வேண்டும்
கவனத்திற்கு...
1. கான்கிரீட்டுக்கு, கரையான் போன்ற நுண்ணுயிர்களால், பாதிப்பு வராது என்று நினைத்து கொள்வது தவறு. கான்கிரீட் என்றாலும், தரை யுடன் தானே தொடர்பில் இருக்க வேண்டும்.
2. இதே கரையான் புற்றிலிருந்து தான், உணவுப் பொருட்களை கெட்டுப்போகாத வண்ணம் வைத்திருக்கும் நிலையான வெப்பநிலையை, உண்டு பண்ணிக் கொள்ளும் பயோமிமிக்ரி என்கிற தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உள்ளனர்
3. கரையான்கள் பாதிப்புள்ள இடங்களில், ப்ளிச்சிங் பவுடரை தெளித்து, தற்காலிகமாக பராமரிப்பது சரியான் தடுப்பு முறையல்ல
4. மரச்சாமான்களில் தோற்று இருந்தால், தொடர்ந்து பல மணி நேரம் வெயிலில் காய வைக்க வேண்டும். உப்பு, மிளகாய் தூள், வேப்பிலை போன்ற, தற்காலிக தீர்வுகள் வீட்டு மரச்சாமான்களுக்கு உண்டு.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067468
|