நிலங்கள் வருவாய் துறையால் நிர்வகிக்கப் பட்டாலும், அவற்றை முறையாக அளந்து, எல்லை குறிப்பது சர்வே எனப்படும் நில அளவை துறையிடம் மட்டுமெ உள்ளது.
குறிப்பிட்ட நிலத்தில் இருந்து, சிறு பகுதியைமட்டும் அதன் உரிமையாளர் வேறு நபருக்கு அலைப்பதாக இருந்தாலும், நில ஒப்படைப்பு, நில எடுப்பு, நில மாற்றம் மற்றும் இன்னும் பல காரணங்களால் நிலம் தேவைப்படும் போதும், அந்த நிலத்தை தனியே அளக்க வேண்டியிருக்கும், அதை முறையாக அளந்து, எல்லைகளை வரையறை செய்ய வேண்டும். இதற்கு, உரிமையாளர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தாலுக்க அலுவலக உத்தரவின் பேரில், சர்வேயர்கள், சம்பந்தப்பட்ட நிலத்தை அளந்து எல்லைகளை வரையறை செய்வர், இதற்கு அடையாளமாக எல்லை கற்கள் பதிக்கப்படும்.
பொதுவாக, புதிய மனைப் பிரிவுகள் குறிப்பிட்ட பகுதிகள் கைமாறும் போதும், இவ்வாறு சர்வே செய்து புதிய எல்லை கற்கள் வைப்பர். ஆனால், நம் நிலத்தின், நான்கு முனைகளிலும் கற்கள் நடப்பட்டிருக்கிறதா என்பதை மட்டும் பார்த்தால் போதுமானதால்ல, சர்வேயர் மூலம் துல்லியமாக அளக்கப்பட்டுள்ளதா என்பதை நிச்சயப்படுத்தி கொள்வது அவசியம்.மனையை வாங்கியவர்கள், பல ஆண்டுகள் அங்கு நேரில் செல்லாமல் இருந்தால், அக்கம் பக்கத்தில் யாராவது, எல்லை கற்களை எடுத்து செல்ல வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, எல்லை கற்கள் திருடப்பட்ட நிலையில், மனையின் உரிமையாளர் வீடு கட்டலாம் என்று வரும்போது, பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். மனையின் ஒரத்தில் செய்ய நினைக்கும் பணியை, அடுத்தவர்மனையில் செய்யும் நிலை ஏற்படும்.
இது போன்று எல்லை கல் காணாமல் போகும் நிலையில், அது குறித்து சம்பந்தப்பட்ட தாலுகா அலுவவலகம் வாயிலாக சர்வேயருக்கு விண்ணப்பிக்கலாம். அப்புதிய எல்லை கற்களை அமைக்க வேண்டும்.
இவ்வாறு புதிதாக மீண்டும் எல்லை கல் அமைக்கும்போது, சர்வேயருக்கு சட்ட ரீதியாக சில பணிகள் வரையறுக்கப்பட்டு உள்ளன. அதாவது, எல்லை கல் காணாமல் போனதை, கள ஆய்வு செய்து உறுதிப்படுத்துவார். அதன்பின், புதிய எல்லை கல் அமைப்பதற்கான செலவு தொகைக்கான, கேட்பு, “பில்’லை அவர் உருவாக்க வேண்டும். இந்த கேட்பு பில்லில் குறிப்பிடப்படும் தொகையை நிலத்தின் உரிமையாளரிடன் இருந்து வசூலிக்கலாம். பில்லின் நகல், சம்பந்தப்பட்ட கிராமத்தின் நிர்வாக அலுவலருக்கும், உரிமையாளௌவ்க்கும் வழங்கப்படும்
உங்கள் கவனத்திற்கு...
1. ஒரு இடம், 20 யஹக்டேருக்கு மேல் இருந்தால், சம்பந்தப்பட்ட நில அளவை புலத்தை உட்பிரிவு செய்வதற்கு பதிலாக, தனி எல்லைகள் குறிப்பிட்டு
புதிய எல்லைக்கற்களை நிறுவிக் கொள்வது நல்லது.
2. கிராம் நிர்வாக அலுவலர் புலன் ஆய்வு செய்து, நில அளவில் கற்கள் உள்ளனவா என மாதந்தோறும் அறிக்கை அனுப்ப வேண்டும்.
3. காணாமல் போன கற்களை புதுப்பிப்பதற்கு உடனேயே ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு ஆகும் செலவை நிலவரி பாக்கி போல வசூல் செய்வர்
4. சர்வே டிப்போவிலிருந்து கற்களை எடுக்கும் போது, டிப்போ பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பதையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். ஏதும் குளறுபடிகள் இருந்தால், அதற்கு கிராம நிர்வாக அலுவலரே பொறுப்பாவார்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067469
|