பிரதமர் நரேந்திர மோடி புத்தாண்டை ஒட்டி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், மூத்தக் குடிமக்கள் 10 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளும் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 8% வட்டி வழங்கப்படும். இதில் அதிகபட்சம் ரூ. 7.5 லட்சம் முதலீடு செய்யலாம் என அறிவித்தார். தற்போது ஐந்தாண்டு முதலீட்டுத் திட்டமான மூத்தக் குடிமக்கள் சேமிப்புத் திட்டத்துக்கு ஆண்டுக்கு 8.5% வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், 8% வட்டி லாபகரமான முதலீடா என நிதி ஆலோசகர் அனிதா பட் விளக்கி சொன்னார்.
“”தற்போதைய நிலையில், தபால் அலுவலக சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் மூன்று வட்டி விகிதம் மாற்ஷீ அளிக்கப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் வட்டியும் குறையவே அதிக வாய்ப்பு உள்ளது. சேமிப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 8.5% வட்டி வழங்கப்படுகிறது. இதில் ஒருவர் அதிகபட்சம் ரூ.15 லட்சம் முதலீடு செய்யலாம்.
அடுத்த ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தபால் அலுவலக சேமிப்புக்கான வட்டி விகிதம் நிச்சயம் 8 சதவிகிதத்தைவிட குறைவாகவெ இருக்கும். அந்த வகையில், 10 ஆண்டு கால நீண்ட முதலீட்டை விரும்பும் மூத்தக் குடிமக்கள் 10 ஆண்டுகளுக்கு 8% வட்டி என்கிற புதிய திட்டத்தில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். அடுத்த லாபம், ஏற்கெனவே மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் முழுமையாக ரூ.15 லட்சம் முதலீடு செய்திருப்பவர்கள். இப்போது ரூ.7.5 லட்சம் கூடுதலாக முதலீடு செய்ய முடியும் என்றார் நிதி ஆலோசகர் அனிதா பட் தேவை இருப்பவர்கள் பிரதமரின் புதிய திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067480
|