இதுகுறித்து வங்கி அதிகாரிகள் தெரிவித்த போது, ‘பிரதமர் நல்ல திட்டடங்களை அறிவித்திருக்கிறார். இந்தத் திட்டங்கள் நடைமுறைக்கு வருவதற்கு இன்னும் ஆறுமாதம் ஆகும். இந்தத் திட்டங்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவெடுப்பார்கள். தற்போது அறிவித்த திட்டம், ஏற்கெனவே இந்திரா ‘அவாஸ் யோஜனா’ என்ற பெயரில் இருந்த திட்டம்தான் இப்போது பெயர் மாறி இருக்கிறது. வட்டி விகிதங்கள் ஒன்ஷீரண்டு சதவிகிதம் மாஷீ இருக்கிறது. இந்தத் திட்டம் குறித்து மக்கள்தான் வங்கியில் சென்று கேட்டுப் பயன் பெற வேண்டும் ‘‘ என்கிறார்கள்.
நெல்லையில் வீடு கட்டுமானப் பணியினை மேற்கொண்டு வரும் சங்கர் என்பவர் இது குறித்து பேசும்போது, ‘எங்கள் பகுதியில் 1,200 சதுர அடி மனையில் 800 முதல் 900 சதுர அடி அளவுள்ள வீட்டையும், அதனுடன் சுற்றுச் சுவர், மின்சார இணைப்பு போன்றவற்றை எல்லாம் சேர்த்து வீடு கட்ட ரூ.12 முதல் ரூ.15 லட்சம் வரை செலவாகிறது. பிரதமரின் இந்தத் திட்டம் ஊரகப் பகுதியில் மாத வருமானம் பெறுபவர்கள் வங்கியில் கடனை வாங்கி வீடு வாங்க, கட்ட பயனுள்ளதாக இருக்கும் ‘‘ என்றார்.
ஆனால், இந்தப் புத்தாண்டுச் செய்தி பற்றிய போதுமான உத்தரவுகள் இன்னும் வங்கிகளின் வாசல்களுக்கு முழுவதுமாக இன்னும் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
பிரதமர் அறிவித்துள்ள வீட்டு மானியத்திட்டம் குறித்து பல்வேறு வங்கிகளை அணுகிய போது, ‘‘இதுகுறித்து எங்களுக்கு இதுவரை எந்த அரசாணையும் வரவில்லை. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் எங்களுக்கு அரசாணை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
அந்த அரசாணையில் வீட்டுக் கடன் மானியத்தைப் பெறுவதற்கான விதிமுறைகள் இடம்பெற்றிருக்கும். அதன் அடிப்படையில் தகுதியானவர்களுக்குக் கடன் வழங்குவோம்’’ என்றார்கள்.ஒவ்வொரு புத்தாண்டின் போதும், சொந்த வீடு பற்றிய கனவுகளைக் காணுவதை வழக்கமாகக் கொள்ளும் நடுத்தர மக்கள் இந்தக் கடனை வாங்கி, சொந்தமாக ஒரு வீட்டை உருவாக்கிக்கொள்ளலாமே! - நன்ஷீ நா.விகடன்
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067465
|