கட்டுமான வேலையை ஆரம்பிக்கும் போது போடப்படும் ஒப்பந்தத்திற்கு, எப்படி கட்டண செலவு உண்டோ, அதே போல் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் கட்டணம் உண்டு.
அடுக்குமாட்டி குடியிருப்புகளில் வீடு வாங்கும் போது போடப்படும் இந்த மாதிரியான ஒப்பந்தத்தில் மிக கவனமாய் இருக்க வேண்டியது, தனிவீடு கட்டும்போது இருக்க வேண்டிய அவசியத்தை விட கூடுதல் அவசியமாகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் வரை, இந்த ஒப்பந்தம் பெயரளவில் போடப்பட்டது. கட்டுமான நிறுவனம், கட்டட உரிமையாளர் என தற்போது, இரு தரப்பினருக்கும் இடையில் கட்டுமானத்தைப் பற்ஷீய நிபந்தனைகள், சட்டத்திட்டங்கள், கட்டணம், காலவரையறை என அனைத்தையும், ஒர் ஆவணமாக பதிவு செய்தாக வேண்டும் எபது கட்டாயமாக்
கப்பட்டு உள்ளது; இது வரவெற்கத்தக்கதும் கூட.
இந்த ஒப்பந்தத்தில் கட்டுமானத்திற்கான மொத்த செலவும், அதன் மதிப்பும் தெளிவாக குஷீப்பிடப்பட்டு இருக்க வேண்டும். அப்படி குறிப்பிடப்பட்டுள்ள தொகையில், 1 சதவீதத்திற்கு முத்திரைட்த் தீர்வும், 1 சதவீதம் பதிவு கட்டணமாகவும் வசூலிக்கப்படும். முறைப்படி இரு தரப்பினரும் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்று, பதிவு செப்ப வேண்கும்.
இப்படி பதிவு செய்தால் தான், இந்த ஒப்பந்ததிற்கு முழுமையான சட்ட அங்கீகாரம் கிடைக்கும். இரு தரப்பினரும் இது போல சட்டத்திட்டங்களுக்கு சம்மதிதே கையயழுத்திடுவர். பிற்காலத்தில், ஏதோ ஒரு தரப்பினர் இதை பின்பற்றாமலோ,மீறியோ நடந்தால் அடுத்த தரப்பினர் சட்ட நடவடிக்கை எடுக்க இது உதவும்.
ஒரு வேளை நிபந்தனைகளை மீறி நசந்தால், பாதிக்கப்பட்ட தரப்பு இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்ளலாம். இதற்காக, நிபந்தனை மீறி நடந்ததற்கான ஆதாரத்துடன், நேரிடையாக சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று, போடப்பட்டிருந்த கட்டு மான ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரலாம்.
இந்த நடவடிக்கைக்கு முன், தவறு செய்த தரப்பினருக்கு கடிதம் வாயிலாக, முன் எச்சரிக்கை தெரிவிக்க வேண்டும். அதன் பிறகேரத்து செய்யச் சொல்லி, இந்த தரப்பினரும் விண்ணப்பிக்க முடியும். இந்த கோரிக்கைக்கு முத்திரை தீர்வாக, 50 ரூபாய்; பதிவு கட்டணமாக, 50 ரூபாய் செலுத்த வேண்டும்.
சில அரசாங்க அலுவலக கட்டுமானப் பணிகள், ஒப்பந்தம் போட்டுள்ள ஒப்பந்ததாரர்களின் தரமான வேலையை மட்டும் கணக்கில் கொள்ளாமல் கால தாமதம் ஏற்பட்டாலும் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடும். 25 சதவீத பணிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் முடிந்திருந்தாலும், நிர்வாகம் பல முறை கொடுத்த எச்சரிக்கை கடிதத்திற்கு நடவடிக்கை இல்லையயன்றாலும், ஒப்பந்தத்தை ரத்து செய்ய இயலும்.
இப்படி, ஒப்பந்தம் ரத்தாவது அவ்வளவு எளிதானதும் அல்ல இரு தரப்பினருக்கு நல்லதும் அல்ல. கட்டுமான நிறுவனம் கட்டியிருக்கும் முன் வைப்பு தொகை, பின் வைப்பு தொகை, அதுவரை கட்டியதற்கான செலவு, வேலை, நேரம், பிரச்னைகள் என, எதுவுமே கணக்கில் கொள்ளப்படாது. இத்தனையும் கட்டுமான நிறுவனத்தின் நஷ்டக்கணக்கில் மட்டுமே சேரும்.
இதை கவனத்தில் வைத்தே, பல பெரிய நிறுவனங்கள் பணிக்கான ஒப்பந்தத்தை மிக கவனமாக கையாளும். இதே அளவு கவனம் கட்டட உரிமையாளர்களுக்கும் இருக்க வேண்டும்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067463
|