கட்டுமானவேலையில், பல்வேறு பொருட்கள் முக்கியமானதாய், அடிப்படையானதாய் கருதப்பட்டாலும், மிக முக்கியமாய், மிக அத்தியாவசியமான கருதப்பட்டு, கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது செங்கல் தான். சுவரின் வலிமை முக்கியமான இடத்தில் உள்ளது. செங்கல்லை பயன்படுத்தி கட்டுவேலை செய்வது என்பது, கட்டுமான பணியில் பெரும்பகுதியாக இருக்கும்.
செங்கல், பல்வேறு பொருட்கள் கலந்த கலவையாக உள்ளது. மனிதர்கள் கட்டுமான பணிகளை, முறைப்படுத்தி துவக்கிய காலம் முதல், செங்கல் அத்தியாவசிய பொருளாக உள்ளது. இன்றைய சூழலில், இன்டர்லாக் செங்கல்கள், ஸ்மார்ட் செங்கல்லுக்கான முக்கியத்துவம் அப்படியே தான் இருக்கிறது.
இத்துடன், பல்வேறு ரசாயன தன்மை கொண்ட பொருட்கள் சேர்ந்த கான்கிரீட் கலவையை பயன் படுத்தும் போது, இயல்பாகவே பல மாற்றங்கள் செங்கல் தன்மையில் ஏற்படும்.
கட்டுமான பணியில் செங்கற்களை அடுக்கிம் இடையிலும், மேல், கீழ் பகுதிகலில் கலவையை சேர்க்க வேண்டும். அப்போது தான், செங்கல் அடுக்கில் பினைப்பு ஏற்பட்டு சுவர் வலுவாகும்.
செங்கல்லை எந்த வரிசையில் அடுக்கி சுவர் எழுப்பினாலும், அதில் ஒவ்வொரு கல்லுக்கும் தனிப்பட்ட தாங்கு திறன், வலிமை இருக்கும். இதன் அடிப்படியில் தான், சுவரின் நிலைப்பு தன்மை அமையும். நல்ல தரமான முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு செங்கல், 35 கிலோ எடையை தாங்குவதாக இருக்க வேண்டும்.
செங்கல் சுவர் எழுப்ப தயாரிக்கப்படும் கான்கிரீட் கலவியில், சிமென்ட் அளவு அதிகமாக இருக்க வேண்டும். சிமென்ட் அதிகமாக இருந்தால் தான், அது உட்புறத்தில் வலுவவஐன் பினைப்பை ஏற்படுத்தும்.
சுவர் கட்டும் போது, ஒரே சமயத்தில் இவ்வளவு உயரம் தான், அதாவது ஒரு நாளைக்கு, ஐந்து அடி வரை தான் கட்ட வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. அதற்கு மேல் என்றால் தரம் குரைந்துவிடும். அது போன்று, செங்கல் சுவர் கட்டுமானத்தில் நீளத்துக்கும் கட்டுப்பாடு உண்டு.
வலுவாக கட்டுகிறோம் என்று, சீன பெருஞ்சுவர் போன்று செங்கல் சுவரை எழுப்ப முடியாது. குறைந்த பட்சம், 10 அடிக்கு ஒரு இடத்தில் தூண்கள் இருப்பது அவசியம் . செங்கல் சுவரின் மேல் பாதி நிலையில் இருந்து, ஹாலோ பிளாக், சாலிட் பிளாக் யபோன்றவற்றை பயன்படுத்துவது நல்லதல்ல. அது போன்று, தரையில் இருந்து ஹாலோ பிளாக்குகளை பயன்படுத்திவிட்டு, நடுவில் இருந்து செங்கல்லை பயன் படுத்தினாலும், சிக்கல் ஏற்படும் என்கின்றனர், கட்டுமான வல்லுனர்கள்.
கவனத்திற்கு....
1. ஒரு செங்கல்லின் எடை, 2.5 கிலோ முதல், 3 கிலோ வரை இருக்கவேண்டும்
2. செங்கற்களை நனைத்த பிரகே, கட்ட அனுமதிக்க வேண்டும்.
3. ஒவ்வொரு அடுக்காக கட்டும்போது, முடிவில் குத்து கல்லாக வைத்து கட்டப்ப்டுகிறதா என்பதை கண்காணிக்கவேண்டும்.
4. செங்கல் சுவருடன் காலம், பீம் போன்றவை இணைக்கும் போது, 6 அல்லது 8 எம்.எம்., கம்பி துளையிட்டு வளை வைத்து கட்டுதல் அவசியம்.
5. செங்கற்களை வைத்து சுவர் எழுப்பும் போது, இணைப்பு வரும் இடங்களில் எல்லாம், வெறும் கலவையை மட்டும் போட்டு நிரப்பாமல், கண்டிக்கல் உடைத்து போட்டு கட்ட வேண்டும்.
6. குறைந்த அளவில் வேக வைக்கப்படும் செங்கல்லை, அதன் நிறத்தை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். ஆனால், வீடு கட்டும் பலருக்கும் இதற்கான வழிமுறைகள் தெரியாது. இதனால், முழுமையாக வேக வைக்கப்படாத செங்கல் பயன்பாட்டுக்கு வந்துவிடுகிறது: கவனம் தேவை.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067461
|