கட்டடம் என்பது, கண்களுக்கு தெரியும் கட்டுமான பணிகள் மட்டுமல்ல, கன்களுக்கு புலப்படாத, பல வேலைகளின் இணைப்பு தான் ஒரு கட்டடம். அப்படி பார்க்கையில், செங்கல் சுவர் தெரியும். ஆனால், அந்த சுவரை எப்படி பதப்படுத்தி, நீண்ட காலம் வலுவோடு நிலை நிறுத்திக் கொள்வது என்பது, புலப்படாத அத்தியாவசியமான பணி. அப்படியான கட்டுமானத்தின் அங்கமாக விளங்கும் செங்கல் பயன்பட்டுத்தி, சுவர் எழுப்பும் போது, பல்வேறு அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். செங்கல் பயன்பாட்டில் சிறு குறைபாடு ஏற்பட்டாலும், அது ஒட்டு மொத்த கட்டடத்தின் நிலைப்பு தன்மையை பாதிக்கும்.
பொதுவாக, தயாரிப்பு ஆலை மற்றும் சூளைகளில், நன்கு வேக வைக்கப்படு, அதன்பின், வெயிலில் நன்கு காய வைக்கப்பட்ட பிறகே, செங்கல் கட்டுமான பணி களத்துக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு அனுப்பப்படும் செங்கல், அதிகளவில் தண்ணீரை உட் கிறக்கிக்கும் நிலையில் இருக்கும்.
இத்தகைய செங்கலை, சுவர் எழுப்ப அப்படியே பயன்படுத்தினால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். சுவர் கட்டி முடிக்கப் பட்ட சில வாரங்களிலேயே, மெல்லிய கோடு போன்று விரிசல் தலை காட்டும். இதை கருத்தில் வைத்து தான், கட்டு மான வேலைக்கு பயன்படுத்தும் முன், செங்கலை ஈரப்படுத்தும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால், அண்மைக்காலமாக, பல இடங்களில், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயம், தண்ணீர் தட்டுப்பாடு, பணியில் அனுபவம் இன்மை போன்ற காரணங்களால், செங்கற்களை ஈரமாக்குவதை பணியாளர்கள் தவிர்த்து விடுகின்றனர். இதனால், கட்டுமான வேலையில், கலவையில் இருக்கும் ஈரத்தை செங்கல் உறிஞ்சிக் கொள்ளும். இது தொடர்ந்தால், கட்டி முடிக்கப் பட்ட சில வாரங்களிலேயே சுவரில் விரிசல் ஏற்படுகிறது.
சுவர் எழுப்பும் வேலெயில், செங்கல்லை ஈரமாக்குவதுடன் நிற்காமல், கட்டி முடித்த பின், தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு நீராற்ற வேண்டும். அப்போது தான், செங்கல்லுக்கும் இடையே உறுதியான இணைப்பு ஏற்படும். அண்மைக்காலமாக, வெளி மாநில பணியாளர்களை அதிகளவில் கட்டுமான துறையினர் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு வரும் பணியாளர்களுக்கு, செங்கல் பயன்பாடு குறித்து முதலில் வகுப்பு எடுக்க வேண்டும்.
கவனத்திற்கு...
1. செங்கற்களை பயன்படுத்தி, சுவர் ஒரு அடி எழுப்பியவுடனேயே, கோணல் இல்லாமல் இருக்கிறதா என, சரி பார்த்து கொள்ள வேண்டும்
2. செங்கல் அணைத்தும், ஒரே நீளம், அகலம் இருக்கும்படி வாங்கி பயன்படுத்த வேண்டும், ஒரு செங்கல் நியம அளவு 65mm / 102.5mm X 215mm என்றும், 75mm X 112.5mm X 225mm என, சுவர் ஒன்றில் கட்டப்பட்ட பின்னரான தோற்ற அளவும் இருக்க வேண்டும்.
3. செங்கலின் மேல் பெயர் அச்சிடப்பட்டிருந்தால், அதை மேல் நோக்கி வைத்து தான் கலவை பூச வேண்டும்
4. ஒரு நாளைக்கு, 5 அடி உயரத்துக்கு மட்டும் தான், சுவர் எழுப்ப வேண்டும்.
5. கட்டடத்தின் விரிசலை தவிர்க்க, தினமும் நீராற்ற வேண்டும்: அதிலும் உப்பு தண்ணீரை தவிர்க்க வேண்டும்
6. அஸ்திவாரத்தின் மேல் மட்டத்தில் செங்க்கல்களுக்கு இடையில், கான்கிரீட் கலவையை சரியாக நிரப்புவது அவசியம்
7. நனைத்தவுடன், பிசுபிசுப்பு தன்மையுடன், மாவு போல ஆகிவிடுகிற கற்களை தவிர்க்க வேண்டும். இதில் எவ்வளவு நீராற்றினாலும் பயனில்லை.
- சொந்த வீடு மாத இதழின் பயனுள்ள பழைய கட்டுரைகளைப் படிக்கவும்.., ஆன் லைனில் புதிய சொந்த வீடு மாத இதழ்களைப் படிக்கவும் சந்தா செலுத்துங்கள்.....
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067472
|