எனக்கு மேல்தளம் வேணும்’, “எனக்கு கீழ் தளம் வேணும்’, “எனக்கு வீடு வடக்கு பாத்தாற்போல் இருக்கனுங்க’, “எனக்கு தெற்கு வாசல் தான் சரிப்பட்டு வரும்’. இப்படியயல்லாம் மாஷீமாஷீ எழுகிற வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை சமாளிக்க பில்டர்களுக்கு தனித்திறன் வேண்டும்.
எல்லோருக்கும் எப்படி மேல் தளம் கொடுக்க முடியும்? எல்லோருக்கும் எப்படி முதல் தளம் கொடுக்க முடியும்?
அதாவது, ஒரே அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ளவர்களிடையே, கீழ்த் தளங்களில் உள்ளவர்களுக்கும், மேல் தளங்களில் உள்ளவர் களுக்கும் இருப்பிட வேறு பாடுகள் உள்ளன. பணம் படைத்தவர்கள் , முதலில் ஃப்ளாட் புக் செய்தவர்கள் அடுக்கு மாடிக் குடியிருப் புகளிலேயே, மிகச் சிறந்த தளத்தைத் தேர்ந்தேடுத்துக் கொள்கிறார்கள்.
இந்தப் பிரச்சனைக்கு நுட்பமான தீர்வை தமது வடிவமைப்புத் திறன் வாயிலாக சொல்லியிருக்கிறார் தைவான் நாட்டு பொறியாளர் ஒருவர். அவர், இந்த ஏற்றத்தாழ்வுகளை குறைக்கும் விதத்தில், புதிய கட்டுமான உருவாக்கத்தை செய்திருக்கிறார்.
தைவானைச் சேர்ந்த டிசைனர் சன்குவோ, சான்ஃப்ரான்சிஸ்கோ அகாடமிக்காக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறார்.
27 மாடிகள் கொண்ட இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், வீடுகள் மேலும் கீழும் நகர்கின்றன. குடியிருப்பே 360 டிகிரிக்குச் சுழல்கிறது. கீழ்த்தளத்தில் உள்ளவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மேல் தளத்துக்குச் சென்று விடுவார்கள். மேல் தளத்தில் உள்ளவர்கள் கீழ்த்தளத்துக்கு வருவார்கள். இதன் மூலமாக எல்லோருக்கும் எல்லா தளங்களிலும் வசிக்கும் வாய்ப்பு சமமாகக் கிடைக்கும். நகரின் நான்கு திசைகளை ரசிக்கவும் முடியும்.
அதாவது, மொட்டைமாடியில் உள்ள பார்க்கிங் ஏரியாவிலிருந்து இறங்கும் கார் அக்கட்டடம் சுற்றி, சுற்ஷீ சுழல் பாதையில் இறங்குவது போல் வீடுகள் படிப்படியாக இறங்கும் வண்ணம் வடிவமைப்பு செய்யப்படுமாம். அதேபோன்று படிப்படியாக வீடுகள் ஏறத்துவங்கும்.
2030 வாக்கில்தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்பதால் இது, “சிறந்த எதிர்
கால கட்டட வடிவமைப்பு’ என பாராட்டுதலுக்கு உள்ளாகியுள்ளது.
பில்டர்ஸ்லைன் இதழிலிருந்து...
For Subscription pl call : 8825479234
www.buildersline.in
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067474
|