- பெங்களூரில் இயங்கி வரும் குட் எர்த் என்கிற அமைப்பு சுற்றுப்புறச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத புவி நட்பு (Planet Friendly) கட்டுமானங்களை உருவாக்குவதற்கு ஆலோசனை அளிக்கிறது. அதன் இயக்குநர்
திருமதி. நதாஷா ஐப் எழுதிய கட்டுரை இது.
நாம் எல்லோருமே நமக்கான கனவு வீட்டைக் கட்ட ஆசைபடுகிறோம். நமது வீடு அழகான வீடா? ஆடம்பர வீடா? அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வீடா? என்பதையயல்லாம் காட்டுகிற அக்கறை நமது வீடு சுற்றுசூழலுக்கு உகந்த வீடா என்பதில் காட்டுவதில்லை. அது பற்றி ய கூடுதல் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகிற வேலையை தான் எங்கள் நல்பூமி (Good Earth) அமைப்பு செய்து வருகிறது.
இது தான் பசுமைக் கட்டிடம் கான்சப்டில் இருக்கிற விrயம் ஆயிற்றே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் நல்பூமியின் இலக்கு பசுமை கட்டிடத்தையும் தாண்டியதாகும்.
அதாவது நீங்கள் ஒரு மனையை வாங்கி வீடு கட்டும் போது உங்களுக்கு ஏற்றாற் போல் அந்த மனையை மாற்றிக் கொண்டு வீடு கட்டுகிறீர்கள் அல்லவா?
நல்பூமியின் இலக்கு என்பது அந்த மனைக்கு ஏற்றாற் போல உங்கள் வீட்டை மாற்றி கட்டுவதாகும். உதாரணமாக ஒரு ஏக்கர் நிலம் வாங்கி பண்ணை வீடு கட்டுகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். ஆங்காங்கே உள்ள மரங்கள், பாறைகள் சிறு மணல் மேடுகள் புதர்கள், செடிகள் எல்லாவற்றையும் அகற்றி சமதள படுத்திவிட்டு தான் உங்களது வீட்டை பற்றி யோசிப்பீர்கள்.
ஆனால், நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால் மேற்கண்ட இயற்கை அடையாளங்கள் எதையும் அழிக்காமல் அதற்கேற்றாற் போல் வீடுகளை உருவாக்குங்கள் என்கிறோம்.
பசுமை வீடு என்கிற வார்த்தையே நாங்கள் சொல்வதில்லை. சுற்றுசூழலுக்கு உகந்த வீடு என்று தான் நாம் சொல்ல வேண்டும். ஒரு வீடு அது உருவாகும் போதும் சரி, அது இயங்கும் போதும் சரி, அந்த வீடு மனிதர்களால் நிரம்பும் போதும் சரி, சுற்றுப்புறச் சூழலுக்கும், இயற்கைக்கும் எவ்வித கேடு விளைவிக்கக் கூடியதாக இருத்தல் கூடாது. அதை தான் “புவி நட்பு வீடு’ எனச் சொல்ல முடியும். ஆங்கிலத்தில் பிளானட் ஃப்ரென்ட்லி ஹவுஸ்.
சரி இப்போது இது போன்ற வீட்டை உருவாக்குவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்.
1. வீட்டின் வடிவமைப்பு கண்கவர் தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்பதை தவிர்த்து இயற்கை ஒளி, மற்றும் காற்று வருவதற்கான வடிவமைப்பாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து செயல்படுங்கள்.
2. நீங்கள் பயன்படுத்தும் கட்டிடப் பொருள் ஒவ்வொன்றும் சுற்றுப்புறச் சூழலுக்கு கெடுப்பது அல்ல என்கிற உத்திரவாதத்துடன் பயன்படுத்துங்கள்.
3. தண்ணீர் முதல் களிமண் வரை கட்டிடப் பொருட்கள் அனைத்துமே இயற்கை மூலப்பொருட்கள் தான். அவற்றை வீணாக்காதீர்கள்.
4. சிமெண்ட், மணல், செங்கல், அலுமினியம், கண்ணாடி, மரம் போன்றவற்ஷீற்கு பதிலாக சேண்ட்விச் பேனல்கள், யூபிவிசி, பிவிசி கதவுகள் போன்றவை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
5. அதிக வீரியமிக்க ரசாயனங்கள், பெயிண்ட்டுகள் பயன்படுத்தக்கூடாது.
6. புவியின் வளங்கள் அனைவருக்கும் பொதுவானது. ஆகையால் தான் ஒவ்வொரு கட்டிடப் பொருளின் பயன்பாட்டினை குறைக்க வேண்டும் (utility). மறுபடி மறுபடி பயன்படுத்த வேண்டும் (Reuse) மறுசுழற்சி செய்ய வேண்டும் (Re Cycle).
7. இயற்கை மின்சாரமான சூரிய ஒளி மின்சாரத்தையும், காற்றாலை மின்சாரத்தையும் தயாரிக்கக் கூடிய மின்கலன்களை நிறுவ வேண்டும்.
8. வீட்டின் மேற்பரப்பிலும், சுற்றுப்பரப்பிலும் விழுகிற கடைசி மழைத்துளி நீர் வரை சேமிக்கும்படியான அமைப்பினை ஏற்படுத்த வேண்டும்.
9. வீட்டின் அறைகளில் உள்ள பல்வேறு ப்ளம்பிங் பணிகளில் நீரை சேமிக்கிற குறைவாக பயன்படுத்துகிற சாதனங்களை பொருத்தி இருக்க வேண்டும்.
10. வீட்டிலிருந்து அன்றாடம் வெளியேறுகிற கழிவுகள் மக்குபவை, மக்காதவை என்பவையாக பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டும்.
11. சுருக்கமாகச் சொல்வதெனில் இயற்கையை தொந்தரவு செய்யாத வகையில் உங்கள் வீட்டின் வடிவமைப்பு இருக்க வேண்டும்.சுற்றுசூழலுக்கு வீடு என்பது அது உருவாக்கப்படும்வரை மட்டுமே அல்ல.
அதில் வசிக்கும் மனிதர்களின் வாழ்வியல் முறையையும் பொறுத்து தான் அது புவிக்கு நட்பு வீடா என்பது தீர்மானிக்கப்படுகிறது. வழக்கமான கான்கிரீட் வீடாக அல்லாமல், பூமிக்கு நட்பாக ஒரு வீடு உருவானால் 100 மரங்கள் நட்டது போன்ற மகிழ்வை இந்த பூமி அடையும். நம்மை வாழ்த்தும்.
Further Details : 9686676504, 9945241616
பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து......
For Subscription pl call : 8825479234
www.buildersline.in
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067427
|