”இன்றைய சூழ்நிலையில் பொறியாளர்களுக்கு மிகவும் சவாலாக இருப்பது, கட்டடத்திற்கு பயன்படுத்தப்படும் கம்பிகள், கான்கிரீட் கலவை செய்த சில வருடங்களில் துரு பிடிப்பதாகும். இதற்கு காரணம், கான்கிரீட்டில் ஏற்படும் கன்ணுக்குத் தெரியாத மைக்ரோபோர்ஸ் என்ற நுண்துளைகளே. பல்வேறு ஆராய்ச்சிகளிலும், நடைமுறைகளிலும் நிரூபிக்கப்பட்ட இதற்கான அறிவியல் சான்றுகள் ஏராளமாக தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இதனை அனைத்து கான்கிரீட் வல்லுநர்களும் நன்கு அறிவர். ஒவ்வொருவரும் இதற்காக கடுமையான உழைத்து இந்தியாவில் உள்ள அனைத்து கட்டடங்களும் உலகத் தரத்திற்கு இணையாக அமைய ஆராய்ச்சிகள் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு. எளிமையான, மிக வலிமையான மூலப்பொருள் ஹை ஸ்ட்ரென்த் மைக்ரோசிலிக்கா என்று வளர்ந்த அறிவியல் நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. மைக்ரோ சிலிக்காவில் அதிக வலிமையுள்ள Reinforced fiber அமைந்துள்ளதே இதற்கு முக்கிய காரணம்.
கட்டடத்தின் உறுதியையும் நிலைப்பாட்டையும் அதிகாரிக்கும் பொருட்டு கான்கிரீட்ட்டால் உருவாக்கப்படும் சுற்றுச்சுவர்கள் ஃபைபர் மோல்டிங் உதவியுடன் உருவாக்கப்படுகின்றன. இதனால் இவை மிகவும் தரமானதாக இருக்கும். கட்டுமான செலவும் சிக்கனமானதாக இருக்கும். மேலும் குறுகிய காலத்தில் கட்டுமான பணியை முடித்துவிட இயலும். இந்த கட்டடத்திற்கும். மேலும் குறுகிய காலத்தில் கட்டுமான பணியை முடித்துவிட இயலும். இந்த கட்டடத்திற்கு பராமரிப்பு செலுவும் இருக்காது.
இந்த தொழில்நுட்ப அடிப்படையில் சுனாமி, பூகம்பத்தை தாங்கக்கூடிய பள்ளிக கூடங்களையும், குடியிருப்புகளைபும் பொறியாளர் திரு. அதிசயம் வேதமுத்து அவர்கள் கட்டியுள்ளார். இந்த கட்டடங்களை நமது முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.ஏனெனில் மைக்ரோ சிலிக்காவில் மட்டும்தான் அதிக வலிமை வாய்ந்த எந்த கால சூழ்நிலைகளையும் தாக்குப்பிடிக்கும் மைக்ரோ பார்டிகல்ஸ் உள்ளது.
கட்டுமானத்திற்குத் தேவையான முக்கிய பொருளான கான்கிரீட் பல்வேறு சுற்றுச்சூழல் நிலைகளில் தயாரிக்கப்படுகிறது. எனவே கான்கிரீட் சரியாக இருக்கிறதா இல்லையா என்பதை சோதித்துப்பார்க்க வேண்டியது மிக்வும் அவசியமாகும். கான்கிரீட் கலக்கப்பட்டு பசுமையாக இருக்கும் நிலையிலும் அது கட்டியாக இறுகிய நிலையிலும் அதன் தன்மை எப்படி இருக்கிறது என்பதை பரிசோதித்துப் பார்த்தல் வேண்டும்.
சாதாரணமாக, கலந்த நிலையில் பசுமையாக இருக்கும் கான்கிரீட்டின் தன்மையை சோதிப்பதற்கு கூம்பு கசிவு சோதனை செய்யப்படும். அதன் கலக்கும் தன்மையையும், பற்று தன்மையையும் தீர்மானிப்பதற்காக இந்த கசிவு சோதனை பயன்டுத்தப்படுகிறது.
இந்த கசிவு சோதனை மேற்கொள்ளவில்லை என்றால், இதன் கலக்கும் தன்மை மற்றும் இடும்நிலை எப்படி இருந்தாலும் அல்லது பயன்படுத்தும் கான்கிரீட் வகை எதுவாக இருந்தாலும் கசிவு சோதனை மேற்கொள்வது நல்லது. அதுவே பாய்வுக் கான்கிரீட்ட்டக இருக்குமானால், கசுவு சோதனைக்குப் பதில் கெட்டிப்புத் தன்மை சோதனை பயன்படுத்த வேண்டும்.
கெட்டிப்பு நிலையில் சோதித்துப் பாத்தல்அமுக்கத் திறனை கண்டறிவதற்காக கெட்டிப்பு கான்கிரீட் மீது சோதனை நடத்தப்படுகிறது.
கட்டுமானம் நடைபெறும் இடத்தில், தரமான சூழ்நிலைகளில் கியூபுகள் வார்க்கப்பட்டு, குறிப்பிட்ட நாட்கள் முடிந்த பின்பு கியூபுகள் சோதிக்கப்பட வேண்டும். சாதாரணமாக 7 முதல் 28 நாட்கள் வரை கால அளவு வழங்கப்படுகிறது.
கியூபுகள் தரமான நிலைகளில் தயாரிக்கப்பட்டு நீராற்றப்படுகின்றன. ஒரு சாம்பிள் டெஸ்ட் முடிவில் குறைந்தது 3 மாதிரிகள் அடங்கியதாக இருக்கும். 5 எம்3 கான்கிரீட்டிற்கு குறைந்தது ஒரு சாம்பிள் சோதனையிடப்பட வேண்டும்.
ஒவ்வொரு சோதனை முடிவிற்கும் உள்ள வேறுபாடு, சராசரியில் 15 விழுக்காட்டிற்கு மேல் இருக்கக்கூடாது. அதற்குமேல் இருக்குமானால், சாம்பிளின் சோதனை முடிவு செல்லத்தகாததாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். கான்கிரீட்டின் கட்டுமானத்திற்கு தோதான பல தன்மைகள் உள்ளன. இருப்புனும் கான்கிரீட்டின் குறைகளும் உள்ளன. எளிதில் உடையும் தன்மை, உடையா தன்மை, தேவுத் தன்மை, உள்ளுக்கௌள் நுண்ணிய விரிசல்கள் எனன் குறைகள் உள்ளன.
இதன் விளைவாக கட்டடங்களில் ஈரத்தாக்கம் ஏற்பட்டு ஆர்.சி.சி. கம்பிகள் துருப்பிடித்து அரிக்கப்படுகின்றன. இறுதியில் விரிசல் ஏற்பட்டு மொத்த கட்டடமும் சேதமடைய நேரிடுகிறது. இந்தப் பிரச்சனைகளிருந்து விடுபடுவதற்கென்றே சேலத்தில் உள்ள எக்ஸ்லண்ட் மினரல்ஸ் நிறுவனம் மைக்ரோ சிலிக்கா என்ற மூலப் பொருளை தயாரிக்கிறது. இது, மேற்சொன்ன எல்லா பிரச்சனைகளுக்குமே நம்பி பயன்படுத்தக்கூடிய தீர்வு ஆகும். கட்டிய பகுதியை நீராற்றும்போது உருவாகக் கூடிய நுண்ணிய சுருக்க விரிசல்கள் ஏற்படாமல் தடுத்து கட்டடத்தை மைக்ரோ சிலிக்கா பாதுகாக்கிறது. ஒவ்வொரு கிலோகிராம் மைக்ரோ சிலிக்காவிலும் லட்சக்கணக்கான ஃபைபர் ரீ இன்ஃபோர்ஸ்டு மூலக்கூறுகள் உள்ளன.
கான்கிரீட் கலவைகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் தனித்தனியே பிரியாமல் இணைந்து ஒரே சீராக இருக்க மைக்ரோ சிலிக்கா உதவுகிறது. சுருக்க விரிசல்கள் மற்றும் நுண்ணிய விரிசல்கள் ஏற்படாமல் கட்டுப்படுத்துகிறது. கான்கிரீட் தேய்வடைவதை தடுத்து பாதுகாக்கிறது. வளைவுத்திறன், அழுக்கத்திறன், இணக்கத்திறன் மற்றும் இழுவிசைத் திறனை அதிகரிக்கச் செய்கிறது. கான்கிரீட்டிற்குள் நீர் ஊடுருவாமல் தடுத்து உறுதியூட்டுவதற்கு சேர்க்கப்படும் கம்பிகள் துருப்பிடித்து அரிக்காமல் பாதுகாக்கிறது. கான்கிரீட்டின் ஆற்றல் ஈர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்கிறது.
பில்டரஸ் லைன் மாத இதழிலிருந்து ..
முழு இதழினையும் படிக்க.. www.buildersline.in
சந்தா செலுத்த .. 88254 79234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067414
|