கட்டிடங்களின் விதிகள் பற்றிய பொது அறிவு எப்படி மக்களுக்கு இன்னமும் பரவலாக அறியப்படாமல் இருக்கிறதோ, அப்படியேதான் ஒரு கட்டுமானத்தின் ஆயுள் குறித்த அறிவும் அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள்.
சென்னை பெரியமேட்டில் ஒரு நண்பரின் அலுவலகத்திற்கு சென்றிருந்தபோது, என்கண்ணில் தற்செயலாகப்பட்டது ஒரு ஐந்து மாடிக் கட்டடம். எப்படியும் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் தாண்டியிருக்கும்.
காரை உதிர்ந்து, பல இடங்களில் செங்கற்கள் பெயர்ந்து, தரைகள் மொத்தம் பெயர்ந்து போய், பராமரிப்பின்றி, குப்பையும் ஒட்டடையுமாக காட்சியளித்தது அக்கட்டடம். அந்த வீட்டின் பயங்கரத்தன்மை என்னை உள்ளே அழைத்தது. உள்ளே சென்றேன். எப்படியும் நான்கு கிரவுண்ட் மனை இருக்கும். 70க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள். அது வாழத் தகுதியற்ற வீடு என்பதற்கு சான்றாக பல அறைகள் காலியாகவே இருந்தன. மின் ஒயர்கள் அறுந்து ஆங்காங்கே அறுந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன.
காற்றும், வெளிச்சமும் வராத அந்தக் கட்டிடத்தில் ஒவ்வொரு தளத்திலும் நடை வராந்தா முழுக்க, மற்ற வீடுகளில் மீதி இருக்கும் மக்கள் தங்கள் தினசரி கழிவுகளைக் கொட்டுகிறார்கள். அதில் இருந்து வெளிப் டும் கிருமிகளும், நாற்றமும் அக்கட்டிடத்தை ஒரு “பெருங்குடி குப்பைக்கூடமாக’வே மாற்றியிருக்
கிறது. அதில் வசிக்கும் மக்கள் அசூயை ஏதுமின்ஷீ அதில் வருகிறார்கள், போகிறார்கள்.
இப்படி குப்பைக் கொட்டி வைத்தால் தான், இந்த வீடுகளுக்கு அதன் உரிமையாளர்கள் வாடகை ஏற்றமாட் டார்கள். (வாடகை வெறும் 1500 தான் 600 ச.அடிக்கு) என காரணம் சொல் கிறார்கள்.மெல்ல அந்த வீடு பற்றி நான் விசாரித்தேன்.
அந்தக் கட்டடத்திற்கு ஏறத்தாழ 50 உரிமையாளர்கள் உள்ளனர். அவர் கள் ஒன்று சேர்ந் தாற்போல் இக்கட்டிடத்திற்கு வந்தால் தான் தீர்வு கிடைக்கும். ஆனால், அது நிகழாது.
இந்தக் கட்டிடத்தில், இன்னொரு பயங்கரமும் இருக்கிறது. முதல் மூன்று தளம் மெட்ராஸ் டெரஸ் என்கிற முறையில் (பழங்கால கட்டுமான முறையில்) கட்டைகளை உத்திரத்தில் பொருத்தி தளம் அமைத்திருக்கிறார்கள். அதற்கு மேல் இரு தளங்கள் கான்கிரீட்டினால் அமைத்திருக்கிறார்கள். இதற்கு யாரிடம் அனுமதி வாங்கினார்கள்? எப்படி அனுமதி வாங்கினார்கள் என்பது தெரியவில்லை.
கட்டிடத்திற்குள் சுற்றிப் பார்க்கச் சென்ற நமக்கு உள்ளே போய் வந்த அச்சம் தீரவில்லை. அதில் எப்படி நம்பிக்கையாக உறங்கி, உண்டு, வாழ்நாளை கழிக்கிறார்களோ? இந்த அழகில் தமிழக அரசின் ரேrன் கடை கூட கட்டிடத்தின் பிற்பகுதியில் இயங்குகிறதாம்.
இந்த கட்டிடத்தின் பயங்கரம் பற்றி அப்பகுதி மக்கள் முறையிட்டும் கூட, யாதொரு பயனுமில்லை. சென்னை மாநகராட்சி ஆட்கள் பார்த்துவிட்டு போயிருக்கிறார்கள். முறையற்ற குடித்தனங்கள், ஆக்கிரமிப்புகாரர்களிடம் சிக்கித்தவிக்கும் இந்தக் கட்டிடத்தை இடித்துத் தள்ளும் நாள் எந்த நூற்றாண்டில் இருக்கிறதோ?
திடீரென ஒரு நாள் அந்தக் கட்டிடம் இடிந்து விழுந்த பிறகுதான், நமது ஊடகங்கள் அந்த இடத்திற்கு முண்டியடித்துச் செல்லும். ஆனால், அதற்கு முன்பாக ஒரு முறை கேமரா கொண்டு போய் அந்த கட்டிட பயங்கரம் பற்றி வெளி உலகிற்குச் சொன்னால் நல்லது.
(அவர்களுக்கான முகவரி : சென்னை பெரியமேட்டில் ஈ.கே குரு தெருவில் உள்ளது இக்கட்டிடம்).
இதனைப் பார்க்கும் மாநகராட்சி மற்று அரசுப் பொறியாளர்கள் சீரியசாக நடவடிக்கை எடுக்காது போனால் இன்னொரு மவுலிவாக்க விபத்து அங்கு நிகழும் அது உறுதி.
எழுதியவர்
பா.சுப்ரமண்யம்
பில்டர்ஸ்லைன் இதழிலிருந்து...
For Subscription pl call : 8825479234
www.buildersline.in
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067417
|