பீம்கள், தூண்களிலும் ஒயரிங் வசதி செய்யலாம்

23 ஜனவரி 2024   05:30 AM 22 அக்டோபர் 2018   12:51 PM


வீடு கட்டும்போது, மேல்தள கான்கிரீட் பணிகளின் ஒரு பகுதியாக, மின்சார ஒயரிங் இணைப்புகளுக்கான குழாய்கள் பதிக்கப்படும். இதில், சுவர்களின் அடிப்படையில் அறைகள் பிரிக்கப்பட்டு இருக்கும்.


இதை கருத்தில் கொண்டு எந்த அறையில் என்ன வசதி தேவை என்பததை கணக்கிட்டு, மேல்தளத்தில் மின் ஒயர்கள் செல்வதற்கான குழாய்கள் அமைக்கப்படும். இப்பணியை துவங்கும் சமயத்தில் தூண்களை இணைக்கும் பீம்கள் அமைக்கும் பணிகள், ஏற்கனவே முடிந்து இருக்கும்.

 

இதனால், பீம்களை தவிர்த்து மேல்தளத்தில் மட்டும் ஒயரிங் இணைப்பு வசதிகள் செய்யப்படுவது, வழக்கமாக இருந்து வருகிறது. சில இடங்களில் அறைகளின் குறுக்காக பீம்கள் செல்லும். இங்கு பீம்களை தவிர்த்து தளத்தில் மட்டும் ஒயரிங் இணைப்பு வசதி செய்யப்பட்டால், மையப் பகுதியில், விளக்கு, மின்விசிறி போன்ற சாதனங்களை அமைப்பதில் சிக்கல் ஏற்படும்.

 

இப்பிரச்சனைக்கு தீர்வு: கட்ட டங்களில் பீம்கள் அமைக்கும் பணி தனியாக முடிக்கப்பட்டு, தளம் அமைக்கும் போது தான் ஒயரிங் குழாய்கள் பதிக்கும் பதிக்கும் பணிகள் மேற்கொள் ளப்படுகின்றன. இதுதான், பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமாகும்.

 

மேற்கூரை கான்கிரீட் தளத்தில் ஒயரிங் குழாய்கள் பதிப்பது போண்று, பீம்களிலும் ஒயரிங் குழாய்களை அமைக்கலாம்.

 

எனவே, பீம்கள் அமைக்கும் போது, அறையின் அளவை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப மின்சார ஒயரிங் குழாய்களை அமைக்கும் பணிகளை மேற்
கொள்ளலாம். இதன்பின் மேற்கூரை அமைக்கும் போது, பீம்களில் பதிக்கப்பட்ட குழாய்களை கவனித்து அதற்கேற்ப ஒயரிங் வசதிகளை செய்ய வேண்டும். பீம்களில் மட்டுமல்ல,சில இடங்களில் தூண்களிலும் ஒயரிங் குழாய்கள் இப்படித்தான் அமைக்கப்படுகின்றன. 


இதுவும் நடைமுறையில் சாத்தியமான ஒன்று தான்.

 

எனவே, மேற்கூரை பணி வரை காத்திராமல், தூண்கள், பீம்கள் அமைக்கும் போதே, ஒயரிங் குழாய், பதிப்பு பணிகளை மேற்கொள்வது நல்லது.

 

பில்டர்ஸ்லைன் மாத இதழிலிருந்து....

சந்தாவிற்கு அழைக்க ...8825479234
இணையதளத்தில் படிக்க.. www.buildersline.in

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067424