சிமென்ட் வாங்கும்போது ... சிமென்ட் வாங்கும்போது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய சில அடிப்படை தகவல்கள்:

23 ஜனவரி 2024   05:30 AM 22 அக்டோபர் 2018   12:48 PM


1. சிமென்டில் வெவேறு கிரேட்கள் உள்ளன. அதன் மென்மைத் தன்மையை வைத்தே இத்தகைய (33,43,53) கிரேட்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. கிரேட் அடிப்படையில் தரம் வேறுபடுவது இல்லை.

 

2. கட்டடத்தில் காலம் அமைப்பது, தூண்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகலுக்கு 53 கிரேடு சிமெண்ட் பயன்படுத்தலாம். பூச்சு வேலைக்கு, 43 கிரேடு சிமெண்டை பயன்படுத்தலாம்.

 

3. சிமெண்ட் வாங்கும் போது, நம்பத்தகுந்த வியாபாரியிடம் இருந்து, புதிய மூட்டைகளாக வாங்க வேண்டும். மொத்தமாக வாங்கி நீண்ட நாட்கள் சேமித்து வைத்து பயன்படுத்துவது கூடாது. மூன்று மாதங்கள் வரை சேமித்து வைக்கப்பட்ட சிமென்டை, 20 சதவீத உறுதித்தன்மையை அளிக்கும் சேமித்து வைக்கப்படும் காலம் அதிகரித்தால், அதற்கேற்ப அதன் உறுதித்தன்மையும் படிப்படியாக குறையும்.

 

4. நீங்கள் வாங்கும் சிமெண்ட் எந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்பதை விட, அது தரமானதா, எப்போது தயாரிக்கப்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும்.

 

5. எந்த நிறுவன தயாரிப்பாக இருந்தாலும், மூட்டையை திறந்ததில் இருந்து, ஆறு மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். அதன் பின்னும் திறந்திருந்தால், அதில் வெளிக்காற்றி ல் உள்ள ஈரப்பதம் சிமென்டின் உலர் தன்மையை பாதிக்கும்.

 

பில்டர்ஸ்லைன் மாத இதழிலிருந்து....
சந்தாவிற்கு அழைக்க ...8825479234
இணையதளத்தில் படிக்க.. www.buildersline.in

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067426