பில்டர்ஸ் லைன் அனுபவம் ஆயிரம் - 1 பொறியாளர் : ஏ.ஜி.மாரிமுத்து ராஜ், கோவை

21 ஜனவரி 2025   05:30 AM 22 அக்டோபர் 2018   12:19 PM


ஒரு அனுபவம் தந்த படிப்பினை ஓராண்டுக்கு முன்பு, ஒரு தொழிற்சாலையில், கட்டுமானப் பணியை மேற்கொண்டு இருந்த நேரம் அது..

அப்போது, ஒரு பெரிய அறையின் ரூஃப் கான்கிரீட் பணி நடைபெற்றுக் கொண்டு இருந்தது. மூன்று நாட்கள் அநதவேலை நடந்து கொண்டிருந்தது.

 

ரூஃப் கான்கிரீட் பணி, முடிவதற்கு சில நிமிடத்திற்கு முன் வேலை முழுதாக முடியப் போகிறது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த சமயம்..ப்ப்டார்... ஒரே சத்தம் மொத்த கான்கிரீட்டும், திடீர் என்று பெரிய சத்தத்துடன் கீழே விழுந்து விட்டது. சென்டரிங் கூரை சரிந்து, மொத்த கான்கிரிட்டும் தரையில் சிதறியது. நான் உட்பட எல்லோரும் நிலை குலைந்து போனோம்..

 

நல்ல வேலையாக கூரைக்கு கீழ் ஆட்கள் யாரும் இல்லை. என்றாலும், காலம், பொருள் வெகுவாக நட்டமடைந்து விட்டது.

 

ஏன் அப்படி விழுந்தது? என்று அப்போது ஒன்றும் புரியவில்லை. அதற்கான காரணத்தை, மூத்தப் பொறியாளர் ஒருவர் வந்து சைட்டைப் பார்வையிட்டு, விளக்கிய பின்பு தான் தெரிய வந்தது.

 

அது என்னவென்றால், ‘‘அறையில் மேற்கொள்ளப் பட்ட பொய்க்கூரை அமைப்பு (சென்டரிங் வேலை) சரியான முறையில் அமைக்காதது தான்’’ என்றார். 
அது எப்படி? என்றால், முட்டுக் கொடுத்து இருந்த பூட்டுகள் அனைத்தும், குறுக்கு மற்றும் நெடுக்கு வாக்கில் ஒன்றுடன் ஒன்றை பூட்டு கொண்டு சாரக் கயிறு மூலம் இறுகக் கட்டாமல் இருந்தது.


இக்காரணத்தால் கான்கிரீட் ஒரு மூலையில் இருந்து போட்டுக் கொண்டே சென்றபோது, அதன் இறுதி இடத்தில் பளு குறைவாக இருந்த காரணத்தால், அங்கு முட்டு கொடுக்கப்பட்டு இருந்த முட்டுகள் அனைத்தும் தளர்வாகி, மேலேறிவிடவே, அதன் காரணத்தால் அறையில் மொத்த முட்டுக்களும், லூசாகி பளுவை தாங்க முடியாமல், உடைந்து, கான்கிரீட்டை கீழே விழச் செய்து விட்டது. இது எவ்வளவு பெரிய பிசகு என்பதை அப்போதுதான் உணர்ந்தோம்.

 

ஆகையால், எப்போது கான்கிரீட் பணி, செய்ய நேர்ந்தாலும், பொய்க்கூரை அமைப்பை சரியான முறையில் குறுக்கு, மற்றும் நெடுக்கை வாக்கில் பூட்டுக்களால், அனைத்து பூட்டுக்களையும் சாரக்கயிறு கொண்டு பிணைத்து, கான்கிரீட் பணியை பரப்பின் நான்கு முனையையும் கவர் செய்த பின்பு இடைப் பகுதியை முடிப்பது என்ற பாடத்தை அன்று முதல் கற்றுக் கொண்டேன்.

 

மற்றவர்களும் இதையேக் கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகிறேன்.

 

பில்டர்ஸ்லைன் இதழிலிருந்து...
For Subscription pl call : 8825479234
www.buildersline.in

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2140938