சிவில் பொறியாளர்களுக்கு - 2017 ஆம் ஆண்டின் சூப்பர் 13 செயலிகள்

23 ஜனவரி 2024   05:30 AM 22 அக்டோபர் 2018   10:59 AM


இதுவரை 2000த்திற்கும் மேற்பட்ட செயலிகள் சிவில் பொறியியலுக்கு வழிகாட்ட சந்தையில் இறக்கி விடப்பட்டுள்ளன. அதில் 2017-ல் மிக முக்கிய இடம் பெறப் போகும் அதி முக்கிய சூப்பர் 13 செயலிகளைப் பட்டியலிடுகிறோம்.

 

உங்கள் திறன் பேசியில் நிறுவிக் கொள்ளுங்கள்.
1. பிளான் கிரிட் (Plan Grid):
செயலிகளில் எவர் கிரீன் ஆப் எனப்படுவது இது. 2013-ல் தருவிக்கப்பட்ட இந்த செயலி கடந்த 3 ஆண்டுகளில் வெகு பிரபலம் அடைந்திருக்கிறது. பிளான் வரைவதற்கான பிளாட் ஃபார்மாக விளங்கும் இந்தச் செயலி மூலமாக தாங்கள் வரைந்த பிளானை பிறருக்கு அனுப்பும் வகையில் பி.டி.எஃப் ஃபைலாகவும் மாற்ற முடியும்.

 

2. பில்ட் கால்க் (Build Calc):
சிவில் பொறியாளருக்கு எத்தனையோ கணக்கீடு செயலிகள் வந்திருந்தாலும் பில்ட் கேல்க் ஒரு மணி 
மகுடம். மிக நுட்பமான கணக்கீட்டுத் தேவைகளுக்கு இது சிறந்தது. இதுவரை இந்தியாவில் மட்டும் 3 லட்சம் பேர் தரவிறக்கியுள்ளனர்.

 

3. ஐ-ஹான்டி கார்பென்டர் (I handy Carpender):
மர வேலைப்பாடுகள் தொடர்பாக தச்சர்களுக்குத் தேவையான அளவுகள், உத்தேச மதிப்பீடு உள்ளிட்ட 5 டூல்களை இதன் டிரையல் வர்rனில் நீங்கள் எடுத்தாளலாம்.

 

4.ஆர்க்கிடெக்ட்ஸ் ஃபார்முலேட்டர் (Architechts formuletor)
எழிற் கலைஞர் களுக்குத் தேவையான 400க்கும் மேற்பட்ட ஃபார்முலா க்கள் இந்த செயலியில் உள்ளது. மாணவர் களுக்கு மட்டுமிறி களப்பணி எழிற்கலைஞர்களுக்கும் இது ஆத்ம நண்பன் ஆகும்.

 

5. சேஃப்டி மீட்டிங் ஆப் (Safety Meeting app):
இந்தச் செயலி கட்டுமான நிறுவனம் நடத்துகிற பாதுகாப்புத் தொடர்பான மீட்டிங்குகள், ஆலோசனைகள் பதிய வைத்துக் இதுவும் ஒரு கணக்கிடுதல் செயலி தான். என்றாலும், பரப்பு, எண்ணிக்கை, விலை, சந்தை உள்ளிட்ட பல ஆள் தகவல்களை உங்களுக்கு விரல் நுனியில் தருகிறது.

 

7. ப்ளு பிரிண்ட் (Blue print):
இது ஆண்ட்ராய்டு காரர்களுக்கு அல்ல, ஆப்பிள் காரர்களுக்கு. ஆனால் இந்தச் செயலி முறிலும் இலவசம் ஆகும். இதன் மூலம் கட்டுமானங்களுக்கான புளு பிரிண்ட் பிளானை எந்த மென் பொருளும் இன்றி நீங்களே வரைந்து தள்ள முடியும்.

 

8. பிம் எக்ஸ் (BMX):
இது ஒரு நிர்வாகம் மற்றும் கணக்கீட்டுச் செயலியாகும். அதாவது பிரபல பிம் (BIM) கணினி மென்பொருளின், ஆண்ட்ராய்ட் வெர்rனாகும். 2012 ஆண்டின் மிகச்சிறந்த சிவில் துறை செயலி என்ற விருதினையும் இது பெற்றுள்ளது. இதன் முழு ரிப்போட்டை 3டி முறையில் தயாரித்து வழங்க முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.

 

9. கன்ட்ரோல் சென்டர் 7 (Control Center 7):
பணியிடத்தில் உள்ள பணியாளர்களையும் அவர்கள் செய்யும் பணியின் தன்மையையும் உங்கள் அலுவலகத்தில் இருந்தே கவனிக்க வேண்டும், கண்காணிக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் கண்ட்ரோல் சென்டர் 7 உங்களுக்கு உதவி செய்யும்.

 

பணியிடத்தில் உள்ள கேமராக்கள் மூலமாக ஒளிப் படங்களை ஆன்லைனில், ஆடியோவுடன் உங்கள் அலைபேசிக்கு இந்தச் செயலி பரிமாற்றம் செய்கிறது. கட்டுமானத் தொழிலுக்கு மட்டுமின்றி, பல்வகை கண்காணிப்புகளுக்கும் கண்ட்ரோல் சென்டர் 7 செயலி பயன்படும். 2017- அதி முக்கிய செயலியாக இது உருவெடுக்கும்.

 

10. ஐ கிவிக் கான்ட்ராக்ட் மேக்கர் (I Quick Contract maker):
பல்வகை கட்டுமான ஒப்பந்தங்களை மிகச் சுலபமாக சீக்கிரமாக தயாரிக்க வழி செய்யும் செயலி இது. பல்வகை ரெடிமேட் டெம்ப்ளேட்டுகள் இதில் உள்ளன. அதிகாரிகளுக்கும், மேலாளர்களுக்கு இது பயன்படும். ஆனால், இதுஆப்பிள் பயனாளர்களுக்கு மட்டும் உரித்தானது. நிறுவனத் தலைவர்கள், தொழிலதிபர்கள் பயன்படுத்தக் கூடிய செயலி இது.


11. கிரீன் ப்ரோ (Green Pro) :
எழிற்கலைஞர்கள், கட்டுநர்கள், பொறியாளர்கள் தங்கள் கட்டுமானத்தின் பிளானை தந்துவிட்டால் போதும். மேலும் இந்தச் செயலி கேட்கும் இன்புட்களை பதிவேற்றி விட்டால், அக் கட்டுமானத்திற்கு தேவையான பல எனர்ஜி சேவிங் ஆலோசனை இது நமக்கு தருகிறது.

 

12. அகோனெக்ஸ் மொபைல் (Aconnex Mobile):
மிகவும் லேட்டஸ்ட் செயலி இது. ஒரு பில்டர் அல்லது கான்ட்ராக்டர் தங்களது நடப்பு புராஜெக்ட்டுகளின் லேட்டஸ் அப்டேட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வீடியோ, படங்கள், டெக்ஸ்ட் என பல்வகைப்பட்ட நிலைத் தகவல்களை உருமாற்றி மின்னஞ்சலில் அனுப்புவதற்கு இந்த செயலி பயன்படுகிறது. அதிக செயல் திறன் மிக்க அலைபேசிகள் இதற்கு தேவை.

 

13. ப்ரோகோன் (Pro Cone):
இதுவும் ஒரு கட்டுமான மேலாண்மை செயலியாகும். ஆனால் இது அட்வான்ஸானது. திட்டப் பணி நிறைவேற்றம், கட்டிடப் பொருட்கள் உள்வரவு, வெளிச்செலவு போன்ற எல்லா விrயங்களையும் தன்னகத்தே வைத்துக் கொள்ளலாம். வடிவத்திலும், செயல்பாட்டிலும் தன்னுடைய எல்லா போட்டிச் செயலிகளையும் இது ஓரங்கட்டுகிறது.

மேற் சொன்ன செயலிகள் எல்லாம் பெரும்பாலும் கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும்.

- பா.சுப்ரமண்யம்

 

பில்டர்ஸ் லைன்  மாத இதழிலிருந்து...

ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு.......... 88254 79234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067328