மல்டி பர்போஸ் மண் அள்ளும் இயந்திரங்கள்

23 ஜனவரி 2024   05:30 AM 10 அக்டோபர் 2018   04:24 PM


மல்டி பர்போஸ் மண் அள்ளும் இயந்திரங்கள்
 
 
மண் அள்ளும் இயந்திரம் என்ற அளவில் மட்டுமே நீங்கள் அறிந்து வைத்திருந்த  ஜே.சி . பி. தற்போது ஏராளமான தொழிற்நுட்ப வசதிகளைப் பெற்று பன்முக செயல்பாடுகளுக்கு ஏற்றார்போல் வடிவமைக்கப்படுகின்றன. 
 
 
உங்கள் எர்த் மூவிங் இயந்திரத்தில் ஜிபிஎஸ் வசதி இருக்கிறதா? இருந்தால், நீங்கள் எண்ணிப் பார்க்க முடியாத எண்ணற்ற அதிசயங்களை நடைமுறைப்படுத்தலாம்.குஷீப்பிட்ட இடத்தை மட்டும் சுட்டிக் காட்டும் வசதி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதற்கான ஜிபிஎஸ் ரீசீவர் என்னும் சாதனத்தை உங்கள் எர்த் மூவிங் இயந்திரத்திலேயே பொருத்தி இருப்பார்கள்.  
 
 
இதைத் தவிரக் கோணத்தை உணரும் சென்சார் சாதனம் ஒன்றும் இருக்கும்.  மேலும் தரைக் கட்டுப்பாட்டு நிலையம் என்கிற ஏற்பாட்டையும் உள்ளடக்கி இருக்கும். வேலை நடக்கும் இடத்திலிருந்து தகவல்களை அனுப்பி, பெறும் வசதிகளை இது பார்த்துக் கொள்ளும். தரைக் கட்டுப்பாட்டு நிலையமே இல்லாத வகையில் இயக்கப்படும் சாதனங்களும் கிடைக்கின்றன. அந்த வகைச் சாதனங்களில் இயந்திரமே நேரடியாகச் செயற்கைக் கோளிலிருந்து தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.  குறிப்பிட்ட இடத்தில் வேலை செய்யும் போது அந்த இடத்தின் அளவீடுகள் குறித்த சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். தரைக் கட்டுப்பாட்டு நிலைய வசதி இருக்குமானால் நீங்கள் உங்கள் இயந்திரத்தில் செய்யக் கூடிய வேலைகளை மிக நுணுக்கமாக இரண்டு அல்லது மூன்று சென்டிமீட்டர் வரையிலான துல்லியத்துடன் செய்து முடிக்க முடியும். 
மோட்டார் கிரேடர்கள், 
 
 
மண்ணை அழுத்தி இறுக்கி விடும் காம்பாக்டர்கள், ட்ராக் வகை ட்ராக்டர்கள் போன்ற சாதனங்களில் இத்தகைய வசதியைப் பொருத்திவிட்டால் எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் சிறு பிசிறு கூட இல்லாமல் படு நேர்த்தியாக வேலைகளை முடிக்க முடியும். செங்கல்,மண், மணல், கம்பி ‡ எதை வேண்டுமானாலும் நீங்கள் விரும்புகிற இடத்திற்குக் கொண்டு செல்லலாம். 
 
இயந்திரத்தை எந்தத் திசையில் எவ்வளவு தொலைவு இயக்க வேண்டும், எங்கே திருப்ப வேண்டும், எங்கே நிறுத்த வேண்டும் என்பதை எல்லாம் தானியங்கி முறையில் கட்டுப்படுத்தலாம். இதற்கு ஆட்டோமேடிக் நேவிகே­ன் சிஸ்டம் என்று பெயர். இந்த வசதி உள்ள இயந்திரங்களையே பயன்படுத்துவது என்று முடிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் வேலைகள்அனைத்தும் விரைவாக முடியும்.
 
 
உங்களிடம் உள்ள எர்த் மூவிங் மற்றும் பிற சாதனங்களில் ஆட்டோமேடிக் நேவிகே­ன் சிஸ்டம் என்ற வசதியை ஏற்படுத்திக் கொண்டால் உங்கள் வேலைகளை எவ்வளவு கச்சிதமாக முடிக்கலாம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இதைப் பயன்படுத்திப் பார்த்தபிறகு உங்களுக்கு வேறு எதுவும் சரிப்பட்டு வராது என்று தோன்றும். உங்களிடம் வேலைகளை ஒப்படைப்பவர்களுக்கும் முழு திருப்தி ஏற்படுவது நிச்சயம்.
வேலை செய்ய வேண்டி இருக்கும் இடத்தின் விவரங்கள், தேவைப்படும் வேலையின் தன்மை ஆகியவற்றை இயந்திரத்தை இயக்குபவர் தனது கூண்டுக்குள் அமர்ந்தபடியே நிர்ணயிக்க முடியும். இவற்றை மாற்றி அமைத்தபின் ஒவ்வொரு கட்ட வேலைகளையும் இயந்திரமே தனது பொறுப்பில் எடுத்துக் கொள்ளும்.
இப்படி வேலைகளை நேர்த்தியாக முடிப்பதால் உங்கள் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் எங்கோ போய்விடும். மண்,மணல் போன்றவற்றைக் கையாள்வதிலும் கணக்கு வைத்துச் செயல்பட முடியும். சில இயக்கங்களைக் கைகளால் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அதற்கும் வசதி செய்து கொள்ளலாம். ஓர் இயந்திரத்திற்காக வாங்கிய பாகங்களை மற்றொரு இயந்திரத்திற்கு மாற்றிக்கொள்வதும் எளிதானதே.
செய்யப் போகும் வேலையை முப்பரிமாணத் தோற்றத்தில் சரி பார்த்து அதன்பின் அவ்வாறே செய்யும்படி ஆணையிட்டு வேலை வாங்குவதற்கு ஏற்ற நேவிகேr­ன் சாதனங்கள் கிடைக்கின்றன. 
 
 
இங்கே தோண்டப்பட வேண்டிய பள்ளம் இவ்வளவு நீள, அகல, ஆழங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை, இயந்திரத்தை இயக்குபவரே துல்லியமாக முடிவு செய்யலாம்.  பெரும்பாலான எர்த் மூவிங் சாதனங்களின் பிளேடுகளில் நுட்பமான உணரிகள் எனப்படும் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
இயந்திரத்தின் எந்தப் பகுதியை எவ்வளவு தூரம், எந்தத் திசையில் செலுத்த வேண்டும் என்பதை இயந்திரத்தை இயக்குபவரே இயந்திரத்திற்குக் கட்டளையிட முடியும். இயந்திரத்தின் பாகங்கள் எப்படி நகர்த்தப்பட வேண்டும் என்பது செயற்கைக் கோள் இணைப்புடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுகிறது.
 
 
சாலை அமைப்பு போன்ற பணிகளுக்கு ஆட்டோமேடிக் நேவிகே­ன் வசதி கொண்ட இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் மிக மிகச் சரியான அளவுகளில் சாலைகளை அமைக்கலாம்.  இயந்திரத்தின் பின்னால் இழுத்துக் கொண்டு வரப்படும் வாகனங்கள் போன்றவற்றை விருப்பம் போல் கட்டுப்படுத்தி இயக்க இதை விட்டால் வேறு வசதியைக் குறிப்பிடுவது கடினம். பள்ளங்களைத் தோண்டும் வேலைகளையும் இந்த வசதி எளிதாக்குகிறது.  தேவைப்படும் அளவுகளைக் குறிப்பிட்டுவிட்டால்   அதே அளவில் வெட்டி வேலைகளை நடத்தி முடித்துவிடலாம். மண் அள்ளும் வேலைகளுக்கும் இது பொருத்தமாக இருக்கும். 
 
 
உலக அளவில் கட்டுமானத்துறையின் வளர்ச்சிக்கு மண் அள்ளும் இயந்திரத்தில் உள்ள நவீன தொழிற்நுட்பங்கள் பெரிதும் உதவும்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067324