மகா சிமெண்ட் வழங்கிய மாபெரும் கட்டுரை போட்டியின் பரிசளிப்பு விழா
பொறியாளர் தினத்தை ஒட்டி மகா சிமெண்ட் நிறுவனமும், பில்டர்ஸ் லைன் பத்திரிகையும் இணைந்து நடத்திய மாபெரும் கட்டுரைப் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கான பரிசளிப்பு வழங்கும் நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் ஷவிஜய் பார்க்| ஓட்டலில் சென்ற மாதம் 22ந் தேதி காலை நடைபெற்றது.
தமிழகம் முழுக்கவுள்ள சிவில்பொறியாளர்கள், சிவில் துறை பயிலும் மாணவர்கள், சிவில் துறை பேராசிரியர்கள் ஆகி யோரகளுக்கு இடையே இந்த மாபெரும் கட்டுரைப்
போட்டி நடத்தப் பட்டது. தொழில் நுட்பங்கள், அனுப வங்கள், ஆலோசனைகள், உத்திகள் மற்றும் வட்டார கட்டிடக் கலை, தமிழர் கட்டிடக்கலை என 15 தலைப்புகளில் இந்த போட்டி நடத்தப்பட்டது. மொத்த பரிசுத் தொகையாக 50,000 ரூபாயும், சந்தா மற்றும் கட்டுமான நூல்கள் ஒன்றரை லட்சம் ரூபாய் அளவிற்கும் மொத்தப் பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழகம் முழுக்க 740 கட்டுரைகள் வரை இந்த போட்டியில் பங்கெடுக்க, அவற்றிலிருந்து 4 முதல் பரிசுகளும், (அறிமுக பொறியாளர்கள, சீனியர் பொறியாளர்கள், சிவில் மாணவர்கள், சிவில் பேராசிரியர்கள் என 4 வௌ;வேறு தலைப்புகளில் முதல் பரிசுகள்) இரண்டாவது பரிசு, மூன்றாம் பரிசு என மொத்தம் 12 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பின்பு, 10 சிறப்பு ஆறுதல் பரிசுகளும், 'பாராட்டப்பட வேண்டிய படைப்பு" என்னும் தலைப்பில் 50 வெற்றியாளர்களும், ஆக மொத்தம் 72 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அது மட்டுமல்லாது, முதல் மூன்று இடம் பெற்ற பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்ந்த கல்லூரிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பாராட்டப் பட வேண்டிய படைப்புகளின் வெற்றியாளர்களைத் தவிர, மீதம் 30 போட்டி யாளர்கள் நிகழ்ச்சிக்கு வரவழைக்கப்பட்டனர். வெற்றிப் பெற்றவர் கள் தாங்களும், தங்கள் நண்பர் கள், உறவினர்களுடன்; இந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு மகா சிமெ ண்ட் நிறுவனத்தின் துணை உதவி தலைவர் திரு. ஆர். சிவ ராம கிரு~;ணன் அவர்களும், மகாசிமெண்ட் நிறுவனத்தின் நுகர்வோர் சேவை பிரிவின் துணை மேலாளர் திரு. பிரபுபால் அவர் களும் கலந்துக் கொண்டனர்.
பிரபு பால் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்தளிக்க பரிசளிப்பு விழா இனிதே ஆரம்பமானது. முதலில், மகா சிமெண்ட் நிறுவனத்தின் துவக்கம், பயணம், அதன் முன்னேற்றம், வளர்ச்சி ஆகிய வற்றைக் குறித்தும், தென் மாநிலங்களில் மிக வேகமாக விற்பனையில் முன்னேற்றம் கண்டு வரும் மகாசிமெண்ட் நிறுவனத்தின் பல்வேறு சிமெண்ட் தயாரிப்புகள் குறித்தும், திரு. பிரபுபால் அவர் கள் படக்காட்சியின் மூலமாக தொகுத்தளித்தார்.
அதைத் தொடர்ந்து பில்டர்ஸ் லைன் பத்திரிகையின் ஆசிரியர் திரு.பா.சுப்பிரமணியம் வெற்றிப் பெற்ற கட்டுரையாளர் களை வாழ்த்தி பேசினார்.
சர். விஸ்வேஸ்ரய்யா அவர் களைப் பற்றிக் குறிப்பிடும் போது,'விஸ்வேஸ்ரய்யா அவர் கள் காந்தி பிறந்த காலத்தில் வாழ்ந்தவர். காந்தியைப் போலவே, விஸ்வேஸ்ரய்யா அவர்களும் மக்களுக்காக உழைத்த ஒரு பொறியாளர். கே.ஆர்.எஸ்.அணைக் கட்டு தவிர, அவர் நாட்டில்; பல்வேறு அணைகளைக் கட்டியவர். தனது 90வது வயதில் கூட பீகார் மாநிலத்தில் கங்கை நதியின் குறுக்கே ஷமொக்கமா| என்கிற பாலத்தை கட்டுகிற குழுவிற்கு தலைமை வகித்து, பல்வேறு அளப் பரிய ஆலோசனைகளை அளித்தவர். விசாகப் பட்டினம் துறைமுகத்தில் கடல் அரிப்பைத் தடுப் பதற்கு, கற்களாலான அரண் களை அமைக்கும் ப்ராஜெக்டை நாட்டில்; முதல் தடவையாக செய்தவர். மாடர்ன் மைசூர் சிட்டியை உருவாக்கியவர்.
ஹைதராபாத் நகரில் வெள்ளத் தடுப்பு உள்கட்டமைப்பு பணிகளை நிர்வகித்தவர். திருப்பதி, திருமலையில் மலைப்பாதைகளை திட்டமிட்டு உருவாக்கியவரென" விஸ்வேஸ்ரய்யா அவர்களின் பல்வேறு சிறப்புகளை எடுத்து ரைத்தார்.
மேலும், இந்த காலத்தில் சிவில் பொறியியல் மாணவர் களிடையே வேலை வாய்ப்பை பற்றிய பயமிருக்கிறது. அது வீணான அச்சம் தான். நிலமை மாறும். உள் கட்டமைப்புப் பணிகள் வேகமாக வளர்ச்சி அடையும். வீடுகளின் தேவைகள் எப்போ துமே இருக்கிறது.
எனவே, சிவில் பொறியியல் துறையில் பொறியாளர்களின் தேவை ஆண்டாண்டு காலம் சிறந்திருக்கும்" என அவர் குறிப்பிட்டார்.
இறுதியாக மகா சிமெண்ட் தயாரிப்புகள் குறித்தும் அதன் அதிநவீன விற்பனை சேவைப் பற்றியும் எடுத்துரைத்தார். இந்த கட்டுரைப் போட்டியை மிகப் பெரிய அளவில் வெற்றிகரமாக நடத்துவதற்கு மகா சிமெண்ட் நிறுவனம் எவ்வாறு தன் ஈடுபாட்டைக் காட்டியது என்பதை குறிப்பிட்டு அந்நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு பா.சுப்பிரமணியம் நன்றி தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து மகாசிமெண்ட் நிறுவனத்தின் துணை உதவித் தலைவர் - மார்க்கெட்டிங,; திரு.ஆர். சிவராமகிருஷ்ணன் அவர்கள் பேசினார். தென் மாநிலங்களில் கட்டுமானப் ப்ராஜெக்ட்களில் மகாசிமெண்ட் நிறுவனத்தின் பங்கு எத்தனை முக்கியமானது என்பதை அவர் எடுத்துரைத்தார். கட்டுமானத் துறையில் சிவில் மாணவர்களுக்கும், பொறியாளர்களுக்கும் வரவேண்டிய விழிப்புணர்வு குறித்தும், அதற்கு பில்டர்ஸ் லைன் பத்திரிக்கை மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் எத்துணை உறுதுணையாக இருக்கிறார்கள்? என்பதையும் அவர் குறிப்பிட்டார். தமிழகப் பொறியாளர்களின் பொறியியல் திறமை தனித்தன்மை உடையது என்றும் பாராட்டினார்.
அது மட்டுமல்ல, வெற்றிப் பெற்ற ஒவ்வொரு கட்டுரையாளரின் பெயரை குறிப்பிட்டு, அவர்கள் எழுதிய படைப்பில் அவரைக் கவர்ந்த கருத்துகளை தொகுத்து அதை மேடையில் மேற்கோள் காட்டி ஒவ்வொரு பரிசுப் பெற்ற வெற்றியாளர்களையும், தனித்தனியே குறிப்பிட்டு அவர்களைப் பாராட்டினார். விழாவில் இறுதியாக வெற்றிப் பெற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும், கல்லூரிகளுக்கும் திரு.ஆர். சிவராமகிருஷ்ணன் அவர்கள் பரிசுத் தொகையையும், சிறப்புப்பரிசுகளையும் வழங்கினார். அடுத்த ஆண்டு இதை விட அதிகளவில் பொறியாளர்கள், கல்லூரிகள், மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டுமென்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
விழாவில் பல நெகிழ்வான சம்பவங்களும் நடைபெற்று நிகழ்ச்சியை இன்னும் சுவையாக்கின.
மூத்த பொறியாளர்கள் பிரிவில் 2ம் பரிசு பெற்ற திரு.லஷ்மணன் அவர்கள் 68 வயதானவர். சிவில் பொறியியலில் பல ஆண்டுகாலம் அனுபவமும், ஆற்றலும் மிக்கவர். அவர் மகாசிமெண்ட்- பில்டர்ஸ் லைன் இணைந்து வழங்கும் பரிசினை வாங்குவதற்காக தனது சொந்த ஊரான திருச்சியிலிருந்து சிரமப்பட்டு பயணம் செய்து நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். இந்த தள்ளாத வயதிலும் அவர் மிக ஆர்வமுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றதை திரு.ஆர். சிவ ராமகிருஷ்ணன் அவர்கள் வெகுவாக பாராட்டினர்.
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியரான கே.பி.வெள்ளியங்கிரி அவர்களைப் பாராட்டும் போது அவருடைய சிந்தனையும், ஆலோசனையும் அவரது படைப்பில் வெளிப்படுகிறது என்றும் அதைவிட அவரது கையெழுத்து மிகத் தெளிவாக அச்சு எழுத்துகள் போல மிகச் சிறப்பானதாக இருக்கிறதென்றும் பாராட்டினார்.
இந்த கட்டுரைப் போட்டியில் மாணவர்கள் பிரிவில் முதல்இடம் பிடித்த ஷமெப்கோ ஸ்லங் பொறியியல் கல்லூரி| மாணவி க.உமா அவரது தாயாருடன் வந்திருந்தார். தனது மகள் பரிசு பெறுவதை மனமுவந்து பார்த்து ஆனந்த கண்ணீர்விட்ட அந்த தாயாரை மேலும் பெருமைப்படுத்தும் வகையில் ஆர். சிவராம கிருஷ்ணன் அவர்கள், அவரது தாயாரையும் மேடையிலேற்றி தாயார் கையால் தன் மகளுக்கு பரிசு வழங்க வைத்து இருவரையும் கௌரவப் படுத்தினார்.
வந்திருந்த பார்வையாளருக்கும், வெற்றியாளருக்கும் திரு. பிரபு பால் அவர்கள் நன்றி சொல்ல பரிசளிப்பு விழா இனிதே முடிந்தது.
அடுத்த ஆண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளில் நாடு முழுவதுமுள்ள பொறியியல் கல்லூரிகளிடையே ஒரு மாபெரும் கட்டுரைப் போட்டி நடத்தி பல பொறியியல் இளம் படைப்பாளிகளை இனம் காணவேண்டுமென்பது தான் பில்டர்ஸ் லைன் ஆசிரியர் குழுவின் விருப்பம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067330
|