கடலுக்குப் போகும் கடவுள் - பின்னே இருக்கும் நச்சு அரசியல்

23 ஜனவரி 2024   05:30 AM 10 அக்டோபர் 2018   03:51 PM


நடந்து முடிந்த விநாயகர் ஊர்வலங்களும், ஊர்வலத்தின் போது ஆங்காங்கே எழுந்த வன்முறைகளும் வழக்கம் போல் மாற்று மதத்துக் காரர்களை அச்சத்திற்குள்ளாக்கி உள்ளது.
 
தான் சார்நத மதத்தின் பெரும்பான்மையை நிரூபிக்க ஒவ்வொரு மதத்துக்காரர்களும் தான் தோன்ஷீத்தனமாக பிரம்மாண்டமான பேரணிகளும், ஊர்வலங்களும், மாநாடும் நடத்த ஆயத்தமாக இருப்பதே இங்கு நிலவும் மதச்சார்பின்மைக்குச் சான்றாகும். ஒவ்வொரு மதக் கொண்டாட்டத்தின் பின்பேயும் பிறமத துவேrங்கள் அதிகளவில் ஒளிந்திருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
 
15, 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் விநாயகர் ஊர்வலங்கள் இல்லை. இப்படி தெருவுக்குத் தெரு
விநாயகர் சிலை வழிபாடு இல்லை. பிள்ளையாரை தன் இஷ்டத்திற்கு சித்தரிக்கும் விசித்திரமான மனப்போக்கும் இல்லை.
 
தங்கள் அதீத கற்பனை வளத்தைக் காட்டுகிறோம் என்பதாய் “தலையை தனியே ஆட்டும் விநாயகர்’, “பைக்கில் செல்லும் விநாயகர்,’
 
“ஏகே 47 துப்பாக்கி வைத்திருக்கும் விநாயகர்’, “எந்திரன் 2.0 விநாயகர்’ என்றெல்லாம் உருவ பொம்மைகள் செய்யும் உரிமையை இவர்களுக்கு யார் தந்தது? ஒரு பள்ளிக்கூடத்தின் வாசலை அடைத்து அங்கே 15 அடி ஒரு விநாயகர் சிலையை நிறுவலாம் என்கிற முட்டாள்தனத்தை இவர்களுக்கு யார் கற்பித்தது?
 
சாவு மேளம், சரவெடி பட்டாசு சத்தம், போக்குவரத்து நெரிசல் நடுவே இன்னும் சற்று நேரத்தில் நாற்றக்கடலில் கரைக்கக் கொண்டுச் செல்லப்படும் ஒவ்வொரு விநாயகரும் தான் இந்து மதத்தை நீடித்து வாழ வைக்கப் போகிறார்கள் என எப்படி நம்புவது?
 
ஊர்வலம் போகும் போது பிள்ளையார் காலடியில் உட்கார்ந்து கொண்டு மது அருந்தும் குடிகாரர்கள் நடத்தும் ஊர்வலங்களிலா இந்து மதம் வாழப்போகிறது? மாற்று மதம் பற்றிய தவறான பிம்பங்களை உளவியல் ரீதியாக அவர்கள் மனதில் பதிக்கச் செய்யும் முயற்சிகளின் ஒரு படி தான் இது.
 
களிமண்ணில் பிள்ளையார் சேர்த்து அதில் நவதானியங்கள் கலந்து அதன் காரணமாக கிணறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் களிமண் வளத்தையும், அதனால் நீர்மட்டத்தையும் காக்கச் செய்யலாம் என்னும் நம்முடைய மூதாதையர்களின் வழிபாட்டை இதற்கு மேல் அரசியல் வாதிகள் கொச்சைப்படுத்த முடியாது..
 
கை,கால், தலை என தனித்தனியாக உடைக்கப்படும் விநாயகப் பெருமான்களைப் பார்த்துதான் இந்துக்களுக்கு ஆன்மீகம் வளரும் என்றால், அதைவிட மோசமாக ஒரு மதத்தினரை வதைக்க முடியாது.
 
வேதமுறையில் வட மொழி மந்திரங்கள் ஒலிக்க கருவறையில் மூலவராக வீற்றிருக்கும் முழுமுதற் கடவுளை வீதிக்குக் கொண்டு வந்து தான் மிச்சம். தங்கள் சுய விருப்பம் காரணமாகவும்., பெரும்பான்மை வாக்குகளை பறிப்பதற்காகவும் இந்த கேலிக்கூத்துகளைச் செய்கிற அரசியல் கட்சிகளின் வலையில் படித்தறியா இளைஞர்கள் சுலபமாக வீழ்ந்து விடுகிறார்கள். செங்கோட்டையில், விநாயகர் ஊர்வலத்தில் மாற்று மதத்தினர் மீது கல்லெறியும் ஒரு பத்து வயது சிறுவனின் ரத்தத்தில் மதவெறியும் வன்முறையும் கலக்கச் செய்தது அன்றி, இந்த விநாயகர் ஊர்வலங்கள் இந்து மதத்தினருக்கு சொல்லித் தந்த செய்தி தான் என்ன?
 
அச்சமாக இருக்கிறது விநாயகர் ஊர்வலத்தின் பின்னே இருக்கும் நச்சு அரசியல் குறித்து...

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067332