கான்கிரீட் பாலிஷிங் என்பது புதிய தொழிற்நுட்பம். முன்பே கண்டுணரப்பட்டதுதான் என்றாலும் இப்போதுதான் இதற்குத் தேவை பெருகி வருகிறது. ஏற்கனவே இடப்பட்ட கான்கிரீட் பரப்புகளை விரும்பிய விதத்தில் மாற்றி அமைத்துக் கொள்வதற்குக் கான்கிரீட் பாலிஷிங் உதவும். இதற்கான இயந்திரங்களும் கிடைக்கின்றன.
கான்கிரீட்டை எதற்காகப் பாலீஷ் செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். எப்போதும் ஒரே மாதிரியான, பச்சை நிறத் தரைப் பரப்புகளைப் பார்த்தால் சலிப்பு ஏற்படும் இல்லையா? அதைப் போக்கலாம். புதுமையைப் புகுத்தலாம். தரைப் பரப்பு சிவப்பு நிறத்தில் காணப்பட வேண்டுமானால் சிவப்புக் கற்களைப் பதித்தால்தான் உண்டு என்று நினைப்பீர்கள். தேவையில்லை. சிவப்பு நிறக் கான்கிரீட் தரையைக் கான்கிரீட் பாலிஷிங் முறையில் உருவாக்கலாம். பல விதத் தேவைகளுக்கு வண்ண, வண்ணமான பெயிண்ட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களே கூடத் தங்களது ஆலைத் தரைகளுக்குக் கான்கிரீட் பாலி´ங் முறையைப் பின்பற்ஷீ வண்ணம் ஏற்றுகிறார்கள் என்றால் இதன் சிறப்பைப் பார்த்துக் கொள்ளுங்களேன்.
கண்ணைக் கவரும் விதத்தில் தரைப் பரப்புகளை அமைக்க விரும்புவீர்கள். இதற்கு ஒரே வழி விதவித
மான ஓடுகளை வாங்கிப் பதிப்பது என்று முடிவு செய்வீர்கள். கொஞ்சம் பொறுக்கலாமா? ஓடுகளை விடவும் சிக்கனமான வழி இருக்கிறது. அதுதான் கான்கிரீட் பாலிஷிங். எப்படி?
கோட்டா அல்லது சிவப்புக் கல் பாளங்களைப் பதிக்க விரும்புவீர்கள். இத்தகைய கற்களைக் குறிப்பிட்ட, தரப்படுத்தப்பட்ட அளவுகளில் வெட்டுவது வழக்கத்தில் இல்லை. 24 அங்குல அளவு கொண்ட கற்களை வாங்குகிறீர்கள் என்போம். உண்மையில் 22 அங்குல அளவில்தான் இவற்றைப் பயன்படுத்த முடியும். மீதமெல்லாம் சேதம்தான்.
இதையும் தவிர, பொருத்துவதற்கு முன் இவற்றை பிளேடுகளைக் கொண்டு வெட்டித்தான் பயன்படுத்த முடியும். இன்னொரு சேதாரம். நேர விரையம்.கூலி விரையம். கற்களை அப்படியே பதித்து விட முடியுமா? தரைப்பரப்பில் காரை அல்லது சாந்து இட வேண்டும். அதற்காகும் செலவு? எதற்கு இத்தனை தொந்தரவு? கான்கிரீட் பாலிஷிங் முறையைப் பின்பற்றினால் பலவித வேலைகளைக் குறைக்கலாம். செலவுகளைத் தவிர்க்கலாம்.அதிகப்படி வேலைகளுக்குத் தேவை இருக்காது. செலவும் குறையும்.
சென்னையிலும், கோவையிலும் இந்தப் பணிககண்கவர் தரைகளை அளிக்கும் கான்கிரீட் பாலிஷிங் செய்யும் நிறுவனங்கள் கீழே:
Coimbatore:
M M Associates
No 24, Near Sarathy Provision Store,2nd Street Sivanandapuram, Saravanampatti, Coimbatore - 641035 ,Mob: 9944359071 / 9043228312 ,Web: www.mmassociate.co.in
Chennai:
Civitech (I) P Ltd
No 7, Inner Circular Road, Kilpauk Garden,
Chennai Ho, Chennai - 600001
Ph : 044-26602359,
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2140828
|