மாலைநேர சிற்றுண்டியாக வெகுவாக ரசிக்கப்படுவது சாண்ட்விச். இப்போது கட்டுமானத்துறையிலும் சாண்ட்விச் வந்துவிட்டது. உணவுப் பொருளாக அல்ல, கட்டிடப்பொருளாக. சாண்ட்விச் எப்படி இருக்கும்? இரண்டு பக்கம் ரொட்டித் துண்டுகளும், நடுவில் மசாலாவும் இருக்குமல்லவா? அதே போன்று, இரண்டு பக்கம் ஸ்டீல் Uட்டுகளும், இடையில் பாலியூரிதினும் நிரப்பப்பட்டிருக்கும் பேனல்கள்தான் சாண்ட்விச் பேனல்கள் எனப்படுகின்றன. அயல்நாட்டு தொழிற்நுட்பமான இந்த தயாரிப்புகளை தமிழ்நாடு வரை கொண்டு வந்திருக்கும் நிறுவனம்தான் மெடக்னோ.
மெடக்னோவின் சாண்ட்விச் பேனல்கள் கொண்டு எளிதாகவும், மிக வேகமாகவும், கட்டுமானங்களின் கூரைகள்,பக்கவாட்டுச் சுவர்கள் மற்றும் பார்டீஷியன் சுவர்களை உருவாக்க முடியும். தொழிற்சாலைகள், கிடங்குகள், பெரிய வளாகங்கள் போன்றவற்றை உருவாக்குவதற்கு இந்த சாண்ட்விச் பேனல்கள் மிகவும் பொருத்தமானவை. மேலும், வெப்பநிலையைத் தக்க வைத்துக் கொள்ளும் தன்மையை உடையதால், குளிர்சாதன கிடங்குகள் அமைப்பதற்கு சாண்ட்விச் பேனல்கள் மிகவும் ஏற்றவை.
2007- லிருந்து சாண்ட்விச் பேனல்கள் தயாரிப்பில் ஈடுபட்டுவருகிறது மெடக்னோ. ஸ்ரீபெரும்புதூரில் இதன் தொழிற்சாலை அமைந்திருக்கிறது. 2 மீ. முதல் 15 மீ. வரை பல்வகையான நீளங்களில் மெடக்னோ நிறுவனம் சாண்ட்விச் பேனல்களைத் தயாரிக்கிறது. நாள் ஒன்றுக்கு 6,000 ச.மீ. பேனல்கள் இதன் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. 2008 வரை இந்நிறுவனம் 10 லட்சம் ச.மீ. பேனல்களை பல்வேறு வகையான கட்டுமான உபயோகங்களுக்கு தயாரித்து அளித்திருக்கிறது. தீப்பற்றாத தன்மை, ஸிங்க் கோட்டிங் செய்யப்பட்ட ஸ்டீல், கண்கவரும் வண்ணங்கள் போன்றவை இதன் சிறப்பு அம்சங்களாகும்.
டிவிஎஸ், விப்ரோ, டாடா, ஜிண்டால் போன்ற பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலைகள் மெடக்னோவின் வாடிக்கையாளர்களாக இருக்கின்றன.
METECNO (INDIA) PVT LTD
138/30 2nd floor, Florida Towers
Nelson Manickam Road ,Chennai
Phone: +91 44 45608800
Web Site: www.metecno.in
E-Mail: secretary@metecno.in
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2140760
|