ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொழிற்நுட்பம் நடைமுறைக்கு வருகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு ஏகப்பட்ட கட்டிடப் பொருட்கள் சந்தைக்கு வருகிறது. தரை தொடர்பான கட்டிடப் பொருட்களை எடுத்துக் கொண்டால், டைல்கள், மார்பிள்கள், பேவர் கற்கள், பசும்புல் பேவர்கள் என எக்கச்சக்கமான ஆப்ஷன்கள் நம் முன் கிடைக்கின்றன. ஆனால், அதன் விலை ஒன்றும் அப்படி சிக்கனமாக இருப்பதில்லை.
விலையும் சிக்கனமாக இருக்க வேண்டும். அதே சமயம், கண்கவர் நாகரிகத் தோற்றத்தில் நமது தரைகள் மினுக்க வேண்டும் என்றால் உங்களுக்காகத்தான் இருக்கிறது சிமெண்ட் பேவர் கற்கள். மற்ற நடைபாதைக் கற்களைவிட சிமெண்ட் பேவர் கற்கள் நமது பட்ஜெட்டிற்குள் அடங்குபவை.
சென்னையைச் சேர்ந்த பில்ட்டெக் என்ற நிறுவனம் சிமெண்ட் பேவர் கற்களை தயாரித்து அளிக்கிறது. குடியிருப்புகள் மற்றும் பயன்பாடுகளுக்கு ஏற்ப டிரையஹக்ஸ் (Trihex), டம்பிள்(Dumble), பார்பெக் (Barbeque), ), யூனிஃபேவர்(Unipaver), யஹக்ஸகான் (Hexagon) ஆகிய 5 வகைகளில் 40 மி.மீ, 60 மி.மீ, 80 மி.மீ. அளவுகளில் தயாரிக்கிறது.
போர்டிகோ, வீட்டின் சுற்றுப்புறம், கார்டனிங், நடைபாதை, பிளாட்ஃபார்ம் போன்றவற்றிற்கெல்லாம் பில்ட்டெக் சிமெண்ட் பேவர் கற்கள் மிகவும் ஏற்றவை. இங்கெல்லாம் விலை உயர்ந்த கற்களையோ அல்லது இன்னும் சீப்பாக வாங்கிப் போடலாம் என சிமெண்ட் சிலாப்புகளையோ பயன்படுத்தாமல் சிமெண்ட் பேவர் கற்களுக்கு நீங்கள் முன்னுரிமை தரலாம்.
வீடுதான் என்றில்லை, பெரிய குடியிருப்புகளை அமைக்கும் பில்டர்களும் வெளிப்புறத் தரை பரப்புகளுக்கு ஏறத்தாழ 90% சிமெண்ட் பேவர் கற்களையே பயன்படுத்தலாம். நீச்சல்குளப்பகுதி, பார்க்கிங் ஏரியாக்கள், பொது நடைபாதை, ஜாக்கிங் ட்ராக் போன்ற பல பகுதிகளில் பில்ட்டெக்கின் 40 மி.மீ. அகலமுடைய சிமெண்ட் பேவர் கற்கள் பொருத்தமாக இருக்கும்.
ஹோட்டல்கள், ரெஸ்டாரென்டுகள், ஷாப்பிங்மால் திறந்தவெளிப் பகுதிகளுக்கு பயன்படுத்த பில்ட்டெக்கின் 60 மி.மீ. அகலமுடைய சிமெண்ட் பேவர் கற்கள் பொருத்தமாக இருக்கும். மேலும், தொழிற்சாலை தரைப்பரப்புகள், பெட்ரோல் நிலையங்கள், பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகளுக்கான தேவைகளுக்கு பில்ட்டெக்கின் 80 மி.மீ. அகலமுடைய சிமெண்ட் பேவர் கற்கள் பொருத்தமாக இருக்கும்.
சிமெண்ட் கற்கள்தானே, ஒரே நிறமான கிரே கலரில்தானே கிடைக்கும் என்று எண்ண வேண்டாம். மற்ற பேவர் கற்களைப் போலவே பல நிறங்களில், பல வடிவங்களில் பில்ட்டெக்கின் சிக்கனமான சிமெண்ட் பேவர் கற்கள் உங்களுக்குக் கிடைக்கும்.