கான்கிரீட்டை வெட்டும் எஸ்கவேட்டர்
கட்டுநர்களின் முதல் நண்பன் யாரெனில் வெகு நிச்சயமாக ‘எக்ஸவேட்டர்’ இயந்திரம் என சொல்லலாம். மண் அள்ளும் அல்லது நிரப்பும் பணிகளை மட்டும் அது செய்வதில்லை. அதனுடன் நாம் இணைத்துக் கொள்கிற கருவிகளைப் பொறுத்து அதனை பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். பாரங்களை தூக்க, இறக்க, கான்கிரீட் சிலாப்புகளை அல்லது பிரிகாஸ்ட் பலகைகளை கையாள உகந்த கருவிகளை எக்ஸவேட்டர் இயந்திரத்தில் பொருத்திக்கொண்டால் நமக்குத் தேவையான பயன்பாடுகளை அதில் இருந்து பெறமுடியும்.
மேலும், உடைத்தல், துளையிடுதல் ), அழுத்துதல் (போன்ற பணிகளுக்கு இதை பயன்படுத்தலாம். CAT போன்ற நிறுவனங்கள் எக்ஸவேட்டர் இயந்திரத்துடன் 6 முதல் 10 வரையிலான ஏற்ற துணைக்கருவிகளை எக்ஸவேட்டருடன் அளிப்பர்.
ஆனால், தற்போது எக்ஸவேட்டர் இயந்திரத்தை அறுத்தல் (Saw) பயன்பாட்டிற்கும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். அதாவது, எக்ஸவேட்டர் இயந்திரத்தின் முனையில் 2 மீட்டர் விட்டமுடைய வட்டமான ஸ்டீல் பிளேடு (Steel cutting wheel) ஒன்றை இணைத்து விடுகிறார்கள். இது 300 RPM வேகத்தில் சுழலக்கூடியது. ஹைட்ராலிக்கினால் இதை இயக்க முடியும். இதன் மூலம் கான்கிரீட் கட்டுமானங்களை ‘கேக்’ போல வெட்டி எடுக்கலாம். கான்கிரீட் சுவர்கள், வலிமையான காம்பவுண்ட் கட்டுமானங்களை உடைக்கும் போது அதில் பதிக்கப்பட்டிருக்கும் இரும்பு கம்பிகள் உடைப்பதற்கு ஏதுவாய் இருக்காது. ஆனால், இரும்பு பிளேடு சக்கரத்தின் மூலமாக உடைக்கும் போது அந்த பிரச்சனை இல்லை.
மேலும், வழக்கமான டெமாலிஷன் முறையில் அதிக இரைச்சல் மற்றும் அதிர்வு இருப்பதுண்டு. ஆனால், எக்ஸவேட்டர் - சா முறையில் அது இல்லை. இது தவிர, இரு மிகப்பெரிய நன்மைகள் இரும்பு சக்கர அறுத்தல் முறையில் உள்ளது.
முதலாவது நன்மை :
ஒரு புதிய கட்டுமானத்தை ஒட்டியிருக்கும் பழைய கட்டுமானத்தின் சுவரை இடிக்கும் போது எவ்வளவுதான் கவனமாக வேலை செய்தாலும் பக்கத்து கட்டுமானத்
தின் சுவர் லேசாக சேதமடையும். இந்த தொல்லையை தவிர்க்க வழக்கமான டெமாலிஷ் முறைக்கு பதிலாக எக்ஸவேட்டர் - சா முறை அந்த வேலையை எளிதாக்குகிறது. அடுத்த கட்டுமானத்திற்கு கொஞ்சம் கூட சேதமில்லாமல் அந்த கட்டுமானத்தை மட்டும் தனியே உடைத்துத் தள்ளும்.
இரண்டாவது நன்மை :
ஆல்ட்ரேஷன் மற்றும் ரிப்பேர் வேலைகளுக்கு இந்த துணை கருவி ஏற்றது. உதாரணத்திற்கு, வெகு நீளமான கட்டுமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் தனியே உடைத்து தள்ள வேண்டும் என்றாலோ, கட்டுமானத்தின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி எடுக்க வேண்டும் என்றாலோ இம்முறை மிகவும் ஏற்றது.
மேலும், இது கான்கிரீட் பாளங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையிலும் பயன்படுத்த முடியும். அதாவது, மிக நீளமான கான்கிரீட் பாளங்களை நமக்கு வேண்டிய அளவில் அறுப்பதற்கு இந்த எக்ஸவேட்டர் - சா கட்டர் தேவைப்படும். பணியிடங்களில் கான்கிரீட் பில்லர்கள், உத்திரங்களின் நீளத்தை அல்லது அகலத்தை குறைப்பதற்கும், அறுப்பதற்கும் கூட பயன்படுத்த முடியும். இது பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருந்தாலும் இதை எக்ஸவேட்டர் இயந்திரத்துடன் எளிதாக பொருத்த முடியும்.
எக்ஸவேட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் Steel cutting wheel இணைப்பு கருவியை (இரும்பினாலான அறுக்கும் வீல் சக்கரம்) தருவதில்லை. ஏனென்றால் இதை இயக்குவதற்கான முறை வழக்கமான எக்ஸவேட்டர் முறையில் இருந்து வேறுபட்டது. Steel cutting wheel--யை எக்ஸவேட் டருடன் இணைத்து தரும் பணியை செய்து கொடுக்க மிகச்சில நிறுவனங்களே உள்ளன. அவற்றுள் ஒன்று சீனாவைச் சேர்ந்த DWPL - நிறுவனமாகும். ஷாங்காயில் இதன் தலைமை நிறுவனம் உள்ளது.
இந்தியாவிலும் இதன் சேவை உள்ளது. இதன் முகவரி :
Shanghai DWPL Mining and
Construction Machinery Co Ltd
B-32, 4th floor, Ekta, Opp. fire brigade office. Near Oberoi mall. Goregaon (E). Mumbai-63 .
Tel:9076003100 /9987105168
Contact Person: Vijay Kumar/Kerry
Email : info@Zenithcrusher.com
Web: www.trendsideas.co.in
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2140790
|