கொத்தனாருக்கு கான்கிரீட் குறிப்புகள்

21 ஜனவரி 2025   05:30 AM 04 செப்டம்பர் 2018   04:22 PM


கொத்தனாருக்கு கான்கிரீட் குறிப்புகள்
-----------------------------------------------------

1. சிமெண்டை மணலுடன் கலந்து பூசுபவர் கொத்தனார். அதே நேரத்தில் சிமெண்டை சரியான அளவில் கப்பது எப்படி? சிமெண்ட் கெடாமல் பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து கான்கிறீட் வல்லுனர் ஆலோசனைகளை ஒருவர் தருகிறார், பார்ப்போமா?

நம்பகமான தயாரிப்பாளர் மற்றும் பழக்கமான வியாபாரி மூலம் சிமெண்ட் வழங்கப்படுதல் நல்லது.

 

2. சிமெண்ட் மூட்டையின் மேல், ISI குறியீடு, OPC (ஒபிஸி), PPC (பிபிஸி), PSC (பிஎஸ்ஸி) எனற சிமெண்ட பெயர், தயாரிப்பு வார, தொழிற்சாலை பெயர் இவற்றை சரிபார்க்கவும்.

 

3. எடைபோட்டு சிமெண்டை வாங்குதல் நல்லது. ஒரு மூட்டை 49.5 லிருந்து 50.5 வரை இருக்கலாம்.

 

4. மூட்டைகளின் மேல் இயந்திரத் தையல் இருக்க வேண்டும்.

 

5. ஒபிஸி (OPC) என்றால் சாதாரண சிமெண்ட் 43.53 கிரேடுகளில் கிடைக்கும்.

 

6. பி.பி.ஸி. (PPC) என்றால் பஸோலனா கலந்த சிமெண்ட்

 

7. பி.எஸ்.சி (PறPC) என்றால் ஸ்லாக் (SLAG) சிமெண்ட்.

 

8. HHR, GvR (PPC & PSC) இரண்டும் 43 கிரேடு அளவில் கிடைக்கும். நீடித்த உழைப்பைக் கொடுக்கும். சிறிது மந்தமாக செட் ஆகும். (கெட்டிப்படும்).

 

9. மூன்று மாதத்திற்கு மேல் பழமையான சிமெண்டை உபயோகிக்க வேண்டாம்.

 

10. மூட்டைகளை பலகைகள் அல்லது. பிளாஸ்டிக் விரிப்பின் மேல் நீர் படாமல் வைப்பது சிமெண்ட் கெடாமல் பாதுகாககும்.

 

11. ஈரக்காற்று உப்புக முடியாதவாறு, இடைவெளி விடாமல், மூட்டைகளை அடுக்கி வைக்கவும்.

 

12. திறந்த வெயில் வைக்கப்படும் மூட்டைகளை பிளாஸ்டிக் விரிப்பால் மூடி வைக்க வேண்டும்.

 

13. சிமெண்டின் நிறத்திற்கும், அதன் வலிமையுறும் தன்மைக்கும் எந்த உறவுமில்லை.

 

14. சிமெண்டின் துகள்கள், மிக நுண்ணியதாக (Very Fine) இருந்தால், நிறைய நீர் குடிக்கும் அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும்.

 

15. எல்லா சிமெண்டின் அந்திம வலிமை ஒன்றே. விரைவில் கெட்டியாகும் சிலவகை, நாளடைவில் மந்தமாக கெட்டிப்படும்.

 

16. தொழிற்சாலையிலிருந்து வந்தவுடன் சிமெண்ட் மிகுந்த வெப்பத்துடன் இருக்கும். வெப்ப நிலை 77 டிகிரி சென்டிகிரேடுக்கு மேலிருந்தால் கலவைகள் கெட்டிப்பட, கெட்டிப்பட விரிசல்கள் தோன்றும்.

 

17. ஒரு சோதனை, சிறிய அளவில் செய்து சிமெண்ட் நல்லதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

(அ) சிமெண்டுடன், நீர் சேர்த்து கலந்து, உள்ளங்கை அளவிற்கு, 1 செ.மீ கனத்திற்கு தட்டையான கட்டி செய்யவும்.

(ஆ) 12 மணி நேரத்திற்கு பிரகு, ஈரத்துணியால் மூடவும்.

 

(இ) 24 மணி ஆனவுடன் கைகளில், எடுத்து, இருபெருவிரல்களாலும், மத்தியில் அமுக்கவும்.

(ஈ) உடையுமானால், பரிசோதனைக்குப் பிறகே, சிமெண்டை உயபோகிக்க வேண்டும்.

 

18. வாங்கும்போது, மறக்காமல், பரிசோதனை சான்றிதழ் கேட்டு வாங்கவும்.

 

19. விலையுள்ள சிமெண்டை வீணாக்க கூடாது. சிக்கனமாக உபயோகிக்க வேண்டும்.

 

20. சிமெண்டை கையாளும்போது, தகுந்த மூடியால், மூக்கு வாய் இரண்டையும் பாதுகாத்தல் மிக அவசியம். நுரையீரல் கோளாறுகளை தவிர்த்தல் நலம்.

 

21. கையுறை அணிந்தே வேலை செய்ய வேண்டும்.

 

22. மூட்டைகளை தள்ளுவண்டி மூலம் எடுத்துச் செல்லவும். முதுகில் தாங்குவதால், முதுகுத் தண்டுக்கு ஊறுவிளளையும்.

-ப.சீனிவாசன் (கான்கிரீட் வல்லுநர்)

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2140763