கட்டடத்துறை கேள்வி பதில்கள் - 16
நான் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கொத்தனாரை வைத்து 800 ச.அடியில் வீடு கட்டினேன். அப்போது எனக்கு கட்டு மானத்தில் தண்ணீர் குவாலிடியைப் பற்றி ஒன்றும் தெரியாது. நிலத்தடி நீரை வைத்து கட்டியாகி விட்டது. தற்செயலாக வீட்டுக்கு வந்த என் மகனின் நண்பன் எங்கள் வீட்டு நிலத்தடி நீரை சோதித்து விட்டு இந்த தண்ணீரிலா வீடு கட்டினீர்கள்? என்றான். இதில் 1000 TDS ( Total Dissolved Salt) மேலே இருக்கும் என்றான். உடனடியாக ஆய்வுக்கூடம் சென்று பரிசோதித்தால் இந்த நீர் வீடு கட்டுவதற்கு உகந்ததல்ல என்கிறார்கள். கட்டி முடித்த என் வீட்டுக்கு 5 அல்லது 7 ஆண்டுகளே ஆயுள் என்கிறார்கள்.
இதை ரசாயன முறைகளில் (Building Injection) சரி செய்ய முடியுமா? அல்லது வேறு மாற்று வழிகள் உள்ளதா?
கவலைப்படாதீர்கள். வீடு கட்டும் தண்ணீரில் TDS 1400 வரை இருக்கலாம். TDS 2000 வரை இருந்தால் கூட பெரிய பாதிப்பு உடனடியாக ஏற்படாது. 5 ஆண்டுகளுக்குப் பின் சுவர்ப்பூச்சு உறிந்துவிழுந்தால் (பொடிப் பொடியாக), பூச்சை முற்றிலுமாக எடுத்துவிட்டு - நல்ல நீரில் (TDS 1000க்கு குறைவாக உள்ளது). சிமெண்ட் கலவை 1:5 தயாரித்துப் பூசிவிடலாம். அச்சம் தவிர்.
பதிலளித்தவர் பொறி. அ.வீரப்பன்
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067196
|