சம்மரில் கான்கிரிட் போடும்போது.

23 ஜனவரி 2024   05:30 AM 23 ஆகஸ்ட் 2018   11:46 AM


இனிவருவது கோடைக்காலம்தான். கோடைக்காலம் என்பது கட்டுமானங்கள் கட்டுவதற்கு ஏற்றது என்றாலும், அதிக உறிண காலங்களில் கான்கிரீட்போடுவதில் சில சிக்கல்கள் உள்ளன. அதுபற்றி தெரிந்து கொள்வோம்.
நம் நாடு போன்ற வெப்பப் பிரதேசங்களில் சாதாரணமாகவே வெப்ப நிலை மிகவும் அதிகமாக இருக்கிறது. எனவே, கான்கிரீட் போடும் போது சில தனிப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. 

சிமெண்ட், மணல், ஜல்லி, தண்ணீர் போன்ற வழக்கமான பொருட்களைப் பயன்படுத்தும் போது, வினைகள் (exothermic reactions) காரணமாக அது இறுகி உறைகிறது. சாதாரண சுற்றுப்புற வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது சிமெண்ட் நீர்க்கப்படுவதால் ஏற்படும் வெப்பம் அதிகரிக்கின்றது. இந்த வெப்பநிலையைக் குறைக்க நாம் அதிக கவனம் எடுத்துக் கொள்ளவில்லை  எனில், பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இதுபோல் கான்கிரீட்டில் வெப்பம் அதிகரிப்பதால் மூன்று வகையான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. முதலாவதாக, கான்கிரீட்டில் நீர்த்தும் வெப்பம் அதிகரிக்கும்போது, நீர்த்தும் வெப்பம் காரணமாக வெடிப்பு (heat of hydration temperature cracks) ஏற்படுகிறது கான்கிரீட்டில் மட்டுமல்லாமல் பூச்சுமானத்தில் கூட இந்தவகை வெடிப்பு ஏற்படலாம்.

வெப்ப பிரதேசங்களில், பொதுவாக பகல் நேரத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். எனவே, கான்கிரீட்டிற்குத் தேவையான கருங்கல் ஜல்லி, மணல், தண்ணீர் ஆகியவை மிகவும் சூடாக இருக்கும். இந்தச் சூடான பொருட்களுடன் கான்கிரீட் பலகை (slab) ) வார்க்கும் போது வெப்பம் அதிகமாகி, அதனால் விரிசல் அதிகரிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிண்றது.

இதனைத் தவிர்க்க ஏறு வெயிலில் (அதாவது வெயில் அதிகரித்துக் கொண்டிருக்கும் சமயத்தில்) கான்கிரீட் போடக்கூடாது. எனவே, கான்கிரீட் போடுவதற்கு பிற்பகல் நேரம்தான் சிறந்தது (இரவு நேரத்தில் வெப்பம் குறைந்துவிடும்). அதோடு கருங்கல் ஜல்லி, மணல், தண்ணீர் ஆகியவற்றை நிழலில் சேமிக்க ஸ்டோர் வேண்டும்.

கான்கிரீட் பலகையை வார்க்கும்போது குளிர்விக்கப்பட்ட நீரைப் பயன்படுத்த வேன்டும். வெப்பநிலை அதிகமாக இருந்தால் வெப்பத்தைக் கட்டுப்படுத்த ஐஸ் கட்டியையும் பயன்படுத்தலாம்.
பெரிய அணைகள் போன்ற வேலைகளுக்கு அதிகபொருண்மையிலான கான்கிரீட் போடும் போது (mass concreting) குளிர்விக்கப்பட்ட நீர் அல்லது ஐஸ் கட்டியை பயன்படுத்துவது கூட போதாது. எனவே, கான்கிரீட்டினுள் குழாய்களை வைத்து அவாற்ஷீன் வழியாக குளிர்விக்கப்பட்ட நீரை செலுத்துவர். இந்த குளிர்ந்த நீர், கான்கிரீட்டின் உள்ளே உள்ள வெப்பத்தை கிரகித்து சூடான நீராக வெளியே வரும். மேலே இதுவரை விவரிக்கப்பட்டவை கான்கிரீட்டின் வெப்பத்தை தணிப்பதற்கான இயற்பியல் முறைகள். இதுவிர வேதியியல் முறைகளும் இருக்கின்றன. சாதாரணமாக கான்கிரீட்டின் வெப்பத்தைத் தணிப் பதற்கு இயற்பியல் முறைகளும் அவசியமாகிறது. 

வேதியியல் முறையில் கான்கிரீட்டின் வெப்பத்தைத் தணிப்பதற்கு பொதுவாக இரண்டு வகையான கலவைகள் (admixtures) பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று வேதியியல் கலவைகள் (Chemical admixtures) மற்றது கனிம கலவைகள் (mineral admixtures).வேதியியல் கலவைகள் கான்கிரீட் உறைவதைத் தாமதப்படுத்துகின்றன. எனவே, கான்கிரீட் வெப்பத்தை வெளியிடுவதையும் தாமதப்படுத்துகின்றன. அதனால், வெடிப்புகள் ஏற்படுவது குறைகிறது. இவ்வகை கலவைகள் தாமதப்படுத்திகள் (retarders) அழைக்கப்படுகின்றன.

கனிம கலவைகளில் நான்கு வகைகள் உள்ளன, ஒன்று மெட்டாகெயலின் (metacayaline) எனப்படும் ஒருவகை களிமண். இதுதவிர உமி சாம்பலும், நிலக்கரி சாம்பலும் கனிம கலவைகளாக பயன்படுத்தப்படுகின்றன. கெய்கோ (kaigo) அணுமின் ஆலையைக் கட்டும் போது கான்கிரீட்டில் ஐஸ் கட்டி கூட கலவையாகப் பயன்படுத்தப்பட்டது. கான்கிரீட்டின் வெப்பத்தைத் தணிப்பதற்காக கலவைகளைப் பயன்படுத்தும்போது, பரிசோதனை ரீதியான கலவைகள்  (trial mixtures) வடிவமைக்கப்பட்டு அவற்றை பரிசோதித்து தகுந்த கலவை வடிவமைப்பை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பொதுவாக சிமெண்ட்டின் வகை, சிமெண்ட்டின் நுண்மை (fineness), ஜல்லியின் வகை ஆகிய காரணிகள் கான்கிரீட்டின் உள்வெப்பத்தை பாதிக்கின்றன. எனவே, பரிசோதனை ரீதியான கலவைகளை வடிவமைக்கும்போது இந்தக் காரணிகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நமது நாட்டைப் பொறுத்தவரையில் சாதாரண சுற்றுப்புற வெப்பநிலை 35 டிகிரி சென்டிகிரேடு வரை அதிகரிக்கின்றது. எனவே, கான்கிரீட் போட்டு இரண்டு நாட்களில் இந்த அதிகபட்ச வெப்பநிலை உருவாகின்றது. அனுகூலமான காற்று இந்த வெப்ப நிலையைப் பெருமளவில் குறைக்க உதவுகின்றது.

தட்பவெப்பம் காரணமாக கான்கிரீட்டில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க நீராற்றுதலும் உதவும். நீராற்றுதல் என்பது கான்கிரீட்டின் மீது தண்ணீர் தெளிப்பது போன்ற நடவடிக்கைகளின் மூலம் மேற்
கொள்ளப்படுகிறது. இது போன்ற நீராற்றுதல் இரண்டு வகைகளில் பயனளிக்கிறது. கான்கிரீட் உறைவதற்கு மிகவும் அவசியமான நீர்த்துதல் (hydration)) வேதிவிளளை நிகழ்வதற்கு தண்ணீர் தேவை, ஆவியாவதன் மூலம் கான்கிரீட்டில் உள்ள நீர் விரயமாவதால் அதை ஈடு செய்வதற்கான தண்ணீர் நீராற்றுதல் மூலம் வழங்கப்படுகின்றது.

பொதுவாக, கான்கிரீட் விரைவாக உறையும் போது வெப்பம் அதிகரித்து அதனால் வெடிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டாகிறது. எனவே விரைவாக உறைவதைத் தவிர்க்க வேண்டும். இதற்கு புதிதாக போடப்பட்ட கான்கிரீட்டின் மீது தண்ணீர் தெளிப்பது, ஈர சாக்குகளினால் மூடுதல் போன்ற நடவடிக்கைகள் உதவுகின்றன.

 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067137