நாம் வீட்டைக் கட்டுவதன் நோக்கம் மகிழ்ச்சி ஆகவும் அமைதியாகவும் வாழ்வதற்குதான். சில பல காரணங்களுக்காக வீட்டைக் கட்டும்போதோ அல்லது சில ஆண்டுகளுக்குப்பிறகோ, அதில் குறைபாடுகள் உண்டாகின்றன. புதிதாக கட்டப்படும் குறைபாடுகள் பெரும்பாலும் கோட்பாடு நூல்கள் பிரகாரமோ அல்லது நியதிக்குட்பட்ட விதிமுறைகளை அனுசரிக்காமல் விட்டு விடுவதால் ஏற்படுபவை ஆகும். குறைபாடுகள் என்பது என்ன? கட்டிடத்தின் சில அம்சங்கள் அல்லது அவற்றை உபயோகிக்கும்போது தேவைக்கேற்ப திருப்திகரமாக இல்லாமை இருக்கும் சூழ்நிலைகள் தான் குறைகள் ஆகும்.
பொதுவான சிலகுறைபாடுகள் யாதெனில், விரிசல்கள் அல்லது இடிந்து விழக்கூடிய கட்டுமான குறைபாடுகள், கட்டிடத்தின் பாகங்கள் ஒரே கோட்டில் செங்குத்தாகவும் படுக்கைவசமாக இல்லாமை, போது
மான அளவு நீர் வடியும் அமைப்பு இல்லாமை, காற்றோட்டம், போது
மான வெளிச்சம் இல்லாமை, வெப்பத்திற்கும், ஒலிக்கும் தேவையான தடுப்புதன்மை இல்லாமை, தீயை அனைக்கும் வசதியின்மை, புழு பூச்சிகளின் ஊடுருவல், கரையான் தொந்தரவு முதலியன.
இதில் பூமியே நகருவது அல்லது மண் கீழே இறங்குவதும் அடங்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு அடையாற்றில் நடு ரோட்டில் மண் கீழே இறங்கி பெரிய பள்ளம் உண்டானது நாம் அனைவரும் அறிந்ததே.
மண்ணின் வாகு:
கட்டிடத்தின் அஸ்திவாரம் மண்ணின் மீது தாங்குகிறது .ஆகவே, மண் பலம் பொருந்தியதாக இருக்கவேண்டும். மண்ணின் பலம் அஷீயாமல் அதனை சோதனை செய்யாமல் கட்டிடத்தை எழுப்பிவிடும்போது, அதனால் பல பின்விளைவுகள் உண்டாகின்றன. கட்டிடம் உள்வாங்குகிறது. கட்டிடத்தை எழுப்பிவிட்டால், அதனால் விளையும் எடையின் காரணமாக மண் கீழே இறங்குகிறது. பாரத்தைத் தாங்கமுடியாமல், இந்த நேரத்தில் கட்டுமானத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்து மண்ணை வலுப்படுத்த வேண்டும்.
இதற்கு பல உத்திகள் உள்ளன. இருப்பினும் ஒரு எளிய வழி என்ன வென்றால், வீட்டிற்கு உள்ளேயும்,வெளியேவும் ஒரு மீட்டர் இடை வெளியில் சுமார் 5 ஆடி ஆழத்திற்கு ஆள்துளை குழிகள் போட்டு அதில் ஒரு அடுக்கு மணல், அடுத்த அடுக்கு சுண்ணாம்பு மாஷீமாஷீ நிரப்பவேண்டும். இதனால் மண் ரீயின்ஃபோர்ஸ் (Re-Inforce) ஆகி பலம் பெறுகிறது. இதனால் மண் கீழே இறங்குவதும் தடுக்கப்படுகிறது.
நீர்தேக்கம்:
கட்டிடத்தைச் சுற்ஷீ நீர்தேங்க விடக்கூடாது அவ்வாறு தேங்கியிருந்தால் அதை நீக்கிவிட்டு, கட்டிடத்தைச் சுற்ஷீ கல்லாலான ஏப்ரான் அமைக்க வேண்டும். இதை சுவற்றோடு ஒட்டின பகுதியில் உயரமாகவும், பின்சாய்வாக, சாலை சமனத்திற்கு அமைக்கவேண்டும். இதனால், கூரையிலிருந்து வழியும் மழைநீர் கட்டிடத்திற்குள் புகாமல் வெளியே ரோடுக்கு வழிந்தோடி விடும்.
நீர் உறிஞ்சும் காரை, செங்கல், மூலம் கட்டிடத்திற்குள் ஈரம் புகுதல்:
கட்டுமானப் பொட்கள் பொதுவாக கேப்பிலரி ( மயிர்த்துளைத் தாக்கம் - தந்துகிக்கவர்ச்சி) ஆக்rன் மூலம் நீர் உஷீஞ்சக்காரணம் , பொருட்களில் ஜல்லடை போல் துவரங்கள் உள்ளளது தான். இதனால், செங்கல்லை ஒரு தொட்டி நீரில் செங்குத்தாக நிறுத்தினால், அது நீரை உறிஞ்சி மேலேற்றுகிறது. (இது அதிலுள்ள ஜல்லடை போன்ற பொத்தல்களைப் பொறுத்தது ஆகும்).
கட்டிடத்திலும் இதே செங்கல் கட்டப்படுவதால் நீரை உட்கிரகித்து மேலே செலுத்துகிறது. இதனைத் தடுக்க செங்கலின் மேல்பரப்பில் தரமான கலவையைக் கொண்டு காற்றுப் புகாதவாறு நன்கு பூச வேண்டும்.
கதவு, ஜன்னல்களிலின் மரசாமான்கள்:
கதவு, ஜன்னல், முதலான மரத்தினால் ஆன பாகங்களை கரையானோ, பூச்சிகளோ அரிக்காமல்இருக்க நல்ல தரமான வார்னிறி , பெயின்ட்களை அடித்து உலரவைத்து, பின்பு பொருத்த வேண்டும். மரச்சாமன்கள் பொருத்திய பாகங்களை எப்போதும் உலர்நிலையிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். அவைகளைப் பொருத்தும் போது மரச்சாமான் பகுதிகளுக்கும் கட்டிடத்தின் பகுதிகளுக்கும் இடைவெளி இல்லாமல், முடிந்தால் எபாக்ஸி மார்டர் ( Morter) பூசி நன்கு அடைக்கவேண்டும்.
கான்கிரிட் வேலைகள்:
கான்கிரிட்வேலைக்காக உபயோகமாகும் உடைகற்கள், மணல், சிமெண்ட், தண்ணீர் ஆகியபொருட்கள் தரமுள்ளவையாக உள்ளதா? என பரிசோதனை செய்ய வேண்டும். சிலநேரங்களில் தர
மற்ற உப்புகள் அதிகம் கலந்து மட்டமான தண்ணீரை கான்கிரிட் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர். சிலபேர் கடல்நீரை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு செய்வதால் கம்பிகள் துரு ஏற வாய்ப்பிருக்கிறது கீழக்கரையிலுள்ள ஒரு பொஷீயியல் கல்லூரி கட்டிடங்களில் கடல்நீரை கொண்டு, கான்கிரிட் தயாரித்து கட்டப்பட்டதால்
சுமார் 5 ஆண்டுகள் கம்பிகள்துருபிடித்து கட்டிடம் இடிந்து விழ ஏதுவாயிற்று.
திருச்சியிலிருந்து ஒர் அன்பர் தனது சொந்த கட்டிடம் கட்டும்போது 1000 ppm உப்புகலந்த தண்ணீரை உபயோகித்து கான்கிரிட் தயாரித்து கட்டிவிட்டதாகவும் தற்போது என்ன செய்ய வேண்டுமென வினவினார். இதனால், எந்த பிரயோஜனமுமில்லலை, 5முதல் 10 ஆண்டுகளுக்குள் கான்கிரிட் துண்டு துண்டுகளாக உதிர்ந்து விழும்போது, கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டும்படி அஷீவுரை கூறினேன், அரைகுறையான விவரங்களைத் தெரிந்து கொண்டு மற்றைய கட்டிடத்தை நகலாக்கி, வீடுகட்டுவதால் சொந்தகாரரின் பணம் விரயமாகிறது. இதுவெல்லாம் நம் எல்லோருக்கும் ஓர் பாடம். மற்றவர்கள் வற்புறுத்தலின் பேரில் அவசரத்தின் நிமித்தம் வீடு கட்டுவது சம்யோஜித புத்திஅல்ல, கட்டும்போது கான்கிரிட் பகாங்களில் விரிசல்கள் ஏற்பட்டால் அதனை எபாக்ஸி கொண்டு அடைத்துவிட்டு
மேற்கொண்டு தொடரவேண்டும்.
டிஸ்டம்பர்:
கட்டிடம் கட்டியவுடனே, சுவரிலுள்ள ஈரம் காய்ந்தவுடன் டிஸ்டம்பர் அடிக்கக்கூடாது. முதலில் வெள்ளையடித்துவிட்டு நன்கு ஈரம் காய்ந்து பிறகு டிஸ்டம்பர் அடிக்க வேண்டும்.
இல்லையயனில், ஈரம் உள்ளே தங்கியிருந்து நாளடைவில் உருவிவிழ நேரிடும்.நல்ல தரமான பொருட்கள், தரமான வேலையாட்கள், கோட்பாடு நூலின்படி கட்டிடம் கட்டப்படும்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067142
|