பர்ஃபெக்ட் ஃபார்ம் ஒர்க்

23 ஜனவரி 2024   05:30 AM 22 ஆகஸ்ட் 2018   06:32 PM


கட்டுமானப் பணிகளில் தளம் அமைக்கும் போது வடிவச் சட்டங்கள் (form work), தாங்கு முட்டுகள் (shores) சாரங்கள் (scaffolding) ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. தேவையான வடிவம் மற்றும் அளவுகளில் கான்கிரீட்டை நிலைப்படுத்துவதற்கு வடிவச் சட்டங்கள் தேவைப்படுகின்றன. சட்டங்களை முறையாக அமைத்தால் பல்வேறு சிரமங்களை தவிர்க்கலாம். இதுபற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.

 

சட்டங்கள் முதலில் தம்மைத்தாமே தாங்கும் சக்தி உடையதாக இருக்க வேண்டும். அடுத்ததாக கான்கிரீட்டிற்கு வலுவூட்டப் பயன்படும் கம்பிகளின் எடையையும் புத்தம புதியகான்கிரீட்டின் எடையையும் தாங்கக்கூடியதாக இருக்கவேண்டும். மேலும், கான்கிரீட் தளம். அமைக்கும் பணியாளர்கள், பணியின்போது ஏற்படும் அதிர்வுகள், எந்திரங்கள் போன்றவற்றின் எடையையும் தாங்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

 

ஆகவே, சட்டங்கள் அமைக்கும்போது இத்தனை அம்சங்களையும் கருத்தில் கொண்டு கவனமாக செயல்படவேண்டும். பொதுவாக சவுக்குக் கம்புகள் அல்லது இரும்புக் குழாய்களை சாரம் அமைக்கப் பயன்படுத்துவதுண்டு.

 

வேலையாட்கள், அவர்கள் பயன்படுத்தும் கருவிகள், கட்டுமானப் பொருட்கள், சுமைகள் ஆகியவற்றைத் தாங்கும் மேடைகளாக சாரங்களை அமைக்கவேண்டும். வடிவச் சட்டங்களை கவனமாக அமைக்க வேண்டும். அப்போதுதான் கட்டுமானம் சிறப்பாக அமையும். வடிவச் சட்டங்களில் உள்ள குறைகள் கான்கிரீட்டில் பள்ளங்களை ஏற்படுத்திவிடும்.

 

வடிவச் சட்டங்களில் நீர்க்கசிவு ஏற்படக்கூடாது. அவை சமமாகவும் ஒரே சீராகவும் இருக்க வேண்டும். நீர்க்கசிவு ஏற்பட்டால் கான்கிரீட்டின் பலம் குறைந்து விடும். 1 விழுக்காடு நீர்க்கசிவு ஏற்பட்டால் கான்கிரீட்டில் 10 விழுக்காடு பலவீனம் அடையும்.

 

வடிவச் சட்டங்களை முறையாக அமைக்கவில்லை என்றால் கான்கிரீட் முட்டுகளைத் தளர்த்தும்போது சரியான வரிசைக் கிரமத்தில் தளர்த்த வேன்டும். அதாவது கேண்டிலிவர் (Cantiliver) முனையிலிருந்து முட்டை தளர்த்தவேண்டும். இல்லாவிட்டால் கேன்டிலிவர் மத்தியில் உடைந்து விடும். வடிவப்பணிகளில் கடைசியாக செய்யப்படுவது தளர்த்துதல் ஆகும்.

 

ஆனால் அதுதான் முக்கியமான நடவடிக்கை. முட்டுகளை தளர்த்துவதைக் கருத்தில்கொண்டு அதற்கேற்ப வடிவச் சட்டங்களைச்செய்ய வேண்டும். அப்போதுதான் தளர்த்தும் செயல்பாட்டை கடைசியில் செம்மையாகச் செய்ய இயலும். வடிவச் சட்டங்களை அமைக்க ஒரு கட்டடத்தை கட்டி முடிக்கும் நேரத்தில் 50 விழுக்காடு நேரம் ஆகிறது. இது கட்டடத்தின் செலவில் 20 விழுக்காடு எடுத்துக் கொள்கிறது.

 

கட்டுமானத்தில் சில குறைகள் ஏற்படும். தேன் கூட்டில் உள்ள துவாரங்களின் வடிவில் கான்கிரீட்டில் வெற்ஷீடங்கள் உருவாகும். இதனுள் காற்றுப் புகுந்து கான்கிரீட்டில் உள்ள கம்பிகள் துருப்பிடித்து வலுவிழந்து விடும். இம்மாதிரி குறைபாடுகள் கான்கிரீட்டில் ஏற்பட்டால் கட்டடம் சீக்கிரம் வலுவிழந்துவிடும். முறையாக வடிவச் சட்டங்களை அமைத்தால் கான்கிரீட் மீது பூச்சு வேலை செய்ய வேண்டிய அவசியம் கூட இல்லை. 

சட்டங்கள் குறையுடையதாக இருந்தால் கான்கிரீட்டின் தோற்றப் பொலிவை சரிப்படுத்த அதிகப்படியான காரியங்களைச் செய்ய வேண்டிய அவசியம் கூட இல்லை, சட்டங்கள் குறையுடையதாக இருந்தால் கான்கிரீட்டின் தோற்றப் பொலிவைச் சரிப்படுத்த அதிகப் படியான காரியங்களைச் செய்ய வேண்டியதிருக்கும். இந்த மாதிரி
கான்கிரீட்டை ஃபார்ம் ஃபினிஷ் கான்கிரீட் என்று கூறுவார்கள். ஃபார்ம் ஃபினிஷ் செய்தால் பூச்சு வேலைக்காக கான்கிரீட்டின் மேற்பரப்பை வெட்டிரும்பு வைத்து கொத்துவதை தவிர்க்கலாம். பூச்சு வேலை செய்வதற்காக கற்காரையின் மேற்பரப்பை உடைப்பது சரியல்ல.

 

இந்த வடிவச் சட்டங்கள் பொதுவாக தச்சர் செய்யும் வேலை. சச்சர்கள் முறையாக பயிற்சி ஏதும் பெறாதவர்கள். அனுபவத்தின் அடிப்படையில் தான் பணி செய்கிறார்கள். ஆகவே, அவர்கள் செய்யும் பணிகளை கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

 

எடைகளைத் தாங்ககுவதற்கு ஏற்ற வகையில் சாரம் அமைத்து குறுக்குக் கட்டை வைத்து தாங்கச் செய்வார்கள். தவறாக மேடைகள் அமைத்ததால் சமீபத்தில் விபத்துகளும் உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

 

ஆகவே, இந்த மேடையை சரியாக அமைப்பது மிகவும் முக்கியம். மூன்று அடுக்கு ஒரு சமச்சீர் குறுக்குச்சட்டமும் கடைசி பகுதியில் ‘மு’ குறுக்குச்சட்டமும் அமைப்பது மிகவும் அவசியம். செங்குத்தான கம்பங்களை குறுக்குச் சட்டம் அமைத்துக் கட்டுவது முக்கியம். இதனால் கட்டட வேலை நடைபெறும்போது காற்று அடித்து சேதம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. சாதாரணமாக ஒரு வீட்டில் இருக்கிறது. மேலும் அந்த தளம் முழு பலத்தை அடைந்திருக்காது. கான்கிரீட் சாதாரண
மாக முழு பலம் அடைவதற்கு 28 நாட்கள் ஆகும். ஆகவே, இதற்கு முன் சாரத்தைத் தளர்த்தினால் கான்கிரீட் பழுதடைய வாய்ப்புள்ளது. அப்படி சாரத்தைத் தளர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் கியூப் (cube) சோதனையின் மூலம் கான்கிரீட்டின் பலத்தைப் பரிசோதித்த பிறகுதான் சாரத்தைத் தளர்த்த வேண்டும்.

 

பொஸ்ஸலோனா சிமெண்டைக் கொண்டு தளம் அமைத்தால் அது பலம் அடைவதற்கு 28 நாட்கள் போதாது. ஆகவே, சார முட்டுகளை நீண்ட நாட்கள் தளர்த்தாமல் இருக்க வேண்டியிருக்கும். சில சமயங்களில் பலம் அடைய 90 நாட்கள் கூட ஆகலாம். எனவே, கியூப் சோதனை செய்து பலத்தை உறுதி செய்த பின்னர் சார முட்டுகளை தளர்த்த வேண்டும்.

பல அடுக்கு மாடிக் கட்டடங்களைக் கட்டும்போது, சார முட்டுகளை ஒன்று அல்லது இரண்டு அடுக்குகளில் சுழற்சி செய்வதுவழக்கம். இவ்வாறு சுழற்சி செய்வதால் சில சமயங்களில் தளம் விரிசல்விட வாய்ப்புள்ளது. எடையைக் கணக்கிட்டு தளத்தின் விரிசல் பலத்தை அறிந்து பிறகுதான் முட்டுகளைத் தளர்த்தகவேண்டும்.

 

முட்டுகளைத் தளர்த்தும்போது சரியான வரிசைக்கிரமத்தில் தளர்த்தவேண்டும். அதாவது கேன்டிலிவர் (Cantiliver)) முனையிலிருந்து முட்டை தளர்த்தவேண்டும். இல்லவிட்டால் கேண்டிலிவர் மாத்தியில் உடைந்து விடும். வடிவப்பணிகளில் கடைசியாக செய்யப்படுவது தளர்த்துவதை கருத்தில்கொண்டு அதற்கேற்ப வடிவச் சட்டங்களைச் செய்யவேண்டும்.

 

அப்போதுதான் தளர்த்தும் செயல்பாட்டை கடைசியில் செம்மையாகச் செய்ய இயலும். வடிவச்சட்டங்களை அமைக்க ஒரு கட்டடத்தை கட்டி முடிக்கும் நேரத்தில் 50 விழுக்காடு நேரம் ஆகிறது. இது கட்டடத்தின் செலவில் 20 விழுக்காடு எடுத்துக் கொள்கிறது. பல இடங்களில் இந்த வடிவச்சட்டங்கள் முறையாக செய்யப்படுவதில்லை. இருக்கும் பலகையைவைத்து அமைத்துவிடுகிறார்கள். இதனால் கான்கிரீட் வடிவம் ஒழுங்கற்று அமைந்துவிடும்.

 

சரியாக வடிவமைத்த வடிவச் சட்டங்களைப் பயன்படுத்தினால் சீரான பரப்பு கிடைப்பதுடன், பரப்பை சமப்படுத்துவதற்கான செலவையும் குறைக்க முடியும். இதனால் கட்டட உரிமையாளரும் பயனடைவார்கள்.

 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067124