கட்டிடத்துறை ஏன்? எப்படி? எதற்கு?

23 ஜனவரி 2024   05:30 AM 22 ஆகஸ்ட் 2018   03:30 PM


கட்டிடத்துறை ஏன்? எப்படி? எதற்கு? - 2

 

கேள்வி: நான் ஒரு சிவில் பொறியியல் பேராசிரியர், இணையதளங்களிலும், சில கட்டிட பத்திரிகைகளிலும் ஏராளமான கான்கிரீட் ஆய்வுகளை நாள்தோறும் நான் படிக்கிறேன். அதில், சிமெண்ட் உபயோகத்தை குறைக்கவல்ல வழிகளாக இளநீர் மட்டை, கரும்பு சக்கை, முட்டை ஓடு, மரப்பிசின் போன்றவற்றின் மூலம் கான்கிரீட்டினை தயாரிக்கலாம், என்பதை படிக்கும் போது இதெல்லாம் உண்மையா? சாத்தியமா? என்ற ஐயம் ஏற்படுகிறது. இதெல்லாம் நடைமுறை சாத்தியமாக இல்லையயன்றால் எதற்கு இத்தனை வீண் ஆய்வுகள்?

-திரு. அகிலன், எம்.இ, திருச்சி

பதில்: ஒரு சிவில் பொறியியல் பேராசிரியராகிய தங்களுக்கே ஆய்வுகளின் மீது - அவற்றின் பயன்பாடு பற்றிய அய்யம் வந்திருப்பது ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது.

 

வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் - 100 ஆய்வுகளை 10/20 ஆண்டுகள் நடத்திய பின்பு ஏதோ ஒரு புதிய உண்மை கண்டுபிடிப்பு தெரிய வருகின்றது. ஏவுகணைத் துறையில் DRDO அமைப்பில் DR. APJ அப்துல்கலாம் அவர்கள் நடத்திய பல ஆய்வுகள், சோதனைகள் தொடக்கத்தில் தோல்வியில் முடிந்து பின்னரே வெற்றிபெற்றன; இன்றைக்குப் பெரும் பயன் தருகின்றன. அதைப்போல - கட்டுமானப் பொறியியல் துறையிலும் பல்வேறு ஆய்வுகள், சோதனைகள் நாள்தோறும் செய்யப்படுகின்றன. குறிப்பாக குறையிடைக் காங்கிரீட், எரிசாம்பல் கலந்த சிமெண்ட் வேதியியல் கூட்டுப் பொருள்கள்,

மண் படு செயற்கை இழை வலைகள் (Geosynthe
tics), upvc சன்னல்கள், FRP, Double walled polycarbon
ate sheets, PEB industrial Buildings - Tensile structures - Domes முதலியவை எல்லாம் தொடர் ஆய்வுகளின் பயன்களே. எனவே, ஆய்வுகள், சோதனைகள் எல்லாம் வீண் என்று கருத வேண்டியதில்லை.

 

தாங்கள் தெரிவித்துள்ள தேங்காய் நார் மட்டை, கரும்புசக்கை, முட்டை ஓடு, மரப்பிசின் போன்றவை கொண்டு உறுதியான காங்கிரீட்டை (இன்றைய M25 / M30 / M40 தரமுடையவைகளை) தயாரிக்க இயலாவிட்டாலும், இவற்றின் குறிப்பிட்ட அளவு சேர்க்கை காங்கிரீட்டின் இழுவிசை ((Tensile strength) யினை கூட்டிட - சிமெண்ட் கலவை - காங்கிரீட் மேற் பரப்பில் ஏற்படும் சுருக்க விரிசல்களைத் தடுத்திடப் பெரிதும் பயன்படுகின்றன.
இருந்தாலும் கூட எழுத்துக்களின் (meta theoretical propositions alone) அடிப்படையில் செய்யப்படும் சோதனைகள் (without taking the ground reality) பெரும்பாலும் பயன்படுவதில்லை. Laurey Baker கட்டடக்கலை உள்ளூர் கட்டு மானப் பொருள்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவைதான். ஆனால் அவற்றைப் பலரும் கடைப்பிடிப்பதில்லையே.

 

எனவே, சிவில் பேராசிரியரான தாங்களே ஆய்வுகளுக்குத் தடை போடாதீர்கள்.

பதிலளித்தவர் : பொறி அ. வீரப்பன் 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067123