உலகின் வெகு நீளமான கேன்டிலிவர் பாலம்

23 ஜனவரி 2024   05:30 AM 22 ஆகஸ்ட் 2018   12:28 PM


கேன்டிலிவர் எனப்படும் எவ்வித தாங்கு தூணும் இல்லாமல் நீட்டிக் கொண்டிருக்கும் உத்திரங்களை எவ்வளவு நீளம் கட்டலாம்? என உலக ஆர்க்கிடெக்ட்கள் இடையே ஒரு மெளன போட்டி நிகழ்கிறது.  நமக்கு தான் தெரியவில்லை.  4மீ தொடங்கி 10மீ, 20மீ வரை தாங்கு தூண்கள் இன்றி  நீட்டிக் கொண்டிருக்கும் உத்திரங்கள் உலகம் முழுக்க பல்வேறு கட்டுமானங்களில் பயன்படுத்தப்படுகின்றன.  சாதாரண பால்கனி தொடங்கி, குடியிருக்கும் தளங்கள், ரெஸ்டாரண்டுகள் கூட இது போன்ற கேன்டிலிவர்களின் மீது அமைகின்றன.  இதில் வித்தியாசமாக நம்மைக் கவரும் கான்டிலிவர், ஊடகங்களிலும் பார்ப்பதுண்டு.
 

ஆனால், இங்கிலாந்தில் இந்த கான்டிலிவர் கான்செப்டை வைத்து ஒரு பாலத்தையே கட்டியுள்ளனர்.  மே 2017-ல் திறக்கப்படவுள்ள இந்த பாலத்தின் அடிப்பாகத்தில் எந்த ஒரு தாங்கு தூண்களும் இல்லை.  கீழே ஓடும் ஆற்றில் படகு போக்குவரத்து நடைபெற உள்ளதாக அடிப்பாகத்தில் தாங்கு தூண்களை தவிர்த்து விட்டு சஸ்பென்rன் முறையில் இரும்புக் கயிறுகள் கொண்டு ஒரு நிலையான கான்டிலிவர் பாலத்தையே கட்டிவிட்டார்கள் இங்கிலாந்து பொறியாளர்கள்.  தலா 16மீ நீளமுடைய இரு கான்டிலிவர் பலகைகளை வைத்து இந்த 32மீ நீள பாலத்தை வடிவமைத்துள்ளனர்.  750டன் எடை வரை இந்தப் பாலம் தாங்கக்கூடியது.
 

Queensferry crossing  என்ற பெயருடைய இப்பாலம் உலகிலேயே மிக நீளமான கான்டிலிவர் பாலம் என்கிற கின்னஸ் சாதனையும் பெற்றுவிட்டது.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067130