கட்டிடத்துறை ஏன்? எப்படி? எதற்கு? - 1

23 ஜனவரி 2024   05:30 AM 22 ஆகஸ்ட் 2018   12:02 PM


கட்டிடத்துறை ஏன்? எப்படி? எதற்கு? - 1

வீடு கட்டும்போது ஆங்காங்கே கனமான சுவர்களுக்கு 
பதிலாக, கிரில், ஜன்னல்கள் வைத்தால் கட்டுமானச் செலவு குறையும் என்பது சரியா? அப்படி செய்யலாமா?
ரம்யா,கல்லூரி மாணவி, ஆவடி

 

நீங்கள் தெரிவித்துள்ள கருத்துரை யார் சொ.

ன்னது? கட்டிட மேஸ்திரியா (அ) கட்டடம் கட்டுனரா? இல்லை உங்கள் கல்லூரிப் பேராசிரியரா? எதில் எந்தவகையான கட்டுமானப் பொருளான கிரில் மற்றும் சன்னல்களை வைக்கப் போகிறீர்கள் எப்படி இருந்தாலும் கனமான சுவர்களுக்குப் பதிலாக கிரில் மற்றும் சன்னல்களை அமைத்தால் கூடுதலாகவே செலவு ஆகும் எ.கா 5’0'’ அகலமும் 4’6'’ உயரமும் உள்ள ஒரு சன்னல் அமைக்க கீழ்கண்ட செலவாகும்.

 

UPVC - சன்னல் - யூவி. 15.000/-
Aluminium Glassed சன்னல் மற்றும் கிரில் வைத்தால் ரூபாய் 4000 முதல் ரூ 5000 வரை ஆகும்.

 

பாதியாக செங்கல் சுவரை (9'’) கட்டினால், சுவர் பூச்சு வேலை + வண்ணப்புச்சு எல்லாம் சேர்த்து ரூ 3200 மட்டுமே. 
எனினும் ஒரு கட்டிடத்தில் போதுமான வெளிச்சமும், காற்றோட்டமும் வர கிரில் வைத்து சன்னல்கள் மற்றும் வென்டிலேட்டர்களை பொருத்த வேண்டியது கட்டாயம்.

பதிலளித்தவர் : பொறி அ. வீரப்பன் 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067140