குட்டீஸ்களுக்கு உங்கள் ஃப்ளாட் பாதுகாப்பானதா?

23 ஜனவரி 2024   05:30 AM 22 ஆகஸ்ட் 2018   10:42 AM


குட்டீஸ்களுக்கு உங்கள் ஃப்ளாட் பாதுகாப்பானதா?
-----------------------------------------------------------------------------------

சென்னை மக்கள் மட்டுமல்ல எந்த ஊர் மக்களும் விரும்பாத சம்பவம் சென்ற மாதம் திருவல்லிகேணியில் நடந்தது. அங்குள்ள ஒரு தனியார் அப்பார்ட்மெண்டில் 12வது மாடியில் இருந்து இரண்டரை வயது குழந்தை தவறிவிழுந்து இறந்தது.

அதி உயரக் கட்டிடங்கள் என்கிற வளர்ச்சியின் பின்னே இது போன்ற தவறி விழும் சம்பவங்கள் என்கிற அபாயம் இருக்கிறது.

 

ஒரு அதி நவீன கட்டிடத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் விபத்துக்கள் வரையறுக்கப்படாத ஒன்று. கதவு இடுக்கில் கைகள் சிக்கிக் கொள்ளுதல், படிக்கட்டுகளில் தவஷீ விழுதல், படிக்கட்டு கைப்பிடிச் சுவர்களின் இடைவெளிகளில் தலை போன்ற பாகங்கள் மாட்டிக் கொள்ளுதல், லிஃப்ட் பள்ளங்களில் விழுந்துவிடுதல், வீட்டில் மேஜைகள், சோபாக்கள், கிச்சன் மேடை
கள் போன்றவற்றிலிருந்து கீழ் விழுதல், ஈரமான தரைகளில் வழுக்கி விழுதல், மின் கசிவு மற்றும் மின் தொடர்பான விபத்துகளில் சிக்குதல் எனக் குழந்தைகளுக்கு பல்வேறு அபாயங்கள் நிகழக் கூடிய வாய்ப்புள்ளன.

 

இந்த அரிய, துயர நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க அடுக்கு
மாடியில் வசிக்கும் பெற்றோர்களும், பன்னடுக்கு 
மாடியினை உருவாக்கும் கட்டிட வடிவமைப்பாளர்கள் மற்றும் கட்டுநர்களும் அவசியம் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் இதோ:

 

பெற்றோர்கள் கடைப்பிடிக்கவேண்டியது:
1. அதி உயர கட்டிடத்தில் ஃப்ளாட் வாங்கி, நகரம் முழுவதையும் பார்க்க விரும்புவது உங்கள் ஆசையாக இருக்கலாம். ஆனால், ஒரு வீடு என்பது உங்களுக்கானது மட்டுமல்ல, உங்கள் குழந்தைகளுக்கும் சேர்த்து தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

2. உங்கள் வீட்டினை உங்கள் குழந்தைகளின் பார்வையில் பார்க்கத் தயாராகுங்கள். நீங்கள் ஒரு இரண்டடி உயரமுடைய தத்தித் தவழும் குழந்தையாக இருந்தால் அந்த வீட்டில் என்னென்ன பாதுகாப்பு குறைவான விrயங்கள் இருக்கும் என பட்டியலிடுங்கள்.

 

3. குழந்தைகளை எந்த வயதினராக இருந்தாலும் தனியாக ஒரு அறையில் இருக்கச் செய்யாதீர்கள்.

 

4. குழந்தைகளின் படிப்பு மேஜை, கட்டில் போன்றவற்றை ஜன்னல் அருகே போடாதீர்கள்.

 

5. ஜன்னல்களின் கதவு கிரில்களின் உட்புறம், அதாவது அறைக்குள்ளே திறந்து மூடுவதைவிட அறைக்கு வெளிப்புறம் திறந்து மூடுதல் உத்தமமானது.

 

6. ஜன்னல்கள் மரம், கண்ணாடி, அலுமினியம் போன்ற எந்த பொருளினால் ஆனாலும் பரவாயில்லை. ஆனால், உறுதியான கிரில்களை பொருத்த மறக்காதீர்கள். (திருவல்லிக்கேணி அடுக்குமாடி குடியிருப்பில், குறிப்பிட்ட வீட்டின் ஜன்னலில் கிரில் கம்பி தடுப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது).

 

7. கட்டுநர்கள் கட்டி ஒப்படைக்கும் வீடு எப்படி இருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் அவசியம் உங்களுக்கு இல்லை. எனவே, குழந்தைகளின் பாதுகாப்பிற்கு ஏற்ப சிற்சில மாற்றங்களை நீங்கள் செய்து கொள்ள வேண்டும்.

 

8. சில வீடுகளில் வீட்டில் நுழைவு வாயிலுக்கு 
எதிரே அருகாமையில் படிக்கட்டுகளோ அல்லது லிஃப்டோ அமைந்திருக்கும். வீட்டில் பெரியவர்கள் ஏதேனும் வேலையில் இருக்கும் போது கதவு திறந்திருந்தால் குழந்தைகள் ஆர்வம் உந்தித் தள்ள, படிக்கட்டுகளுக்கோ, லிஃப்டுகளுக்கோ சென்றுவிடக் கூடிய ஆபத்து உள்ளது.

 

9. நம் குழந்தைகளின் பாதுகாப்புத் தேவை என்பது நம் வீட்டில் மட்டுமல்ல, அடுக்குமாடி குடியிருப்பைச் சுற்ஷீலும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


10. காரிடார், வராண்டா, கார்டன், நீச்சல் குளம், பார்க்கிங் ஏரியா போன்ற பொது இடங்களில் குழந்தைகளுக்கு விபத்து ஏற்படக் கூடிய ஆபத்து இருக்கிறதா? என்பதை ஆராயவேண்டும்.

 

11. நீச்சல் குளங்கள், தோட்டம், விளையாட்டு மைதானம், பார்க்கிங் மற்றும் குடியிருப்புகளுக்கு உள்ளே வாகனங்கள் ஓடும் பாதை ஆகிய இடங்களுக்கு குழந்தைகளை தகுந்த கண்காணிப்பு இல்லாமல் அனுப்புதல் கூடாது.

 

12. பால்கனி என்பது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இடம். ஆனால், அங்கு குட்டை நாற்காலிகள், மேஜைகளைப் போடக் கூடாது. ஆர்வம் காரணமாக அவற்றின் மீது குழந்தைகள் ஏறி நிற்க விரும்பக் கூடும்.

 

13. சில பேர் வீட்டில் பழைய பொருட்கள், உடைந்த மரச் சாமான்கள் போன்றவற்றை பால்கனியில் போட்டு வைப்பார்கள். இன்னும் சிலர் பால்கனியின் ஓரம் பூந்தொட்டிகளை வைத்திருப்பார்கள். இந்த பொருட்களின் மீதெல்லாம் ஏறி குழந்தைகள் கீழே எட்டிப் பார்க்க விழையும் என்பதால் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். தவறி கீழே விழும் ஆபத்து மட்டுமல்ல, மேற்குறிப்பிட்ட பொருட்கள் குழந்தைகளின் மீது விழும் ஆபத்தும் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

 

14. பால்கனி போலவே குழந்தைகளுக்கு ஆபத்து இருக்கும் இடம் வீட்டின் மொட்டைமாடி. குழந்தைகள் தானாகவே படிக்கட்டுகள் மூலமாக மொட்டைமாடிக்குப் போகும் பழக்கத்தை பெற்றோர்கள் உண்டு பண்ணக்கூடாது. உயரம் குறைவானத் தடுப்புச் சுவர்கள் இருந்தால் உயரம் கூட்டக் குடியிருப்புவாசி சங்கத்திடம் முறையிட வேண்டும்.

 

கட்டிட வடிவமைப்பாளர்கள் மற்றும் கட்டுநர்கள் கவனத்திற்கு:

1. அடுக்குமாடி குடியிருப்பு என்பது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கானது என்கிற மனப்பான்மையுடன் தான் ஒரு கட்டிடத்தை வடிவமைக்க வேண்டும்.

 

2. படிக்கட்டு கைப்பிடிச் சுவர் என்றாலும், பால்கனி கைப்பிடிச் சுவர் என்றாலும் நான்கு அங்குலத்
திற்கு மேல் எந்த இடத்திலும் இடைவெளி இருக்கக் கூடாது.

 

3. வாடிக்கையாளர்கள் அதாவது வீட்டின் உரிமையாளர்கள் கேட்டாலும் கூட, கிரில்கள் இல்லாத ஜன்னல்களைப் பொருத்தக் கூடாது.

 

4. உங்களிடம் வீடு வாங்கும் வீட்டின் உரிமையாளர்களின் வீட்டில் குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை, பிற்காலத்தில் அவர்களிடமிருந்து வீடு வாங்குபவர்களுக்கு குழந்தைகள் இருக்கலாம். எனவே, நீங்கள் உருவாக்கும் அனைத்து வீடுகளும் நூறு சதவீதம் குழந்தைகளின் பாதுகாப்புக்கானவையாக இருக்க வேண்டும்.

 

5. காண்பதற்குக் கண்களைக் கவரும் டிசைன் என்பதற்காக வீட்டின் முகப்போ, பால்கனியோ அதிக
திறப்புகள் கொண்ட டிசைனாக இல்லாமல் இருக்க வேண்டும்.

 

6. சில வீடுகளில் பால்கனி தரையும், பால்கனி தடுப்புச் சுவரும் சேரும் இடங்களில், மூலைகளில் சிறு சிறு இடைவெளிகள் வைத்திருப்பார்கள். இதை பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் குழந்தைகளின் கை கால்கள் மாட்டிக் கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது.

 

7. ஒரு குடியிருப்புக் கட்டிடம் என்பது சராசரி உடற்தகுதி மிக்கவர்களுக்கு மட்டுமன்ஷீ குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய அனைவருக்கும் ஏற்புடையதாக வடிவமைக்கப்பட வேண்டும்.

 

8. கட்டிடத்தின் ஒவ்வொரு பாகமும் இந்திய
கட்டிட விதிகள் மற்றும் ஐ.எஸ் கோட்பாட்டின் வரையறைபடியே கட்டப்பட வேண்டும்.

 

9. படிக்கட்டுக் கைப்பிடித் தடுப்புகள், சுவர்களாக இல்லாமல் கிரில்களாகப் பொருத்தும் போது அதிக இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

10. பார்க்கிங் ஏரியாக்கள் மற்றும் வாகனங்கள் ஓடும் பாதைகளில் ஆங்காங்கே ஸ்பீட் பிரேக்கர்கள் வைக்கப்படவேண்டும்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067139