மோனோலித்திக் தொழில் நுட்பம்
தமிழகத்தில் முதன் முறையாக, செங்கல், ‘ஹாலோ பிளாக்’ போன்ற கற்களை பயன் படுத்தாமல்,
‘மோனோலித்திக்’ தொழில் நுட்பத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட குடிசை மாற்று வாரியம் திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின், ‘அனைவருக்கும் வீடு’
திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ள வீடுகளுக்கு மோனோலித்திக் ஏற்ப்புடையதாக இருக்கும் என
எதிர் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், 13 லட்சம் புதிய
வீடுகள் கட்ட வேண்டும்; இதற்கு, 63 ஆயிரம் கோடி ரூபாய் தேவை. குறைந்த செலவில், அதிக
எண்ணிக்கையிலான வீடுகள் கட்ட, ‘பிரீபேப்’ எனப்படும், முன் தயாரிப்பு கட்டுமான தொழில்நுட்பத்துடன், வேறு புதிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த வேண்டி உள்ளது.
அதனால், செங்கல், ஹாலோ பிளாக் இல்லாமல், மோனோலித்திக் முறையில், புதிய குடியிருப்பு திட்டங் களை செயல்படுத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான வழிமுறைகள் குறித்து அரசு பொறியாளர்கள் ஆலோசித்து வருகிறார்கள். அரசின் ஒப்புதல் பெற்று, மோனோலித்திக் தொழிற்நுட்பம் விரைவில் பயன்படுத்தப்படலாம்.
கம்பி, கான்கிரீட் மட்டுமே!
கம்பிகளை உள்ளீடாக வைத்து, கான்கிரீட் கலவையை பயன்படுத்தி சுவர்கள் எழுப்புவதே, மோனோலித்திக் முறை. அமெரிக்காவில், 1908ல் முதன்முறையாக, மோனோலித்திக் முறையில், தாமஸ் என்பவர் வீடு கட்டினார். இதன் பின், ஐரோப்பிய நாடுகளிலும் இம்முறை பிரபலமானது. தமிழகத்தில் குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்கள், இம்முறையில் கட்டடம் கட்டும் பணிகளை துவக்கி உள்ளன.
அரசு நிறுவனம் என்ற அடிப்படையில், குடிசை மாற்று வாரியம், இதில் முதல் அடி எடுத்து வைக்கிறது.
1 சதுர அடிக்கு செலவு
குடிசை மாற்று வாரிய முடிவுப்படி, மோனோலித்திக் முறையில் கான்கிரீட்டால் ஆன சுவர்களை எழுப்ப, சிமெண்ட், ஜல்லி, மணல், கம்பி, வாட்டர் புரூப் ரசாயனங்கள் பயன்படுத்தப்படும்.
இவ்வகையில், ஒரு சதுர அடி கட்டுமானத்துக்கு, 80 ரூபாய் செலவாகும்.
செங்கல் பயன்படுத்தும் போது, 1 சதுர அடிக்கு, 95 ரூபாயும், ஹாலோ பிளாக் பயன்படுத்தும் போது,110 ரூபாயும் செலவாகும்.
செங்கல், ஹாலோ பிளாக்குக்கான விலையுடன், இணைப்பு, பூச்சு வேலைக்கான கான்கிரீட் கலவை என்ற அடிப்படையில் செலவு அதிகமாகும்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067107
|