உலகின் மிக நீளமான ரயில்பாதை!
சீன மக்களும் இந்தியாவின் வட கிழக்கு நாட்டு மக்களும் நீண்ட காலம் எதிர்பார்த்த உள்கட்டமைப்பு திட்டம் தான் சீனாவில் இருந்து லாவோஸ் நாட்டிற்கு இடையேயான ரயில் பாதை திட்டம்.
சீனாவிற்கு தெற்கே அதாவது, இந்தியாவிற்கு வடகிழக்கே பூட்டான், நேபாள், லாவோஸ் போன்ற குட்டி நாடுகள் உள்ளன. இந்த நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு தருவது சீனாவில் எல்லையில் உள்ள நகரங்கள் தான். ஏராளமான மின்னணு தொழிற்சாலைகளும், குடிசை தொழிற்சாலைகளும் நிறந்திருக்கும் மெங்லா போன்ற எல்லை நகரங்களுக்கு வாரம் ஒருமுறை அவர்கள் வந்து போகிறார்கள்.
ஒழுங்கற்ற சாலைகள், மலைப் பள்ளத்தாக்குகள், சீராக கிடைக்காத எரிப்பொருட்கள் போன்றவை லாவோஸ் போன்ற நாட்டின் மக்களுக்கு கடும் சிரமத்தை தந்து வந்தன. சீனாவின் தெற்கு பிரதேச வளர்ச்சி என்பது மேற்சொன்ன குட்டி நாடுகளில் வசிக்கும் மக்களை நம்பி தான் உள்ளது என்பதை சீனாவும் தற்போது கண்டுக்கொண்டது. எனவே, இந்த நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களை தங்கள் எல்லை நகரங்களோடு இணைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டிருக்கிறது.
இதன் முதற்படியாக லாவோஸ் நாட்டில் உள்ள வியான்டைன் நகர் முதல் சீனாவின் தென்கிழக்கு எல்லை பகுதியில் இருக்கும் மெங்லா நகர் வரை ரயில் பாதை அமைக்க சீனா திட்டமிட்டிருக்கிறது.
இது லாவோஸ், வியான்டைனிலிருந்து வாங் வியங், லாங் பிரபாங் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கிறது. இந்த ரயில் பாதை 413 கிமீ நீளத்திற்கு அமைய உள்ளது. அதில் ஏறத்தாழ 250கிமீ தூரம் வரை மலைகளும், பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதியாகும். இந்த திட்டத்தின் ஆரம்ப விழா சென்ற ஆண்டு கிருத்துமஸ் தினத்தில் லாங் பிரபாங் நகரில் நடைபெற்ஷீருக்கிறது. இந்த திட்டம் முழுமையடைய 5 ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க் கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு 37பில்லியன் யயன் செலவாகும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. லாவோஸ் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, அதை சுற்ஷீ உள்ள மியான்மர், பூடான், வியட்நாம் மக்களுக்கும் சீனா போய் வர சிக்கனமான போக்குவரத்து கிடைக்கும் என்பதால் அவர்களின் உள்ளூர் பொருளாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கலாம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067114
|