வீட்டின் வடிகால் அமைப்பு எப்படி இருக்க வேண்டும்?
* கழிவுநீரும், துர்நாற்றமுடைய வாயுக்களும் சுதாகார வசதி சாதனங்களிலிருந்து வெளியேற்ற வசதி செய்வதோடு, துர்நாற்றமுடைய வாயுக்கள் வீட்டினுள் நுழைவது தடுக்கப்பட வேண்டும்.
* குழாய் இணைப்புகள் கசிவு இல்லாமலும், உடையாமலும், எளிதில் சுத்தம் செய்வதற்கு ஏற்ப அமைக்கப்பட வேண்டும்.குழாய்களிலும், இணைப்புகளிலும் வாயுக்கள் கசியக்கூடாது.
* இரு குழாய்கள் சந்திப்புகளில், கோணம் 45 டிகிரிக்கு குறைவாக இருக்க வேண்டும்.
* கழிவுநீர் திசை மாறும் இடங்களிலும், குழாய்கள் இணையும் இடங்களிலும் சேம்பர்ஸ் இணைப்பு அமைக்கப்பட வேண்டும்.
* வீட்டினுள் கழிவுநீர் குழாய்களை கொண்டு செல்லக் கூடாது.
* தேவையான இடங்களில் வீழ்த்துக்குழிகள் அமைக்கப்பட வேண்டும்.
மழைநீர் சேகரிப்பு :
* மழை பொழியும் அளவு, நம் வீட்டில் உள்ள மழை நீர் சேமிப்பு திட்ட அமைப்பு, செயல் திறன் இவற்றைப் பொறுத்து
மழை நீர் சேமிப்பு அமையும்.தரை வழியாக, மேற்கூரை வழியாக என்று மழை நீர் சேகரிப்பில் இரண்டு முறைகள் இருக்கின்றன. மழை நீரை தயார்படுத்தப்பட்ட வடிகால் பகுதியிலிருந்து சேமிப்புப் பகுதிக்குக் கொண்டு செல்வது தரை வழி சேமிப்பு. இது பெரிய குடியிருப்புகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
* மேற்கூரையில் விழும் மழைநீரை ஒருங்கே திரட்டி நீர்த்தாரைகள் மற்றும் குழாய்கள் மூலம் சேமிப்புப் பகுதிக்குக் கொண்டு செல்வது மற்றொரு வழி. பெரும்பாலும் வீடுகளுக்கு ஏற்ற முறை இதுதான்.
* மேற்கூரையில், அதாவது மொட்டைமாடியில் விழும்
மழை நீர் மொத்தமும் ஒரே குழாய் வழியே தரைக்குக் கீழே அமைக்கப்பட்டுள்ள தொட்டிக்குச் செல்லுமாறு அமைக்க வேண்டும். இந்தத் தொட்டி அமைக்க அதிக இடம் தேவைப்படாது. இந்தத் தொட்டியை ரீசார்ஜ் குழிகள் (Recharge pit) என்று சொல்வார்கள்.
* இந்தக் குழிகளின் அளவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். பொதுவாக 1லிருந்து 2மீ. அகலம், 2லிருந்து 3 மீ. ஆழமுள்ளதாக அமைக்கப்படும். இந்தக் குழிகளில் பெரிய பெரிய கற்கள் (5 20 செ.மீ.), ஜல்லிகள் (5 1 மி.மீ.), மணல் (1.5 2 மி.மீ.) போடப்படும். முதலில் கற்கள் அதன் மேல் ஜல்லி அதற்கு மேல் மணலும் போடப்படுகின்றன. இதனால் மழை நீரோடு சேர்ந்து வரும் வண்டல் மண், குப்பைகள் மேல் பரப்பிலேயே தங்கிவிடும். அதனை எளிதாக அகற்றிவிடலாம்.
* சிறிய கூரைப் பகுதி உள்ள கட்டிடங்களுக்கு ரீசார்ஜ் குழியில் உடைந்த செங்கற்கள் அல்லது கூழாங்கற்கள் போட்டால் போது
மானது. கட்டிடத்தின் கூரையில் இருந்து விழும் மழை நீரை வடிகட்டி வழியாக குழிக்கு செல்லும்படி அமைத்தால் கழிவுகள், இலைகள், தழைகள் குழிக்குள் செல்லாமல் தடுக்க முடியும். சிறிய மண் துகள்கள் குழிக்குள் செல்லாமல் தடுப்பு அமைப்பு ஒன்றையும் அமைக்க முடியும். குழியின் மேல் உள்ள மணல் பரப்பை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இன்னும் கொஞ்சம் கவனமாக முதல் மழை நீர் மட்டும் இந்தக் குறிப்பிட்ட குழிக்குள் விழாமல் மாற்று அமைப்பு இருந்தால் கூடுதல் பாதுகாப்பு.
* மொட்டை மாடியிலேயே சிறியதாக ஓர் இடம் ஒதுக்கி தொட்டி அமைத்து அதில் மழை நீரை சேமிக்கலாம். இதில் கற்கள், மணல் ஆகியவை போட வேண்டியதில்லை. ஆனால் வேறு விதமான ஃபில்டர்கள் அமைக்க வேண்டும். இதற்கு ஏற்ற ஃபில்டர்கள் கிடைக்கின்றன. இந்த நீர் தானாகவே சுத்திகரிப்பாகி நேரடியாக கிச்சனுக்கு வருவதற்கு வசதி செய்துகொள்ளலாம். இதை செய்துகொண்டால் மழைக்காலங்களில் கிடைக்கும் நீர் நம் பயன்பாட்டிற்கு உதவும்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067104
|