சிவில் பொறியாளருக்கு உதவும் அதி முக்கிய 12 ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள்

23 ஜனவரி 2024   05:30 AM 22 ஆகஸ்ட் 2018   10:32 AM


சினிமா டிக்கெட், க்ஷாப்பிங், மேட்ரிமோனியல்,டேட்டிங், சாட்டிங், பத்திரிகை, டி.வி, ஜி.பி.ஆர்.எஸ், ;;;வெதர் என எக்கச்சக்கமான ஆப்ஸ்கள் இறைந்து கிடக்கின்றன. தமிழில் டைப் செய்வதற்கு என தொடங்கி பேட்டரியின் ஆயுளை நீட்டிப்பதற்கு வரை லட்சபோ லட்ச ஆப்ஸ்கள் உள்ளன என்னும்போது, நமது சிவில் பொறியியலுக்கும் பல நூறு உபயோகமான ஆப்ஸ்கள் உள்ளன என்பது பலரும் அறியாத தகவல். அதில் மிக முக்கியமான 12 ஆப்ஸ்களை மட்டும் இங்கே தொகுத்து தந்திருக்கிறோம். இவற்றுள் பெரும்பாலானவை இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நீங்கள் இவற்றை உங்கள் ஆண்ட்ராய்டு போனில் தரமிறக்கிக் கொள்ள இங்கே குறிப்பிட்டிருக்கும் ஆப்ஸ் பெயரை கூகுளில் சென்று டைப் செய்தாலே போதும், மிக எளிதாக அவற்றை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

 

ஆப்ஸ் 1 : Civil Calculator


இது சாதாரண கால்குலேட்டர் அல்ல. சிவில் பொறியியலில் உள்ள அனைத்து விதமான விதிகள், சமண்பாடுகள், ஃபார்முலாக்களுக்கு ஏற்றபடியான பல்வேறு கணக்கீடுகளை சிவில் பொறியியல் பயிலும் மாணவர்களும், பொறியாளர்களும் பயன்படுத்த வேண்டி வரும். அதற்கென தனியாக பணம் கொடுத்து கால்குலேட்டரை வாங்குவானேன்? இலவசமாக கிடைக்கும் இந்த சிவில் கால்குலேட்டர் ஆப்ஸை உங்கள் ஆண்ட்ராய்டில் தரவிறக்கிக் கொண்டால் போயிற்று.
குறைந்தபட்ச வசதிகள் உடைய அடிப்படை ஆண்ட்ராய்டு போன்களிலேயே இது இயங்கும். இடத்தையும் அடைத்துக் கொள்ளாது. இதன் அளவு 595KB.

 

இன்ஸ்டால் செய்ய கிளிக் செய்யுங்கள்.. ;;;

Download Civil Calculator

 

ஆப்ஸ் 2 : Civil Engineering Pack ;;;
முன்னது இலவசம். ஆனால், இதற்கு 650 ரூபாய் செலவாகும். இதன் வேலை அப்படி. சுமார் 574 விதமான கால்குலேட்டர்கள் மற்றும் கன்வெர்ட்டர்கள் செய்யும் வேலையை இந்த ஆப்ஸ் தன்னந்தனியாக செய்து முடிக்கும். 3 எம்.பி அளவுடைய இந்த ஆப்ஸின் மூலமாக பீம்கள், காலம்கள், தூண்கள், கான்கிரீட், சர்வே, மண் முதற்கட்ட வேலைகள், ஸ்ட்ரக்சுரல் பொறியியல் கணக்கீடு, பாலங்கள், நெடுஞ்சாலை மற்றும் மர வேலைகள் போன்ற பலவிதமான கட்டுமானத்துறைப் பணிகளுக்கு ஏற்ற கணக்கீடுகளை இந்த ஆப்ஸின் மூலமாக எளிதாக செய்ய முடியும்.

 

இன்ஸ்டால் செய்ய கிளிக் செய்யுங்கள்.. ;;;

Download Civil Engineering Pack

ஆப்ஸ் 3 :Quick Civil 

இதன் விலை நூற்று சொச்சம்தான். அளவோ 380லுய தான். அடிப்படை சிவில் பொறியாளர்களுக்கான கணக்கீடுகளை படத்துடன் விளக்குகிற வசதிகள் இதில் உள்ளன. சிவில் மாணவர்களின் புராஜெக்டுகளுக்கும் அசைன்மெண்டுக்கும் பயன்படுகிற இந்த க்விக் சிவில் அப்ளிகேக்ஷன் களப்பணியாற்றும் பொறியாளருக்கும் மிக்க பயன் தரும். முன்னர் கண்ட சிவில் கால்குலேட்டர் ஆப்ஸை விட அட்வான்ஸானது இது.

இன்ஸ்டால் செய்ய கிளிக் செய்யுங்கள்..

Download Quick Civil

ஆப்ஸ் 4 : Reinforced Concrete Calculator ;;;

உண்மையில் காஸ்ட்லியான விலை வைத்து விற்க வேண்டிய இந்த ஆப்ஸ் இலவசமாக கிடைப்பது வரவேற்கத் தக்கது. இந்த ஆப்ஸ் களப்பணியில் ஈடுபட்டிருக்கும் சிவில் பொறியாளர்களுக்கு பீம்கள், காலம், சுவர், கான்கிரீட் பலகை போன்றவற்றை அமைப்பதற்கு தேவையான கான்கிரீட் கணக்கீடுகளுக்கு மிகவும் உதவிகரமானது.

இன்ஸ்டால் செய்ய கிளிக் செய்யுங்கள்.. ;;;

Download Reinforced Concrete Calculator

லைவ் லோடு, டெட் லோடு ஆகியவற்றின் லோடு பேரிங் திறனை அக்குவேராக ஆணி வேராக அலசி சொல்லிவிடும். 912MB அளவுடைய இந்த ஆப்ஸை இயக்குவதற்கு உங்கள் போனின் இயங்குதளம் 2.1 யை விட அதிகமாக இருக்க வேண்டும். இதுவரை உலகெங்கும் இந்த ஆப்ஸை 45,000 க்கும் மேற்பட்டோர் தரவிறக்கி பயன்படுத்தி வருகிறார்கள்.

 

ஆப்ஸ் 5 : Concrete Calculator ;;;
கான்கிரீட் தொடர்பான எந்த வேலையாக இருந்தாலும் அதற்கான கணக்கீடுதான் மிகவும் அவசியம். எந்த கட்டிடத்திற்கு, என்ன வகையான கட்டிட உறுப்பிற்கு என்ன அளவில் கான்கிரீட் இடப்பட வேண்டும் என்பதும், கான்கிரீட்டிற்கு தேவையான மூலப்பொருட்கள் எவ்வளவு தேவைப்படும் என்பதும், தம்முடைய கற்றறிந்த பாடம் மற்றும் அனுபவப் பாடம் மூலமாகவும் கணக்கிடலாம். அல்லது கான்கிரீட் கான்கிரீட் கால்குலேட்டர் ஆப்ஸ் மூலமாகவும் கணக்கிடலாம். பாலங்கள், தூண்கள், நுழைவு வாயில்கள், காம்பவுண்டுகள், தரைப்பரப்புகள் போன்ற பலவித உபயோகங்களுக்கும் இதன் கணக்கீடுகள் உதவும்.

இன்ஸ்டால் செய்ய கிளிக் செய்யுங்கள்.

Download Concrete Calculator

 

லைவ் லோடு, டெட் லோடு ஆகியவற்றின் லோடு பேரிங் திறனை அக்குவேராக ஆணி வேராக அலசி சொல்லிவிடும். 912லுய அளவுடைய இந்த ஆப்ஸை இயக்குவதற்கு உங்கள் போனின் இயங்குதளம் 2.1 யை விட அதிகமாக இருக்க வேண்டும். இதுவரை உலகெங்கும் இந்த ஆப்ஸை 45,000 க்கும் மேற்பட்டோர் தரவிறக்கி பயன்படுத்தி வருகிறார்கள்.

 

ஆப்ஸ் 6 : BeemDesign

 
இது ஒரு வடிவமைப்புச் சார்ந்த அப்ளிகேக்ஷன். பலவிதமான கட்டிடங்களுக்கு ஏற்ற பீம்களை வடிவமைக்கும் உத்திகளை சொல்லித்தரும் இந்த அப்ளிகேக்ஷனும் இலவசமாக கிடைக்கிறது. கட்டிட வகைகளையும், பீம்களின் உபயோகத்தையும், எந்த மாதிரியான இடத்தில் பீம்கள் வருகிறது என்பதையும், அப்லோட் செய்துவிட்டால் நீங்கள் எதுபோன்ற பீம்களை வடிவமைக்க வேண்டும் என்பதை உங்கள் உள்ளங்கை போனில் தெரிந்து கொள்ளலாம்.

இன்ஸ்டால் செய்ய கிளிக் செய்யுங்கள்.. ;;;

Download BeemDesign

ஆப்ஸ் 7 :Frame Design 

சிவில் பொறியியல் உலகில் பரபரப்பாக பேசப்படும் முக்கிய ஆப்ஸ் இது. நீங்கள் ஒரு சிவில் பொறியாளராகவோ, ஆர்கிடெக்டாகவே அல்லது பொறியியல் மாணவராகவோ இருந்தால் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இந்த ஆப்ஸ் நிச்சயம் இருக்க வேண்டும். இதன் வேகமான எளிதில் புரியும்படியான கணக்கீடுகளால் இது கட்டிட வடிவமைப்பு பயிலும் மாணவர்களுக்கு கையேடாக திகழ்கிறது.

இன்ஸ்டால் செய்ய கிளிக் செய்யுங்கள்.. 

Download Frame Design 

ஆப்ஸ் 8 : AndTruss2D

மேலே கண்ட ஃபிரேம் டிசைன் வடிவமைப்பு ஆப்ஸின் தம்பியாக இதனை சொல்லலாம். அளவிலும், செயல்பாட்டிலும், பயன்பாட்டிலும் இது ஃபிரேம் டிசைனை ஒத்திருக்கிறது.

இன்ஸ்டால் செய்ய கிளிக் செய்யுங்கள்.. 

Download AndTruss2D ;

 

ஆப்ஸ் 9 : Civil Engineering Dictionary

சிவில் பொறியியல் அகராதி என்றதும் ஆங்கிலம் தமிழ் அகராதி என நினைக்க வேண்டாம். கடினமாக ஆங்கில கலைச்சொற்களை உங்களுக்கு புரியும் வகையில் எளிதான ஆங்கிலத்தில் விளக்கவுரையுடன் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. கட்டுமானத்துறை சார்ந்த பணிகள் மட்டுமன்றி பயன்படுத்தக்கூடிய மூலப்பொருட்கள், துணைப்பொருட்கள், சாதனங்கள், பணி முறைகள், செயல் முறைகள் ஆகியவற்றை இந்த ஆப்ஸின் மூலமாக அறிந்து கொள்ளலாம். ஏறத்தாழ 20,000 க்கும் மேற்பட்ட சிவில் பொறியியல் தொடர்பான சொற்கள் அடங்கிய இந்த அகராதியில் ஏகப்பட்ட வரையறைகளும் உண்டு.
பொழுதுபோக்காக ஃபேஸ்புக் பக்கம் ஒதுங்கும் சிவில் மாணவர்கள் இந்த ஆப்ஸை தங்களது போனில் டவுன்லோட் செய்துகொண்டு அவ்வப்போது சொற்களுக்கான விளக்கங்களை படித்து வந்தால் அவர்களது பொறியியல் அறிவு மிளிரும்.

 

ஆப்ஸ் 10 : Simple & Easy Civil Engineering

சிவில் இன்ஜினியரிங் சிம்பிள் அண்ட் ஈஸி என்கிற இந்த ஆப்ஸ் கட்டுமானப் பொறியாளர் அனைவருக்கும் ஏற்றது. சர்வேயிங், லெவலிங், மேப்பிங் போன்ற எல்லாவகை சிவில் பொறியியல் பணிகள் தொடர்பான செயல் திட்டங்களையும் பணி முறைகளையும் விளக்கமாக எடுத்துரைக்கிறது. மிக சொற்ப விலையில் இணையதளத்தில் கிடைக்கிற இந்த அப்ளிகேக்ஷனை இதுவரை 175 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள் தரவிறக்கம் செய்திருக்கிறார்கள்.

 

ஆப்ஸ் 11 :Engineering Libraries
இதுவும் ஒரு கற்றுக் கொடுக்கும் வகையைச் சேர்ந்த ஆப்ஸ்தான். முற்றிலும் இலவசமாக கிடைக்கும் இந்த ஆப்ஸ் சிவில் பொறியியலின் அடிப்படை விக்ஷயங்களான பல்வேறு விவரங்களை கணக்கீடுகளோடு விளக்கமாக நமக்கு எடுத்துரைக்கிறது.
ஸ்டீல், கான்கிரீட், மண், மரம் மற்றும் அனைத்துவிதமான மூலப்பொருட்களை பயன்படுத்தும் விதத்தையும் கட்டிட வடிவமைப்பு குறித்த பல்வேறு முக்கிய அம்சங்களையும் கணக்கீடுகள் மற்றும் மாதிரி படங்களுடன் விளக்குகிறது.

 

ஆப்ஸ் 12 : Gate Civil Question Bank
இது முழுக்க முழுக்க சிவில் பொறியியல் மாணவர்களுக்கும் அரசு வேலைக்கு முயலும் சிவில் பொறியாளர்களுக்கும் மிகவும் அத்தியாவசியமானது. 2003 முதல் தொடங்கி 2013 வரையிலான சிவில்துறை வினாக்கள் அடங்கிய இந்த ஆப்ஸிற்கு எத்தனை ஆயிரம் கொடுத்தாலும் தகும். ஆனால், இது இலவசமாக கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டிலும் பல நூறு கேள்விகள் அடங்கியுள்ளன. உங்களுக்கு தேவையான ஆண்டை தொட்டால் அந்த ஆண்டிற்குரிய கேள்விப் பட்டியல் விரிகின்றன. உங்களுக்கு தேவையான கேள்விகளை தேர்ந்தெடுத்தால், கேள்வி திரையில் மின்னுகிறது. அதற்குரிய சரியான விடை மறைந்திருப்பதும் நீங்கள் விரும்பினால் மட்டுமே சரியான விடை திரையில் தெரிவதும் என ஒரு அச்சுப்புத்தகத்தை விட பன் மடங்கு மேலானதாக இந்த ஆப்ஸ் விளங்குகிறது. உங்களுக்கு மட்டுமல்லாது சிவில் பொறியியல் பயில்பவர்களுக்கும் சிபாரிசு செய்யலாம்.

 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067108