பெட் பாட்டிலில் கான்கிரீட்

23 ஜனவரி 2024   05:30 AM 20 ஆகஸ்ட் 2018   05:28 PM


பெட் பாட்டிலில்
கான்கிரீட்

தற்காலக் கட்டத்தில், பிளாஸ்டிக்பாட்டில் களை விட, அதிகப்பயன்பாடு களையுடையவை பெட்பாட்டில் கள் ஆகும். (Pசிவீ ன் விரிவாக்கம் Polyethylene Teraphthalate - பாலீ ஈதைலின் டெர்ராப்தலேட்). அவை பயன்படுத்தப்பட்ட பிறகு, மறுசுழற்சிக்கு வழியின்றீ வீணே மலைபோல் தேங்கி, அதே நேரம் சுற்றுச் சூழலை பெட்பாடில்கள் கெடுக்கின்றன..

 

சரி, இந்த பெட்பாட்டிலை உபயோகமுள்ள கட்டுமானப் பொருளாக மாற்றலாமா? அதற்கு வழி இருக்கிறதா? என்று ஒரு புதிய ஆய்வை சென்ற மாதம் மேற்கொண்டோம்.

 

அயல்நாடுகளில் பெட்பாட்டில் கொண்டு வீடு கட்டுகிறார்கள். பெட்பாட்டில் முழுக்க மண் நிரப்பி, அதைக் கொண்டு சுவர் அமைக்கிறார்கள். இங்கு அது போன்ற வேலைகளுக்கு அனுமதி கிடைக்காது என்பதால், பெட்பாட்டில் கொண்டு, கான்கிரீட் தயாரிக்க, அதன் மூலம் பிற உள்ளீடுப் பொருள்களின் பயன்பாட்டினை குறைக்க முயன்றோம். ஏற்கனெவே, நாம் உடைந்த பீங்கான் துண்டுகள், கண்ணாடி துகள்கள்,முட்டை ஓடுகள் போன்ற வீணானபொருட் களைப் பயன் படுத்தி கான்கிரீட் தயாரிக்கும் சோதனைகளை முயன்ஷீருக்
கிறோம் என்பதால், இந்த ஆய்வினையும் உற்சாகமாகத் தொடங்கினோம்.

 

பெட்பாட்டிலை கான்கிரீட் தயாரிக்கப் பயன்படுத்துவது என்றால், பாட்டிலைச் சிறு சிறு துண்டுகளாக்கி, உடைத்து அவற்றை கான்கிரிட்டில் கலப்பதா? அல்லது பாட்டிலை உருக்கி கான்கிரீட்டுடன் கலப்பதா? என்றால்,இரண்டுமே இல்லை.

 

பெட் பாட்டிலை சிறு,சிறு இழைகளாக்கி அதாவது ஃபைபர் இழையாக்கி கான்கிரீட்டில் கலந்து பயன்படுத்துதல் குஷீத்த ஆய்வு இது. இதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குஷீத்த செய்முறையைப் பார்ப்போம்.


கான்கிரிட் உண்மையில் ஒரு பலவீனமான பொருள் குறைவான பளு அழுத்ததிலேயே அதில் விரிசல்கள் ஏற்படுகின்றன. ஆகவே, அதன் திறன் வெகுவாக குறைகிறது. கான்கிரீட்டின் இக்குறையை நிவர்த்திக் கத்தான். அதில் பல விதமான இழைகள் சேர்க்கப் படுகின்றன. இது பொதுவாக யாவரும் அறிந்த விறியம். உதாரணத்திற்கு புரோப்பலீன், இரும்பு முதலானவை. இவற்ஷீல் பொதுவான விrயம் என்ன வென்றால், இழையின் நீளத்
திற்கும் அதனின் குறுக்கு வட்டத்திற்கு உள்ள விகிதாசாரம் ஆகும். பொதுவாக இது 20 முதல் 100 வரையில் இருக்கலாம். அடுத்தது கான்கிரிட்டின் கொள்ளளவில் இழைகள் 5 விழுக்காடுகள் வரையில் இருக்கலாம்.


Pசிவீ பாட்டிலில் குறுக்கே வெட்டினால் வளையல் போன்ற ரிங்குகள் கிடைக்கும். படத்தில் இதனைக் காணலாம். அதே போன்று குறுக்கு வாட்டம் அல்லாமல், பாட்டிலின் நீள வாட்டத்தில் வெட்டும்போது நீளமான இழைகள் கிடைக் கின்றன. படம் 3-ல் இதனை காணலாம்.

 

இப்போது இவ்விரு வடிவங்கள் உடைய இழைகளையும் கொண்டு கான்கிரீட்டில் சேர்த்து பயன்படுத்துகிற செய்முறையை இந்த ஆய்வில் பார்க்கலாம்.செய்முறை இழைகளைக் கொண்டு 0.25 முதல் 1.5 விழுக்காடுகள் வரையில் உடைக்கற்கள், மணல், மற்றும் சிமெண்டுடன் கலந்து நீர் விட்டு, கலந்து 150 மிமீ விட்டமும் 300 மிமீ உயரமும் உள்ள உருளைகள் தயாரிக்க இந்த கான்கிரீட் பயன்படுத்தப்பட்டது. இதில் 15 விழுக்காடுகள் எரிசாம்பல் எனப்படும் ஃப்ளை ஆஷ் சேர்க்கப்பட்டது. நீரின் விகிதாச்சாரம் 0.55 ஆகும்,


நீள வாட்டமுள்ள இழைகளை 0.5, 1.0, மற்றும் 1.5 விழுக்காடுகள் கொண்டு ஜல்லி, மணல் மற்றும் பொதுவான சிமெண்ட் கொண்டு கான்கிரிட் தயாரித்து 150 மிமீ கன ச்செவ்வகங்கள் தயாரிக்கப்பட்டன.


மேற்கூறிய மாதிரிகளை 28 நாட்கள் நீரில் மூழ்க வைத்து பின்பு பளுவேற்றீ சோதனை செய்யப்பட்டது. இச்சோதனையிலிருந்து கான்கிரிட்டின் விசைதாங்கும் பலம் கணக்கிடப்பட்டன.

 

சோதனையின் விளைவுகள்ரிங் சேர்க்காத சாதாராண கான்கிரிட் உருளையின் 28ம் நாள் பலம் 34 னிஸ்ரீழி இருப்பது தெரியவந்தது. இதுவே நீள வச இழைகளுக்கு உருவாக்கப்பட்ட சாதாரண கான்கிரிட்டின் கன செவ்வகத்தின் பலம் 26.35 Mpa ஆக இருந்தது. இதனை உருளை மாதிரிக்கு மாற்றும் போது கான்கிரிட்டின் பலம் 33.78 Mpa ஆகிறது. வெவ்வேறு விதமான இழைகளுக்காக தயாரிக்கப்பட்ட சாதாராண கான்கிரிட்டின் பலம் கிட்டதட்ட ஒன்றாக இருப்பது தெரியவருகிறது.

 

இருவேறு நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்ட சாதா கான்கிரிட்டின் பலம் ஒன்றாக இருப்பது புதிய நம்பிக்கையை உருவாக்குகிறது. 0.5 விழுக்காடுகள் ரிங்குகளை சேர்த்த கான்கிரிட் உருளையின் பலம் 36.96 Mpa இருந்தது.ஆனால், இதனின் கனச் செவ்வக பலம் 28.83 Mpa வாக மாறுகிறது. இதுவே 0.5 விழுக்காடுகள் நீள் இழைகள் சேர்க்கப்பட்ட கான்கிரிட்டின் கனச் செவ்வக பலம் 27.30 னிஸ்ரீழி வாக இருந்தது. ஏறத்தாழ இரு வகைக் கான்கிரிட்டின் பலங்களில் ஒரு ஒற்றுமை இருந்தது.1.0 விழுக்காடு ரிங்குகள் கொண்ட உருளை மாதிரிகான்கிரிட்டின் பலம் 38.51 Mpa இருந்தது அஷீயப்பட்டது.

 

இதுவே,நீளவச இழைகளால் ஆன கனசெவ்வகத்தின் பலம் 27.90 Mpa ஆக இருந்தது தெரியவந்தது. இதனை உருளை வடிவத்திற்கு மாற்றும் போது 35.77 Mpa ஆகும். ஆனல், இந்த பலத்தில் கொஞ்சம் தளர்வு இருப்பது தெரிகிறது.1.5 விழுக்காடுகள் கொண்ட ரிங்கினால் ஆன உருளை கான்கிரிட்டின் பலம் 36.23 Mpa ஆகும். நீள வச இழைகள் கொண்ட கான்கிரீட்டின் கனச்செவ்வகத்தின் 28ம் நாள் பலம், 28.59 Mpa ஆக இருந்தது. இதனை உருளைக்கு சம பலமாக மாற்றும் போது, இதுவே 36.65 Mpa ஆகும்.

 

இவ்வகைக் கான்கிரிட்டின் பலமும் நமக்கு ஒத்து வருகிறது. ரிங்குகளால் ஆன கான்கிரிட்டின் உருளை எவ்வறு உடைந்தது என்பதை படம் 4 ல் காணலாம். சாதாரண கான்கிரிட்டின் உடைப்பை விட இது வித்தியாசமாக இருந்தது.Pசிவீ பாட்டில் இழைகள் கான்கிரிட் தயாரிப்பில் எப்படி பயன்படுத்தலாம் என்பதை இச்சோதனைகள் நம்மை உணர்த்துகின்றன. விணாகும் இந்த Pசிவீ பாட்டில்களை பயனுள்ள கட்டுமானப்பொருளாக 
மாற்றலாம் என்பதனை இக்கட்டுரை தெளிவாக விளக்குகிறது.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067098