கட்டுமானத்தில் பீம்களின் தடிமன் குறித்து முடிவு எடுப்பது எப்படி?

23 ஜனவரி 2024   05:30 AM 17 ஆகஸ்ட் 2018   04:24 PM


 

ஒரு கட்டடத்தின் வடிவமைப்பு குறித்த வரைபடம் தயாரிக்கப்பட்ட உடன், அதில் எத்தனை இடங்களில் தூண்கள், எத்தகைய பீம்கள் இருக்க வேண்டும் என்பதை, பொது மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும். பொறியாளர் பார்த்துக்கொள்வார், ஒப்பந்ததாரர் பார்த்துக்கொள்வார் என இதில் அசட்டையாக இருந்தால், பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். பொதுவாக, தூண்களை இணைக்கும் பீம்களை அமைக்கும் போது, இடைவெளியின் அளவு, தளத்தின் உயரம் போன்ற விrயங்களை துல்லியமாக பார்க்க வேண்டும்.

 

தரை மட்டத்தில் அமைக்கப்படும் பீம்கள், அதன் மேல் அமையும், 10 அடி உயர் சுவரின் மொத்த சுமையை உள்வாங்கி, தூணுக்கு அனுப்ப வேண்டும்.
இதில், பீம்களில் மேல் எவ்வளவு சுமை ஏற்றப்பட உள்ளது என்பதை கணக்கிட்டு, அதன் அளவை தீர்மானிக்க வேண்டும். இந்த அடிப்படையிலேயே பீம்களுக்கான கம்பிகளையும், அதன் சுமை தாங்கும் திறனையும் கணக்கிட வேண்டும்,

 

அதிக எடையை தாங்க வேண்டிய இடத்தில் அமைக்கப்படும் பீம்கள் கூடுதல் தடிமன் கொண்டதாக இருப்பது நல்லது.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067019