சிமெண்ட் பலகையில் வீடு

26 ஜனவரி 2024   05:30 AM 17 ஆகஸ்ட் 2018   04:03 PM


சிமெண்ட் பலகை

 

சிமெண்ட் பலகை என்பது சிமெண்டும் மரமும் கலந்து வலுவூட்டப்பட்டு உருவாக்கப்படும் ஒரு கட்டுமானப் பொருள். யூகலிப்டஸ் அல்லது சுபாவல் மரம் இதற்குப் பயன்படுத்தப் படுகிறது. 80 சதவீதம் சிமெண்ட்டும் 20 சதவீதம் மரச் சட்டமும் சேர்ந்த பொருள் இது. இது பொதுவாக 10 அடி நீளமும் 4 அடி நீளமும் கொண்டவை இந்தப் பலகைகள். 6 மில்லி மீட்டரில் இருந்து 40 மில்லி மீட்டர் வரை கனம் கொண்ட பலகைகள் தயாரிக்கப் படுகின்றன.

 

புயல் தாங்கும் வலிமை
சிமெண்ட் பலகையால் கட்டப்பட்ட இந்த வீட்டின் சிறப்பு, பூகம்பம், புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களைத் தாங்கும் தன்மை கொண்டவை. அதே சமயம் கட்டுமானச் செலவும் குறைவு. மேலும் இந்த சிமெண்ட் பலகைச் சுவர்களை எளிதாகப் பிரித்து தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். கான்கிரீட் வீட்டைக் கட்ட குறைந்தது ஆறு மாதங்களாவது எடுக்கும் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த மாதிரியான சிமெண்ட் பலகையால் கட்டப்படும் வீட்டை ஒரு மாதத்திலேயே கட்டி முடிக்க முடியும்.

 

இரு படுக்கையறை கொண்ட இந்த வீட்டை முழுவதும் சிமெண்ட் பலகையால் சிந்தாமணி கட்டியிருக்கிறார். செங்கற்களோ சிமெண்டோ மருந்துக்கூடப் பயன்படுத்தப்படவில்லை. சிமெண்ட் பலகைகளைப் பொருத்தினால் போதுமானது. “பலகைதானே, எளிதாக உடைத்துவிடலாம் எனப் பயப்படத் தேவை இல்லை. ஓரளவு செங்கல் சுவர் அளவுக்கு உறுதியானதுதான்” என்கிறார் சிந்தாமணி. இந்த வீடுகள் அதிகமாக வெப்பத்தை உள்வாங்காது. அதனால் குளிர்சாதனப் பெட்டிகள் தேவைப்படாது. மரக்கலவைகள் கலந்து கட்டப்பட்டிருப்பதால் தீ பற்றக்கூடும் என அச்சம் ஏற்படக்கூடும். ஆனால் தீ பற்றுவதற்கான வாய்ப்பு இல்லை

 

குறைவான கட்டுமானச் செலவு
இந்தப் பரப்பளவில் உள்ள சாதாரண கான்கிரீட் வீடு கட்டுவதற்குச் சுமார் 50 பணியாளர்கள் தேவைப்படுவார்கள். ஆனால் இந்த வீடு கட்டுவதற்கு ஆறு பணியாளர்கள் வரைதான் தேவைப்படுவார்கள். மரபான கட்டுமான முறையில் சதுர அடிக்குச் சுமாராக ரூபாய் 1,500 வரை ஆகும். ஆனால் இந்த சிமெண்ட் பலகை கொண்டு கட்டினால் ரூபாய் 900 வரைதான் ஆகும். ஆக 600 ரூபாய் அளவில் மிச்சமாகும். மேலும் செங்கல் சுவர் அதிக அடர்த்தி கொண்டதாக இருக்கும். அதனால் கார்பெட் ஏரியா குறைவானதாக இருக்கும். ஆனால் இந்த சிமெண்ட் பலகை கொண்டு கட்டும்போது சுவர்களின் அடர்ந்தி குறைவாகத்தான் ஆகும். நமக்கான கார்பெட் ஏரியா அதிகமாகக் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

 

செங்கல், மணல் போன்ற பொருள்களின் பயன்பாடு இல்லாததால் இந்த வகை வீடு சுற்றுச்சூழலுக்கும் உகந்தது எனலாம். கட்டுமானப் பொருள்கள் தட்டுபாடு உள்ள இந்தக் காலகட்டத்தில் இம்மாதிரியான வீடுகளின் தேவை அவசியம்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2068426