நீங்க இன்டலிஜென்டா? இன்டெலக்சுவலா? அறிவோடு விளையாடு

26 ஜனவரி 2024   05:30 AM 14 ஆகஸ்ட் 2018   05:46 PM


பொதுவாக நாம் அனைவருக்குமே முன் அறிவுடன் (அனிச்சை அறிவு) நுண்ணறிவு (Intellectual) என ஒன்று இருக்கிறது. அதற்கு நமது மனம் விழிப்படைய வேண்டும். ஆனால் பலரது நுண்ணறிவு வேலை செய்வதற்கு முன்பே முன்னறிவு வேலை செய்து விடுவதாலதான் நிர்வாகத்திலும், திட்ட மிடுதலிலும் தவறுகள் ஏற்படுகின்றன.

 

தெரிந்த விடைதானே ! என நினைக்கும் போது தான் நுண்ணறிவை முன்னறிவு ஓவர்டேக் செய்கிறது. புதிர்களில் மட்டுமல்ல, நமது பணிகளிலும் இதே போல் நாம் நடப்பதால் அவசரப்பட்டு தவறாக பணிகளை செய்து விடுகிறோம். இங்கு சில புதிர்களை பாருங்கள். கருத்தூன்றி படியுங்கள். முன்னறிவை ஓரம் வைத்து விட்டு, நுண்ணறிவிற்கு வேலை கொடுங்கள்

 

1) வரதன் என்பவன் முருகனிடமிருந்து கிணற்றோடு கூடிய மனை ஒன்றை விலைக்கு வாங்கினான். கிணற்றை விற்றாலும் அவ்வப்போது கிணற்று நீரை எடுத்துக்கொண்டிருந்தான் முருகன்.கேட்டதற்கு “”மனையை, கிணற்றைதான் உனக்கு விற்றேன். நீரை அல்ல’’ என்றான் முருகன் .

விஷயம் ஊர்ப் பஞ்சாயத்திற்கு போனது, பஞ்சாயத்தினர்கள் முருகனின் அடாவடிதனத்தை புரிந்து கொண்டனர் . இறுதியில் தீர்ப்பை வழங்கினர் தீர்ப்பைக் கேட்டதும் முருகன் அதிர்ச்சியடைந்தான். 
 

“கிணற்று நீர் வரதனுக்கே சொந்தம்’ என்றும், “தான் செய்தது தவறு’ என்றும் கூறி, மன்னிப்பு கேட்டான் . பஞ்சாயத்தினர்கள் சொன்ன தாடாலடி தீர்ப்பு என்னவாக இருக்கும்?

 

2) வீடுகளே இல்லாமல் நகரங்கள் மட்டுமே இருப்பது எப்போது சாத்தியப்படும்?

 

3) ஒரு கட்டுமானப் பணியிடத்தில் 4800 செங்கற்கள் உள்ளன. சமமற்ற 3 குவியலாக அவை கொட்டப்பட்டன.

2 வது குவியலில் எவ்வளவு செங்கற்கள் உண்டோ, அதே அளவு செங்கற்கள் 1 வது குவியலிருந்து எடுத்து 2வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது. 3 வது குவியலில் எவ்வளவு செங்கற்கள் உண்டோ, அதே அeவு செங்கற்கள் 2 வது குவியலிலிருந்து எடுத்து 3 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது. பின்னர் 1 வது குவியலில் எவ்வeவு செங்கற்கள் உண்டோ, அதே அeவு செங்கற்கள் 3 வது குவியலிருந்து எடுத்து 1 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது.2வது , குவியலிலிருந்து எடுத்து 1 வது குவியலுடன் சேர்க்கப்பட்டன.

இப்போது 3 குவியல்களில் செங்கற்கள் சமமான எண்ணிக்கையை காட்டின.எனவே, ஆரம்பத்தில் ஒவ்வொரு குவியல்களிலும் இருந்த செங்கற்கள் எண்ணிக்கை என்ன?

 

4) 9,9,9,9,9,9- இந்த ஆறு 9 களை வைத்துக் கொண்டு 100 - ஐ விடையாக கொண்டு வாருங்கள் பார்க்கலாம்.

(கூட்டல், வகுத்தல், கழித்தல், பெருக்கல் என எதை வேண்டுமானாலும் செய்யலாம்).

 

5) அந்த அதிசய குளத்தில் வளர்கிற ஆகாய தாமரை ஒரே நாளில் இரு மடங்காகும் தன்மையைக் கொண்டது. அதாவது எண்ணிக்கையில் இன்று ஒன்று இருந்தால், நாளை இரண்டாகும். அதுவே, மறு நாள் நான்காகும் அக்குளத்தில் ஆகாய தாமரை ஒன்றை வeர்க்க ஆரம்பித்த 50வது நாளில் சரியாக பாதிக்குளம்வரை ஆகாய தாமரைகள் வளர்ந்து விட்டன. இப்போது கேள்வி இது தான்.
ஆகாய தாமரை கால்வாசி குளம் வரை வளர எத்தனை நாள்கள் ஆகியிருக்கும் ? ஆகாய தாமரை முழுக்குளமும் வளர எத்தனை நாள்கள் ஆகும்?

 

6) பில்டர் ஒருவர் தனது புராஜெக்டின் 120 மீ நீளமுடைய காம்பவுண்ட் சுவருக்கு பெயிண்டிங் செய்ய திட்டமிட்டார். அதற்கென 3 சப்-காண்ட்ராக்டர்களை நியமித்தார். மாரிமுத்து, அசோக், ராம் ஆகிய அந்த 3 சப்-காண்ராக்டர்களும் தலா 4 பேரைக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் வேலைத்திறன் படிமாரிமுத்து காண்ட்ராக்ட் 10 மணி நேரத்தில் 120 மீ நீளம் பெயிண்ட் அடிப்பார்கள்.
அசோக் காண்ட்ராக்டுக்கு 120 மீ நீளம் பெயிண்ட் அடிக்க, 24 மணி நேரம் ஆகும்.

ராம் காண்ட்ராக்ட் ரொம்பவே மந்தம். 20 மீ நீளம் பெயிண்ட் அடிக்க 40 மணி நேரம் ஆக்குவார்கள்.
பில்டர் சீக்கிரம் அந்த வேலையை முடிக்க வேண்டிய நிலையில் இருந்ததால், 3 காண்ட்ராக்டையுமே ஒரே சமயத்தில் ஈடுபடுத்த நினைத்தார்.
ஆனால் பில்டரால், அவர்கள் 3 காண்ட்ராக்டும் இணைந்து காம்பவுண்ட் பெயிண்டிங் வேலையை முடிக்க எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை கணிப்பிட முடியவில்லை... நீங்கள் கணக்கிட்டு பில்டருக்குச்சொல்லுங்களேன்.மேலும், பணி முடியும்போது எந்தெந்த காண்ட்ராக்ட் எவ்வளவு மீட்டர் நீளம் பெயிண்ட் அடித்திருக்கும்?

விடைகளைப் பாக்காமல் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்களேன்..

 

*********************** ************************* ***************

விடைகள் : 


1) வரதன் கிணற்றில் உள்ள நீருக்கு முருகனை வாடகை செலுத்தச் சொன்னார்கள்.

2.வீடுகள் இல்லாமல் நகரங்கள் இருப்பது வரைபடத்தில் சாத்தியப்படும். 
 

3) முதல் குவியல் = 2200 செங்கற்கள், இரண்டாம் குவியல் = 1400 செங்கற்கள்
மூன்றாம் குவியல் = 1200 செங்கற்கள்.

 

4. விடை (9*9)+(9+9) +( 9/9)

81+18+1 =100 

5) கால்வாசி குளம் நிரம்ப 49 நாள்கள், முழுக்குளம் நிரம்ப 51 நாள்கள்.

6) மொத்த வேலை நேரம் = 6 மணி நேரம்.
மாரிமுத்து = 144 மீட்டர் , அசோக் = 60 மீட்டர், ராம் = 36 மீட்டர்

 

அதெப்படி ? காம்பவுண்டின் மொத்த நீளம் 120 மீ தானே நீங்கள் கேட்கலாம். காம்புவுண்ட் சுவரின் இரு பக்கமும் பெயிண்ட் அடிக்க வேண்டுமல்லாவா? 
எனவே, 240 மீக்கான கணக்கிடல்தான் வேண்டும்.

 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2068423