சிமெண்டினை செக் செய்ய ஈஸி டிப்ஸ்...

23 ஜனவரி 2024   05:30 AM 14 ஆகஸ்ட் 2018   05:11 PM


சிமெண்டினை செக் செய்ய ஈஸி டிப்ஸ்...

ஒரு கட்டுமானத்தின் கட்டுமானச் செலவில் பெரும்பான்மையான விகிதம் சிமெண்டிற்காகத்தான் செலவிடப்படுகிறது. கட்டுமானத்தின் தரத்தினை உறுதி செய்வதும் நல்ல சிமெண்டுதான். அந்த சிமெண்ட் போலியானதாகவோ, தரமற்றதாகவோ இருக்கும்போது நமக்கு பெருத்த நட்டம் தான்.
 

வெவ்வேறு கட்டுமானப் பணிகளுக்கு ஏற்ற, தர நிலைகள் கொண்டு சிமெண்ட் கிடைக்கிறது. வீடு கட்டும் பணிகளுக்கு, சாதாரணமாக போர்ட்லேண்ட் சிமெண்ட் மற்றும் பொஸ்ஸலோனா சிமெண்ட் ஆகியன பயனாகிறது. போர்ட்லேண்ட் பொஸ்ஸலோனா சிமெண்ட்டில் பொஸ்ஸலோனா என்ற பொருள், கிளிங்கள் மற்றும் ஜிப்ஸம் ஆகியவற்றுடன் சேர்த்து அரைக்கப்படுகிறது அல்லது சாதாரண போர்ட்லேண்ட் சிமெண்ட்டுடன் இணைத்து கலக்கப்படுகிறது. இதுவே இவ்விரண்டு வகை சிமெண்ட்டுக்கும் உள்ள வேறு பாடாகும். இந்தியாவில் நெருப்பில் சுட்டு மாறாச் சுண்ணமாக்கிய களிமண் அல்லது எரிசாம்பல் பொஸ்ஸலோனாவே பயன்படுகிறது.

பொஸ்ஸலோனா சிமெண்ட்டின் குணங்கள் :

1. நீர் ஊடுறாத் தன்மையினை அதிகரிக்க வல்லது.

2. நீர் சேர்க்கை சூட்டைத் தணிக்கிறது.

3.காரப்பொருள் திறன் விரிவாக்கத்தை குறைக்கும்

4. ரசாயன சிதைப்பு எதிர்க்கும் தன்மையினை கூட்டவல்லது.

5. அதிர்வுகளை தாங்கும்.

6. கான்ரீட்டின் குழைவியல்பினை (plasticity) மேம்படுத்தி தனித்து அவை இறுகுவதிலிருந்து குறிப்பிட்ட மந்தத்(slump) தில் சாறு வடிதலையும் விலக்கும்.
வெள்ளை சிமெண்ட் என்பது சாதாரணமாக புழக்கத்திலிருக்கும் மற்றொரு வகை சிமெண்டாகும். பால் வெண்மை நிறத்துடன் விளங்கும், தோற்றத்தால் பெயர் கொண்ட இவ்வகை சிமெண்ட், போர்ட்லேண்ட் வகையில் சிறப்பு வகையாகும். வெள்ளை சிமெண்ட் செய்முறையில் மாவு நிலையிலே அல்லது பல்வேறான நிலையிலே கட்டங்களில் பல்வேறு பணிகளில் பயனாகிறது.

 

தரைப்பூச்சு (floor finish) நிறைவு பணிகளுக்கு பயனாகிறது. அது சலவை மொஸைக் ஒடுகள் மற்றும் டெர்ரேஸோ (terrazo) பணிகளுக்கும் உபயோகமாகிறது. மொஸைக் தரகளுக்கு, ஒடுகளுக்கு நடுவே இணைப்பு காரைப்பூச்சாக உதவும். அது பூச்சு வேலைகளுக்கும் காரைப் பூச்சு இல்லாத செங்கல் மற்றும் கல் கட்டுமான பணிகளிலும் (திறந்த வெளியில்) இணைப்பு காரைப் பூச்சாகவும் பயன்படும். மேலும் வார்ப்படும் செய்யப்பட்ட பொட்டிப்பு அல்லது அழகு வலைத்தட்டிகளுக்கும் உபயோகப்படுகிறது.

 

சிமெண்ட்டினை சோதித்தல்:

1. மாவுத்தன்மை (Fineness)

2. இரசாயனக் கலவை (Chemical Composition)

3. (காரையின்) விறைப்பாற்றல், மற்றும் அழுத்தம் தாங்கல் (Tensile and compressive Strength of mortar)

4. இறுகும் நேரம் (Setting Time)

5.நன்னிலை (Soundness)

6. நெருக்க அளவு (Consistances)
கட்டுமான பணிகளின் நுணுக்கத்தினைப் பொருத்து மற்ற சோதனைகள் செய்யப்படும். சில சோதனைகள் களத்திலும் (site) 
மற்றவை சோதனை சாலைகளிலும் செய்யப்படும்.
களத்தில் கீழ்க்கண்டவாறு சோதிக்கப்படும்

 

1. வண்ணம் வெளிர்பச்சை கலந்த சாம்பல் நிறம்.

2. விரல்களின் இடையே வைத்து தேய்க்கும்போது அதன் மாவுத் தன்மையினை உணரலாம்.

3. சிமெண்ட் குவியல் அல்லது மூட்டையின் உள்ளே கை நுழைத்தல் குளுமையான உணர்வு ஏற்படல் வேண்டும்.

4. ஒரு சிறு அளவு சிமெண்ட்டினை எடுத்து தண்ணீர் உள்ள வாளியில் போட்டால், அது நீரினில் மூழ்கிட வேண்டும். மிதக்கக் கூடாது.

5. சிமெண்ட்டை நீரில் குழைத்து கெட்டிக் கூழாக செய்து சிறு கனமான கண்ணாடி துண்டின் மேல் வைத்து நீரினுள் 24 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்த பின் அது கெட்டியாக வேண்டும் விரிசல் ஏற்படக்கூடாது.

6. சிமெண்ட், மணல் இவற்றை 1: 6 என்ற விகிதத்தில் கலவையாக செய்து 75 மி.மீ x 75 மி.மீ. அளவுள்ள சிறு செங்கல் போன்று தயார் செய்து, பின்னர் 3 நாட்கள் நீரில் ஊற வைக்க வேண்டும்.

இதில் நல்ல சிமெண்ட் ஆக இருப்பின் அச்சிறு செங்கல் போன்றதை உடைப்பது சிரமமாக இருக்கும். மேலும். அதை தூளாக்குவதும் சிரமமே. இவ்விதமாக தோரயமாகவும் சிமெண்ட்டின் வலிமையினை கண்டறியலாம். அச்சிறு செங்கல் போன்றவற்றின் சரியான விறைப்பாற்றல் தன்மையினை சோதனைச் சாலைகளில் கண்டறியலாம்.

 

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 98417 43850

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067038