அடுக்குமாடிகளில் வசிக்கும் பெற்றொர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாக்க செய்ய வேண்டியதும்.., அடுக்கு மாடிகள் கட்டும் பில்டர்கள் செய்ய வேண்டியதும்...

23 ஜனவரி 2024   05:30 AM 13 ஆகஸ்ட் 2018   01:12 PM


‘இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்பார்கள்.  ஆனால் நகரங்கள் எங்கு வாழ்கிறது தெரியுமா? அடுக்கு மாடிகளில் தான்.ஒரு நகரம் வளர்ச்சியடைந்த நகரம், பிஸியான நகரம், படித்தவர்கள் பணக்காரர்கள் வாழும் நகரம் என்பதற்கு அடையாளமாக இருப்பது அடுக்கு மாடிகளும், அபார்ட்மெண்டுகளும் அதில் வசிக்கும் மக்களும் தான்.

மக்கள் தனி வீடுகளில் வசிப்பதை விட அபார்ட்மெண்டுகளில் வசிப்பதையே கெளரவமாக நினைக்கத் தொடங்கி இருக்கும் கால கட்டம் இது.  அதனால் தான் தமிழ்நாட்டில் உள்ள மொத்த பில்டர்களில் 50% பில்டர்கள் சென்னையில் உள்ளனர்.  தமிழ்நாட்டில் விற்கப்படும் மொத்த ஃபிளாட்டுகளில் 65% வீடுகள் சென்னையிலேயே கட்டப்படுகின்றன.

தன்னுடைய உடமைகளுக்கான பத்திரமான மற்றும் பாதுகாப்பான வசிப்பிடம் என்பது ஃபிளாட் வீடுகளில் தான் இருக்கிறது என பொதுமக்கள் உறுதியாக நம்பினர்.  ஆனால், வெளியே கொள்ளைக்காரர்களிடமிருந்து தங்கள் உடமைகளைக் காக்கத் தெரிந்த மக்களுக்கு  குடியிருப்பிற்கு உள்ளேயே கிடக்கும் கொள்ளைக்காரர்களை பற்ஷீ அறியாமல் இருக்கிறார்கள்.  இந்த கொள்ளைக்காரர்கள் கொள்ளை அடிப்பது தங்க நகைகள், பணத்தை அல்ல., அதையும் விட மேலான நம் குழந்தைகளை தான்.

சென்னை அயன்புரத்தில் ஒரு அபார்ட்மெண்ட் வீட்டில் வசிக்கும் ஒரு குடும்பத்தின் இளைய மகளை 11வயது சிறுமியை அந்த அபார் மெண்டில் பணிபுரியும் ஊழியர்களே மாற்றி மாற்றி பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்கள் என்கிற செய்தியை கேட்டபோது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நெஞ்சம் பதை பதைத்துப் போனது.

உள்ளே பணிபுரியும் ஊழியர்களே அங்கு வசிக்கும் பெண் குழந்தை சீரழித்திருப்பது என்னும் கொடூரச் சம்பவம் ஆண்டாண்டு காலம் இதுவரை நாம் வாழ்ந்த ப்ளாட் சிஸ்டம் என்கிற கான்செப்டை பொடி பொடியாக்கிவிட்டது.
 

‘அபார்ட்மெண்ட் வீட்டுக்கு காவலாளிகளே சிறந்த பாதுகாப்பு, ஆங்காங்கே உள்ளே சிசிடிவி கேமரா எல்லா அசைவுகளையும் கண்காணிக்கும்’ என்கிற  நம்பிக்கை தப்பிதமாகி விட்டது.

சிசிடிவி கேமராவைக் கையாளும் செக்யூரிட்டிகளே வேண்டுமென்று பழுதடையச் செய்து, அல்லது கேமரா பார்வை படாத இடத்திற்குக் குழந்தைகளை கொண்டு சென்று போன்ற செயல்களில் ஈடுபட்டால் என்ன செய்வது?

ஒரு வேளை கேமிராவில் பதிவான காட்சிகளைக் கூட அழிக்கும் வேலையை கூட அச்சம்பவத்தில் ஈடுபடும் காவலாளிகள் செய்ய முடியுமே?

அயன்புரம் பாலியல் பலாத்கார சம்பவம் நாடெங்கும் உள்ள ஒட்டு மொத்த அபார்ட்மெண்ட் களின் குழந்தை கள், பெண்கள், முதியோர்களின் பாதுகாப்பிலிருக்கும் ஓட்டைகளை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டது.
தனித்தனி தீவாக பக்கத்து வீட்டு உரிமையாளர்கள் பெயர் தெரியாமல் வாழ்ந்து வந்த ஃப்ளாட் வாசிகள் விக்கித்து போய்யிருக்கிறார்கள்.  மேற்படி சம்பவத்தில் லிப்டில் தான் முதன் முதலாக பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. அப்படியயனில் லிஃப்டில் சிசிடிவி காமெராக்கள் ஏன் பொருத்தப்படுவதில்லை? என்ற கேள்வியும்.,  ஒரு அபார்ட்மெண்ட் அல்லது டவுன்´ப் புராஜெக்ட்டில் பணிபுரியும் ஊழியர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? என கேள்வியும் நம்முன் எழுகிறது.


பல அடுக்குகளையும் வீடுகளையும் கொண்டிருக்கும் ஒரு குடியிருப்பைக் காவல் காக்கும் வேலையில் அமர்த்தப்படுபவர்கள், அதற்குத் தகுதியானவர்களாக இருக்கிறார்களா, பொறுப்புமிக்க அந்தப் பணிக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படுகிறதா என்பது பற்றியெல்லாம் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் எத்தனை பேருக்கு அக்கறை இருக்கிறது என்று தெரியவில்லை. அதில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும்பாலும் ஒரே இடத்தில் பணி புரிவதில்லை. ஒப்பந்தப் பணியாளர்கள் என்பதால் அவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வௌ;வேறு இடங்களுக்கு மாற்றப்படுகிறார்கள். ஆனால், சிலர் அவர்களை ஒப்பந்த செய்த நிறுவனங்கள், 
முறையாக ஊதியம் தராததால் வேலையைவிட்டு நின்றுவிடுவார்கள். 

அப்படி யாராவது திடீரென்று வேலையிலிருந்து நின்றுவிட்டால் அடுத்த சில நாட்களுக்குப் பகல் நேரம் இருப்பவரே இரவுப் பணியையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். சில நேரம் இது வாரக் கணக்கிலும் தொடர்;கிறது. 24 மணிநேரமும் ஒருவரை வேலை பார்க்க வைப்பதில் உள்ள மனித உரிமை மீறலைத் தாண்டி அவர் அந்த வேலையை எப்படி ஒழுங்காகப் பார்க்க முடியும?; என்ற பாதுகாப்பு சார்ந்த ஆபத்தும் இதில் இருக்கிறது.
 மேலும் இவர்கள் என்ன மாதிரியான தகுதியுடன் இந்தப் பணிக்கு வருகிறார்கள்? யாராவது குற்றவாளி நுழைந்தால் அவர்களை இந்தக் காவலர்கள் எப்படிக் கையாள்வார்கள் என்ற கேள்விகளுக்கும் விடையில்லை. இவ்வளவு குறைந்த சம்பளத்துக்கு வேறு எந்த வேலையும் கிடைக்காத, வயிற்றுப்பாட்டுக்காக ஏதாவது வேலை பார்த்தே ஆக வேண்டிய சூழலில் இருப்பவர்கள்தாம் வருவார்கள். ஒப்பந்ததாரர் நேரில் பார்க்காமல் தொலைபேசியில் மட்டும் பேசி அந்தப் பகுதியில் வசிக்கும் முதியவர்களை இதுபோன்ற வேலைகளில் அமர்த்துவதும் உண்டு.

இது போன்ற இரவுக் காவல் பணி பார்ப்பவர்கள் 10 மணிக்கு மேல் போர்வையை விரித்துத் தூங்கிவிடுவார்கள். இதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அவர்களுக்கு ரூ.4,000-ரூ.5,000தான் சம்பளமாகத் தரப்படுகிறது. அதுவும் ஒப்பந்ததாரரின் பங்கு போக மீதிதான் அந்தப் பணியாளருக்குத் தரப்படும்  பல இடங்களில் குடியிருப்புகள் ஒப்பந்ததாரருக்கு ஊதியத்தை அனுப்பிவிடுகிறார்கள். அவர்கள் அந்த ஊதியத்தில் பாதியை 
எடுத்துக்கொண்டு மீதியை மட்டுமே பணியாளருக்குத் தருகிறார்கள்.

குடியிருப்பைப் பொறுத்தவரை காவலர் என்ற பெயரில் ஒருவர் இருக்கிறார். அதற்குத்தான் அவருக்குச் சம்பளம். காவல் காப்பதற்கு அல்ல. எல்லாக் குடியிருப்புகளிலும் சில வீடுகளிலாவது நாள் முழுவதும் வீட்டில் முதியோர்களும் வீட்டு வேலை மட்டும் பார்க்கும் பெண்களும் இருக்கும் நிலை இருக்கிறது. இன்று குற்றங்கள் அதிகரித்திருக்கும் சூழலில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதும் கிட்டத்தட்ட இன்றியமையாததாக ஆகிவிட்டது. சிசிடிவி பொருத்திவிட்டாலும் 100மூ பாதுகாப்பை உறுதி செய்துவிட முடியாது என்பது வேறு விஷயம்.

ஆனால், இது போன்ற துரதிர்ஷ்ட சம்பவங்களை காரணம் காட்டி நாம் அபார்ட்மெண்ட் வாழ்க்கையை தவிர்க்க முடியாது.  ஏனெனில், நகர வாழ்க்கைக்கு அத்தியாவசிய அடிப்படை தளம் தான் அபார்ட்மெண்ட் வீடுகள் தான்.  நகரின் மையத்தில் குறைந்த விலையில் சொந்த வீடு வேண்டும் என்றால், அபார்ட்மெண்ட் வீடாக நம்மால் எளிதில் புறக்கணிக்க முடியாது.

எனவே, இது போன்ற வீடுகளில் வசிக்கும் போது நம்முடைய குழந்தைகள், மனித மிருகங்களிடமிருந்து காத்திட இவற்றை பின்பற்றுவோம்.
1. ஊழியர்கள் பற்றி குழந்தைகள் சொல்லும் சிறு சிறு புகார்களை செவிமடுங்கள்.
2. குழந்தைகள் வீட்டில், வெளியில் எங்கிருந்தாலும் உங்கள் கண்காணிப்பிலேயே இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
3. குழந்தைகள் பொதுவாக தனக்கு எதிராக எந்த தீங்கு நடந்தாலும் வெளியில் செல்லத் தயங்குவார்கள்.  எனவே அவர்கள் முக வாட்டத்தைக் கண்டு நாம் தான் அவர்களை அணுகி பேச வேண்டும்.
4. குழந்தைகளை தொட்டு பேச யாரையும் அனுமதிக்க கூடாது.  தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள், ஊழியர்கள் என எவரிடமும் தனியாக உங்கள் குழந்தைகளை விடாதீர்கள்.
5. சிசிடிவி கேமரா புராஜெக்டின் எல்லா பகுதிகளையும் கவர் செய்திருக்கிறதா? என உறுதி செய்து கொள்ளுங்கள்.
6. கேமரா பழுதடைந்தால் உடனே அதை சரி செய்யும்படி அசோசியேrனிடம் அஷீவுறுத்துங்கள்.
7. வித்தியாசமான நபர்கள், வித்தியாசமான சம்பவங்கள் நடந்தால் அது பற்ஷீ உடனுக்குடன் மற்றவர்களிடன் கலந்தாலோசியுங்கள்.
8. கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அதன் காட்சி பதிவுகளை கையாளும் உரிமையை செக்யூரிட்டி நிறுவனங்களிடம் கொடுக்காமல் வீட்டின் உரிமையாளர்களே வைத்திருக்க வேண்டும்.
9. பராமரிப்பு பணி ஊழியர்கள், காவலர்கள், தோட்டக்காரர்கள் என எல்லோருமே வெகு எளிதாக ஒரு வளையத்துள் இணைந்து கொள்வார்கள்.  அவர்களுக்குள் ஒற்றுமையாக செயல்பட்டு தாங்கள் செய்யும் தவறுகளை மறைக்கப் பார்ப்பார்கள்.  எனவே அவர்களிடன் விழிப்பாக இருங்கள்.
10.  இந்த கயவர்களுக்கு பயந்து மட்டுமல்ல, அவர்கள் தனியே விளையாட விடும் போது, வாட்டர் டேங்கில் மூழ்குதல், படிக்கட்டில் சறுக்கல், தரையில் விழுதல் போன்ற வீட்டு விபத்துக்களில் சிக்க வாய்புண்டு.

பில்டர்கள் செய்ய வேண்டியவை:

புராஜெக்டை கட்டி முடித்த பின் அதை அந்த வீட்டு உரிமையாளர்கள் சங்கத்திடம் ஒப்படைத்து விடுவதோடு நம் கடமை முடிந்து விடுவதில்லை.  அங்கே பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்கள், காவலாளிகளை நம் நிறுவனத்தின் கட்டுப் பாட்டில் கொண்டு வந்து மாதம்  ஒரு முறை அவர்களை ஆடிட் செய்து, புகார்கள் ஏதேனும் இருப்பின் அவர்க ளை எச்சரித்து கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளையும் செய்யலாம்.

மேலும், அவர்கள் சார்ந்திருக்கும் நிறுவனங்களோடு தொடர்பு வைத்து விட்டு உரிமையாளர்கள் பாதுகாப்பு குஷீத்து அடிக்கடி பேச வேண்டும்.

ஏனெனில் விற்பனைக்கு பிந்தைய சேவை என்பது கட்டிய வீட்டை மட்டும் பார்த்துக் கொள்வது அல்ல, அங்கு வசிக்கும் மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வது தான்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067033