பல ஆண்டுகளாகவே எஃகுக் கட்டுமானங்களில் (Steel Construction Structures including Rood Trusses) எல் வடிவ தகடு (‘L’ angles) ,I வடிவ விட்டங்கள் (I shaped Beams / Girders) “சி” வடிவ உறுப்புகள் (Channels) முதலியவற்றையே பெரிதும் பயன்படுத்தி வருகிறோம்.
அதன்பின்பு வட்ட வடிவக் குழாய் (Circular / Tubular sections) களையும் பயன்படுத்தினோம்.
இவற்றை இணைத்திட-பிணைத்திட இரும்புப் பட்டைகள் / தட்டைகள் (Gusset Plates), (Bolts & Nuts) முதலியவற்றையே பயன்படுத்தினோம்.
2000 / 2005 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் Pre Engineered Buildings (PEB) கட்டுமானங்கள் பெரிய பெரிய தொழிலகக் கூடங்களுக்குப் பயன்பாட்டுக்கு வந்தன. இத்தகைய PEB Structures பெரும் கார்ப்பொரேட் கட்டுமான நிறுவனங்களே, பல நிபந்தனைகளோடு கட்டுகின்றன.
எனினும் சிறிய - நடுத்தர தொழிற்சாலை மற்றும் எஃகுக் கட்டுமானங்களை சிறப்பாகவும் சிக்கனமாகவும் கூடுதல் உறுதியுடனும் கட்டிட மேம்பட்ட மிகு வலிமையுடைய எஃகு நிறுவனங்கள் உற்பத்தி செய்து சந்தைப் படுத்தியுள்ளன. அவை TATA Structura - RHS (Rectangular Hollow Sections) - SHS (Square Hollow Sections) என்ற பெயரில் கிடைக்கின்றன.
JSWŠ-நிறுவனமும் RHS, SHS & circular எஃகு உறுப்புகளை விற்பனை செய்கின்றன. இதைப்போலவே Metco Roof Company என்ற நிறுவனம் metco Lip channel sections - especially for Purlins உற்பத்தி செய்து விற்கின்றன. வட்ட வடிவக குழாய்கள் / / channel sections (ISLC, ISMC) போன்றவற்ஷீன் எடையை விட 50% குறைவானவை.
RHS/SHS உறுப்புகள் L- angles, Pipes, Channels உறுப்புகளை விட 25% முதல் 40% எடை குறைந்தவை அத்துடன் இவற்றின் தரம் Fe-310 மற்றும் Fe-355 கூடுதல் வலிமை உடையவை (மற்ற IS-MS sections - Fe250 திறன் உடையவை) RHS / SHS / metco lip channel இவற்றின் இணைப்பை Fillet weld மூலமாக (எந்த விதமான Gusset Plates, Bolts & Nuts இல்லாமலே) எளிதாக இனைக்கலாம். வேலையும் குறைவு; எஃகு எடையும் குறைவே. எனவே, இனிவரும் காலங்களில் எஃகுக் கட்டுமானங்களுக்கு Tata Structura / JSW-SHS&RHS உறுப்புகளையும் metco lip channels களையும் பயன்படுத்திச் செலவைக் குறைத்திடுக.
www.buildersline.in
Buildersline Monthly
Subscribe : 88254 79234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066909
|