1. மிகச் சரியான அடித்தளத்தை முறையாக அமைக்காமை.களிமண்ணாக இருந்தால் அடிபெருத்த குத்துத்தூண் கழி.மணலாக இருந்தால் மேம்படுத்தி (Ground Improvement with Quary Dust : Gravel Mix 1:3, semidry & well compacted) தனித்த பரவல் அடித்தளம் (Isolated Footing) செஞ்சரளை மண் / சுக்காம் பாறையாக (Gravell Soil, Soft Disintegrated rock) இருந்தால் தனித்த பரவல் அடித்தளம்.
குறிப்பாக Trenched load bearing wall foundation without intermediate RC column at every 4.50m Interval - that too with Brickmasonry கூடாது. (அதுதான் மேலே உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததற்கு முக்கிய காரணம். கடற்கரை ஓரங்களில் இத்தகைய சுற்றுச்சுவர்கள் புயற் காற்றடிக்கும் போதே இடிந்து விழுந்து விடும்).
2. அடித்தளத்தின் மீது குறைந்தது 4.50 மீட்டர் இடைவெளியில் உறுதியூட்டப்பட்ட காங்கிரீட் தூண்கள் (1.50மீ / 2.40மீ / 3.00 மீட்டர் உயரத்திற்கு (தேவைக்கேற்ப) அமைக்கப்பட வேண்டும்.
3. சுவர்ப்பகுதியை(Panel well) - செங்கற்களை கொண்டு கட்டாமல் (வலிமை குறைந்தவை - தண்ணீரை உறிஞ்சுபவை - கிடைமட்டக்காற்று / நிலநடுக்க விசையைத் தாங்காதவை) - மாற்றாக முன்வார்த்த கெட்டிக் காங்கிரீட் கட்டுகள் (Precast Solid concrete Block Masonry in CM 1:4) கொண்ட சுவர்களால் கட்டப்பட வேண்டும்.
4. சுற்றுச்சுவரின் மேல்மட்டத்தின் உறுதிபெறு காங்கிரீட் விட்டம்(Coping beam in RC Concrete) போடப்பட்டு எல்லாத்தூண்களும் இணைக்கப்பட வேண்டும்.
5. சுற்றுச்சுவரின் உயரம் 3.00 மீட்டர் உயரத்திற்கு மேலிருந்தால் (Say 4.50m / 5.00m / 6.00m) தொடர் இடைவிட்டம் (2.40மீ / 3.00மீ) உயரத்தில் போடப்பட வேண்டும்.
6. நிலத்திற்கு மேலுள்ள சுவர்ப்பகுதியை ஒரே நேர்கோட்டில் கட்டாமல் - பிரித்து பிரித்து Staggered ஆக இருக்குமாறு கட்டினால் வலிமையுடனும் கிடைமிட்டவிசையினைக் கூடுதலாகத் தாங்கமைப்பிலும் அமையும் (இணைத்துள்ள வரைபடத்தைப் பாருங்கள்).
7. சுற்றுச்சுவரின் நீளம் 30 மீட்டருக்கு மேலிருந்தால் 22.50 மீட்டர் இடைவெளியில் விரிவு இணைப்புகள் (Expansion Joints with Supreme duraboard HD100) விடப் பட்டு பொருத்தப்பட வேண்டும்.
- From Builders line Monthly
www.buildersline.in
For SUbscribe pl call : 88254 79234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066842
|